உரிய நேரத்தில் உயரிய கட்டுரை !
================================
டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய ‘தனிமை, சேய்மை – மனிதர்களை ஒதுக்க அல்ல!’ கட்டுரை (27.03.2020) படித்தேன். உரிய நேரத்தில் உரியவர் சொன்ன உயரிய கட்டுரை. தீண்டல் உடற்க்கு இன்பம் என்று கருதிய இனத்தை கண் திறக்க வைக்க வேண்டும்.
சமக இடைவெளியைக் குறிக்கும் வகையில் கட்டுரையாளர் சுட்டிக்காட்டிய சமூகச் சேய்மை என்ற சொல்லாக்கம் பொருத்தமானதாகும்.
நூறாண்டுகளில் நச்சுயிரிக் கொடுமைகள் உலக நாடுகளில் நிலவியதை கட்டுரையில் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அறிவார்ந்த சிந்தனை. அச்சம் போக்கும் வகையில் நம்பிக்கை வழங்கும் கட்டுரையை வெளியிட்ட தினமணிக்கு என் பாராட்டுகள்.
.. ஔவை நடராசன்
தினமணி – 03.04.2020

Add a Comment