POST: 2018-09-17T09:52:12+05:30

தந்தை பெரியார் 140 ஆம் பிறந்தநாள்
==================================

அவர்தாம் பெரியார் !
===================

காலங் காலமாகப் படிந்திருந்த காரிருளை மூலை முடுக்கு , இண்டு இடுக்குகளில் ஒளிந்திருந்த நச்சுப் பூச்சுகளைத் தன்னந் தனியாக நின்று தள்ளாடிய பருவத்திலும் தடுமாறாமல் அழித்தொழித்த ஆற்றலின்
முழு வடிவம் தான் பெரியார்.

பெரியார் இல்லாமல் இருந்திருந்தால் எத்தனைப் பெருங் கொடுமை ஏற்பட்டிருக்கும் . தம் தந்தை , தாய்க்கு வாய்க்காத வாய்ப்பும் வாழ்வும் தங்களுக்குக் கிடைத்ததை இன்றைய இளைஞர்கள் எண்ணிப் பார்த்தால் எத்தகைய பேராற்றல் கொண்ட பகுத்தறிவுப் பகலவனால் இந்த விடிவு நமக்கு வாய்த்தது என எண்ணிக்
கண் கலங்குவார்கள்.

பெரியார் புரட்சிப் பெருங்கனல், தன்மானம் பொங்கிய கடல் .

சீர்திருத்த விதையூன்றி, அறுவடையை நாம் காண வைத்த வான் புனல்

” தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்”

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *