புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2018
===========================================
இலக்கியத்துறையில் சாதனையாளர் விருதைப் பெறுபவர்,
கற்பி என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திரு.சிற்பி அவர்கள்.
பொள்ளாச்சி மண்ணில் இருந்து எழுந்து நிற்கும் இயல் தமிழ் சொல்லாட்சி.
வானம்பாடி இலக்கியத் தோப்பில் இருந்து
தோன்றியவர்.
அகவை எண்பதை தாண்டியும்
பன்முக பனுவல் படைத்துக்கொண்டிருப்பவர்.
“பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியர்,
மொழிபெயர்ப்புத் திலகம்,
எங்கள் அருட்செல்வரின் கொடை,
பேராசிரியர் அவர்களுக்கு
நாங்கள் இந்த இடத்தில் விருது வழங்குவது என்பது,
அவருடைய செம்மாந்த பணிக்கு நாங்கள் செய்கின்ற தலைவணக்கம்.
புதிய தலைமுறை அதை மிக நேர்த்தியாக செய்திருக்கிறது.
மொழிபெயர்ப்புக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் எங்கள் பேராசிரியருக்கு எங்களுடைய பணிவான வணக்கம்.
—– முனைவர் ந.அருள்,
இயக்குநர் (மொழிபெயர்ப்புத்துறை),
தமிழக அரசு

Add a Comment