“தர்மயுத்தம் என்பது அன்றாடம் நடப்பது. அரசியலில் பதவியில் இருப்பவர்கள் கூட அடிக்கடி சொல்வது தர்மயுத்தம் தான். ஆனால் அது தர்மமா? யுத்தமா? என்பது உண்மையிலேயே ஆராயவேண்டியது. தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து வருவது அறம் என்ற சொல் தான். அறம் இல்லாமல் அரசு, பொருள் மற்றும் இன்பம் இல்லை. தமிழின் சாற்றை பிழிந்தால் சொட்டுகிற தேன் துளி அறம் தான்.
தமிழ் ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்துவதாலும், தமிழறிஞர்கள் ஆராய்ச்சி செய்வதாலும் தமிழ் வளரும். ஆனால் என்ஜினீயர்கள், டாக்டர்கள், கட்டிட வல்லுனர்கள், கலைத்திறம் வாய்ந்தவர்கள் என்று எல்லோரும் எப்போது தமிழை வளர்க்க தொடங்குகிறார்களோ, அதுதான் வளர்ச்சி. அதுதான் நமக்கு மகிழ்ச்சியை தருவதாகும்.”
—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment