கலைஞர் 85ம் பிறந்தநாள் உரை – 03.06.2009
========================================
பத்மஸ்ரீ ஔவை நடராசன்
(பகுதி – 1)
—————-
எழுத்துலகத்தின் இமயமாகத் திகழ்ந்தபடி தமிழகத்தின் தன்னேரில்லாத முதல்வராகத் திகழும் அண்ணல் டாக்டர் கலைஞர் அவர்களே
மாண்புமிகு கல்வியமைச்சர் அவர்களே
இலக்கிய உலகத்தில் என்றும் நந்தா விளக்குகள் என்று நாடு போற்றுகிற நண்பர் ஜெயகாந்தன் அவர்களே, காவியக்கவியரசர் நண்பர் வாலி அவர்களே,
நேற்றுகூட ஒரு நண்பர் சொன்னார், தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் போல ஒரு நல்லினம் தொடங்கியிருக்கிறது என்றால், அது நல்லியாகத்தான் இருக்க முடியும் என்று பாராட்டைப் பெற்றிருக்கிற நல்லி அவர்களே,
எனக்கு வழங்கப்பட்டிருக்கிற இந்தச் சில மணித்துளிகளுக்குள் நான் சிலவற்றை நினைவு கூறலாம் என்றிருக்கிறேன்.
இங்கிலாந்து நாட்டு தலைமையமைச்சர் மேக்மில்லன் என்பவர், ஒரு புத்தகப் பதிப்பாளரின் மகன். அவர் இங்கிலாந்து நாட்டுக்கு தலையமைச்சராக வந்த பிறகு பதிப்பாசிரியர்களும், எழுத்தாள பெருமக்களும், இங்கிலாந்து நாட்டில் நோபல் பரிசு பெற்றவர்களும் அவருக்கு ஒரு வரவேற்பு தந்தார்கள். அப்போது மேக்மில்லன் ஒரு தொடர் சொன்னார், “நான் ஒரு பதிப்பாசிரியருக்கு மகனே தவிர, ஒரு படைப்பாசிரியராகத் திகழும் வாய்ப்பு இல்லையே என்று வருந்துவதாக” சொன்னார்.
தமிழகத்தில் பதிப்பாசிரியர், படைப்பாசிரியர், உரையாசிரியர், கதையாசிரியர், கட்டுரையாசிரியர், கருத்துக்களை வலியுறுத்திக் காட்டுகிற ஆசிரியர் என்று ஆசிரியர்களுக்குத் திலகமாகத் திகழ்கிற ஒரு பெருந்தகை இந்திய நாட்டிலேயே டாக்டர் கலைஞர் அவர்கள்தான்.

Add a Comment