உகரம் ஏப்ரல் – 2019 இதழில் வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்கள் குறித்த வாழ்த்துப் பாடல்
================================================
உமியையும் வைரமாக்கும் உன்னதர் வாழீ, நீடூழி!
****************************************************************
அறிஞர்கள் நல்லோர் உண்டே
அறிஞர்கு அறிஞ ராக
அறிவளர் செம்ம லாகி
நிலைத்தவர் சிரரே. அன்னார்
பொறிகளை அடக்கி ஆளும்
புண்ணியர்! அவர்க ளுள்ளே
செறிவுடைத் தலைமை யாளர்
அவ்வை நடராச னாரே!
வரலாற்றுப் பெட்டகம் போல்
வளருலகச் செய்தி சொல்வார்!
இரவலர் தம் பசியைப் போல
எப்போதும் நூல்கள் கற்பார்!
சிரம்போன்ற தலைவர்கள்தம்
சீர்மையுள் கலந்த போதும்…
பரமனின் பார்வையைப்போல்
பலரையும் அரவணைப்பார்!
தமிழர்கள் பெற்ற பேறு
தகுதிக்கோர் சால்பின் வீறு!
அமிழ்தமும் ஈடாகாத
அவர் பேச்சோ, எழுச்சி ஏறு!
உமியையும் வைரம் ஆக்கும்
உன்னத இதயம் பெற்ற
நமின் அவ்வை நடராசன் தாம்
நன்றாயுள் ஓங்கி வாழி! நீடூழி!
– பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

Add a Comment