POST: 2019-03-29T10:23:51+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================
(வாழ்த்து – 106)

கற்பதற்கு வாய்ப்பு !
=====================

ஔவை அருள் எழுதிய ‘தொல்காப்பியரைத் தொழுவோம்’ துணைக் கட்டுரை படித்தேன். பரிமேலழகர் தன்னுடைய உரை விளக்கத்துக்குத் துணையாக பல்வேறு பழந்தமிழ் நூல்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டியிருக்கிறார். அதிலும் ‘மலர்மிசை ஏகினான்’ என்ற குறளுக்கு ‘வாராக் காலத்தும்’ என்கிற நூற்பாவை எடுத்துக் காட்டிய விதம் அருமை. பண்புடைமையை விளக்க வந்தவர், ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ என்று கலித்தொகையிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பார். அவ்வளவு செறிவான உரையில் சிறு குறைகள் இருக்கலாம். அதை மறுத்துக் கூறவும் உரிமையுண்டு. இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகளின் மூலம் திருக்குறளின் பொருள் சிறப்படையும்; தொல்காப்பியம் கற்பதற்கும் வாய்ப்பு‘ ஏற்படும்.

….. மா.பாரதிமுத்துநாயகம்,
விக்கிரமசிங்கபுரம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *