பாரதித் தொண்டில் பழுத்த பழம்
===========================
உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் பாரதி என்னும் படிக்கே ஆட்பட்டு வாழ்ந்த, எள்ளளவும் தன்னலமில்லாத, பெயரைச் சொல்லும் போதெல்லாம் பெருமிதம் தவழ்ந்தபடி வாழ்ந்த முதுபெரும் கிழவராய் வாழ்வு முடித்த அண்ணல் பாரதி சுராஜை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சம் கரைகிறது.
கை நடுங்கியபோதும்கூடக் கட்டுரைகளை எழுதி வந்த கலைத்திறம் வாய்ந்தவர்.
பாரதி கலை இலக்கிய மன்றம் அவர் பெற்ற அருமந்தப் பிள்ளை. வாழ்ந்தவரை தமிழுக்காகவும்,பாரதிக்காகவும் உழைத்துத் தெளிந்த சந்தனமாய் முடிந்த அண்ணல் சுராஜ் அவர்களை எண்ணி எண்ணிப் போற்றுகிறேன்.
இப்படிச் சிலர் வாழ்ந்ததுதான் நம் இனத்திற்குப் பெருமை சேர்த்தது.
பொன் போல் ஒளிவிட்ட பாரதி திலகம் சுராஜ் நினைவென்றும் வாழ்க!
—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment