POST: 2018-06-22T10:25:17+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-243
—————

12-11-77க்கும் 20-11-77க்கும் இடைப்பட்ட நாட்களில் தமிழகம், ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய தென் மாநிலங் களைப் பேரல்லல்களுக்கு உட்படுத்திய புயல், வெள்ளக் கொடுமைகள் பற்றிப் புலவர் பெருமக்கள் பலர் பாடிய செய்யுட்கள் உங்கள் பார்வைக்கு…. (பாடல்-4)

உள்ளமுருக்கும் வெள்ளமும் காற்றும்
==================================
(தவத்திரு தி.செ.முருகதாச அடிகள்)
———————————————————
வெண்பாக்கள்
********************

சீரியலும் நந்தமுயர் செந்தமிழ் நாட்டினில் வாழ்
யாரிதுபோல் மக்க ளிருந்துயரம் – சேரிழப்பு
காண்டாரு மில்லை; கழறிடக்கா தாற்கேட்டுக்
கொண்டாரு மில்லையுண்மைக் கூற்று.

கூற்றுவன்வந் தாலுயிரைக் கொள்வான்; கொடியபுயற்
காற்றுடனே வெள்ளம் கடுகியதால் – தேற்றும்
வகையறியா தின்னல் வயப்பட் டிறந்தோர்
தொகையறிவார் யாவருளார் சொல்.

சொல்லா லளவிட்டுச் சொல்லயம் னுந்தெரியான்
வல்ல சமனுமிந்த வாறாகப்-பல்லுயிரைப்
பற்ப லிடத்திற் பலிகொண்டா னே! யிதனைச்
சொற்பனத்தும் எண்ணினருண் டோ !

உண்டோ இழந்த உயிர்கட் குறுங்கணக்கு?
உண்டோ இழந்த உடைமைக்கண்- உண்டோதன்
கண்ணீர் விடுத்தழுவார் கட்காம் கணக்குண்டோ
தண்ணீரில் மாய்ந்தார் தமக்கு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *