POST: 2020-04-09T11:04:03+05:30

நேற்றைய நினைவு…

இராணி வாராந்தரி – 12.04.1987
==========================

ஆக்க வாரீர் அறிவியல் தமிழ்!
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

….. முனைவர் ஔவை நடராசன்

இந்த சொற்களை நீங்கள் படித்தால் மட்டும் போதாது. எழுத்திலும், பேச்சிலும் பயன்படுத்தி, வழக்கிலும் கொண்டுவர வேண்டும்.
திட்டமிடுவோம்!

ஆங்கில மொழியில் 3 இலட்சம் சொற்கள் இருக்கின்றன. தமிழ் அகராதியிலோ ஒன்றரை இலட்சம் சொற்கள்தான் உள்ளன. எனவே, ஆங்கிலத்தில் உள்ள அத்தனை சொற்களுக்கும் தமிழில் சொற்கள் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

எடுத்துக்காட்டாக, திட்டம் என்பதற்கு ஆங்கிலத்தில் “பிளான்”, “புரொஜக்ட்”, “ஸ்கீம்”, “சிஸ்டம்” என்ற சொற்கள் வழங்குகின்றன. இவை எல்லாவற்றையும் தமிழில் “திட்டம்” என்றுதான் சொல்லுகிறோம். காலப்போக்கில்தான் இவற்றுக்குத் தமிழில் சொற்கள் தோன்ற வேண்டும்.

“விண்டோ”, “வென்டிலேட்டர்” இரண்டுமே காற்றுப் போகும் வழியைக் குறிக்கும் சொற்கள். அவற்றுக்கு “சாளரம்”, “காலதர்” என்ற சொற்களை பேராசிரியர் இரா.பி.சேதுப்பிள்ளை பயன்படுத்தினார். இதுபோன்று, பழைய சொற்களை மீண்டும் நாம் வழக்குக்குக் கொண்டு வந்தால், நிறையச் சொற்கள் கிடைக்கும்.

சாலையில் சில இடங்களில் வேகத்தைக் கட்டுப்படுத்த மேடு அமைக்கிறார்கள். அதை “ஸ்பீடு பிரேக்கர்” என்கிறார்கள். இதை “வேகத்தடை” என்று மொழிபெயர்க்கிறார்கள். அதைவிட, “தடை மேடு” என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.

“பெடடோ” வைப் பார்த்த ஒரு தமிழ்ப் பெண், அதன் வடிவத்தைக் கொண்டு “உருளைக் கிழங்கு” என்று சொல்லியிருக்க வேண்டும். புதிய கலைச்சொல்லாக்கத்திற்கு இதுவும் ஒரு வழி.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *