ஏ.என்.சிவராமன் நினைவுச் சொற்பொழிவு
============================================
தலைமை : முனைவர் ந.அருள்
——————–
நாள் : 16.09.2018
———-
இடம் :
————
விவேகாநந்தா குளிச்சாதன அறை,
பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகம்,
மயிலாப்பூர், சென்னை – 4.
உரைச் சுருக்கம் :
==================
ஏ.என்.சிவராமன் நினைவுச் சொற்பொழிவு
============================================
தலைமை : முனைவர் ந.அருள்
——————–
நாள் : 16.09.2018
———-
இடம் :
————
விவேகாநந்தா குளிச்சாதன அறை,
பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகம்,
மயிலாப்பூர், சென்னை – 4.
உரைச் சுருக்கம் :
==================
ஒப்பற்ற ஏ.என்.சிவராமன் அவர்களின் நினைவுச் சொற்பொழிவும், பண்பாட்டு திலகங்களாக விளங்கும் பெருந்தகை டி.வி.எஸ். லூகாஸ் நிறுவன மனிதவளத் துணைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்ற திரு.வெங்கட்ராமன் அவர்களே, மருத்துவமாமணி திருமதி. ஜாய்ஸ் திலகம் அவர்களே, அடக்கத்தாலும் ஆற்றலாலும் கலைமகள் ஆசிரியராகத் திகழும் அண்ணன் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்களே, நண்பர்களே, பெருமக்களே வணக்கம்.
நூற்றாண்டுப் பெருமையுடைய இந்து நாளிதழ் போலத் தமிழில் தினமணி ஒப்பற்ற நாளிதழாக ஒளிபெற்று மிளிர்கிறது. இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்குப் பாடுபட்ட மக்களை ஊக்கப்படுத்தியும் நாட்டுமக்களின் நாடி நரம்புகளில் சுதந்திர வேட்கையை ஊட்டிய தினமணியில் நாற்பதாண்டுக் காலம் ஆசிரியராக இருந்து தன்னைக் கரைத்துக்கொண்ட திரு.ஏ.என்.சிவராமன் அவர்களை இந்த நாடு என்றும் நன்றியோடு பாராட்டும்.
உலகச் செய்திகள், தலையங்கங்கள், உணர்வோட்டங்கள் எழுதினாலும் கணக்கன் என்ற புனைபெயரில் ஆண்டுதோறும் வெளிவரும் நிதிநிலை அறிக்கையை அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்து எழுதிய புள்ளிவிவரக் கட்டுரைகளை இப்போது எழுதுவதற்கு ஏ.என்.எஸ். அவர்களைப்போல எவருமில்லை. அருமை நண்பர் அந்த வேரில் பழுத்த பலாக்கனியாவார். பலாப்பழத்துக்கு முள்ளடர்ந்த தோளிருக்கும். முகமும் அகமும் மென்மையும் மேன்மையும் கொண்ட பழகுதற்கு இனிமையானவர் கீழாம்பூரராவார்.
நாமெல்லாம் வாழ்நாள் முழுவதும் கலைமகளுக்குச் சீடர்கள் தாம். ஆனால் கீழாம்பூர் கலைமகளுக்கே ஆசிரியராக விளங்குகிறார். தமிழ்க்கடல் கி.வ.ஜா வுக்கு பின்னர் அந்தப் பொறுப்பை அவர் தகுதியால் பெற்றிருக்கிறார்.
தமிழகத்தின் முகவரியை உலகத்துக்கு அறிமுகப்படுத்திய நிறுவனங்களில் உயர்ந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்றால் மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் என்றால் அது டி.வி.எஸ். நிறுவனம் தான். பள்ளி மாணவர்களில் பத்தாம் வகுப்பை நிறைவு செய்ய முடியாமல் போனாலும் அந்த இளம் பிள்ளைகளுக்குத் தொழிற் பயிற்சி தந்து திறனாளர்களாக மாற்றலாம் என்ற மந்திரத்தைச் செயற்படுத்தியவர் பெருந்தகை லூகாஸ் வெங்கட்ராமன் அவர்களாவார். என் தந்தையாருக்கு நெருங்கிய நண்பராகவும் அவர் விரும்பிய நூல்களைப் பெற்றனுப்பியதையும் அவர் எப்போதும் நெகிழ்ந்து குறிப்பிடுவார்.
ஆயுதப் பூசை முடிந்த மறுநாள் எங்கள் வீட்டிற்கு ஒரு பெரிய பரிசுப்பை சுமக்க முடியாத அளவுக்குத் தேங்காய், பழம், தின்பண்டம் வைத்து அவர் அனுப்பியதை நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது அறிவேன். நாங்கள் லூகாஸ் வெங்கட்ராமன் அவர்களின் பெயரைச் சொல்லி வாழ்த்தி விட்டுத்தான் அந்தத் தின்பண்டங்களை உண்போம் .
உழைப்பாலும் ஊக்கத்தாலும் நம்பிக்கையாலும் நாணயத்தாலும் பணி நேர்மையாலும் பலரோடு உறவு காட்டிய பரிவினாலும் எளியவர்களை உயர்த்த வேண்டும் என்ற உன்னதச் சிந்தனையாலும் அவர் ஓய்வு பெற்றுப் புகழுக்குரிய பெருமகனாகத் திகழ்கிறார்.

Add a Comment