மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-250
—————
புரட்சித்தலைவர் தொடங்கிய
மக்களைச் சந்திக்கும் திட்டம் – (30.09.1977)
/////////////////////////////////////////////////////////////////////////////////
(பகுதி-2)
/////////////////
6. அரசு என்பது அதிகாரிகள் – மக்கள் – அரசாங்கம் என்ற மூன்று கால்களைக் கொண்ட முக்காலியைப்போல. மக்கள் முறையிடுவார்கள், அதிகாரிகள் செயற்படுவார்கள், அமைச்சர்கள் வழிப்படுத்துவார்கள் என்பதுதான் ஒரு அரசாங்கத்தின் அமைப்பு. ஒரு கால் ஒடிந்தாலும் முக்காலி விழுந்துவிடும்.
7. நீதிக்குக் கண்ணில்லை , எனவே அது ஏழைகளை எளியவர்களைச் சரியாகப் பார்ப்பதில்லை. நியாயத்துக்குக் காலில்லை. எனவே, அது வினாவாக அடித்தளத்து மக்களை நோக்கி நடப்பதில்லை. சமுதாயத்துக்கு வாயில்லை, எனவே தன் குறைகளை அது வாய்விட்டுச் சொல்வதில்லை. நிருவாகத்துக்குக் காதில்லை, எனவே குறைகளைப்பொறுமையாக கேட்க முடிவதில்லை என்ற கேலிக்குற்றச்சாட்டுக்களுக்கு இனி இடமில்லை என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் அமைகின்றது.
8. பழைய காலத்து வேந்தர்கள் ஆராய்ச்சி மணிகளைக் கட்டியிருந்தார்களாம். இரவானாலும், பகலானாலும் மனிதர்கள் என்றில்லை, பறவையானாலும், கறவையானாலும் மணியடித்தால் அரசன் தீர்ப்பு வழங்க ஒடி வருவான் என்பதைப் படித்திருக்கிறோம். இப்போது எல்லோரும் இந்த நாட்டு மன்னர் என்று ஆகியிருக்கும்போது எல்லோருக்கும் நெறிமுறைகளைக் காப்பதில் பங்கு உண்டு என்பதை உணர வேண்டும்.

Add a Comment