நேற்றயை நினைவு
==================
கலைமகள் இதழ் – 01.11.1978
==========================
புத்தொளி !
***************
– (டாக்டர் ஔவை நடராசன் )
இந்திய நாடு விடுதலை அடைந்து முப்பதாண்டுகள் முடிந்துள்ளன. அதனால் வாழ்விலும், அன்றாட அலுவல் நடைமுறையிலும் உரிமையோடு செயற்படுகின்ற வாய்ப்பினை நாம் பெற்றுள்ளோம். எல்லோரும் தமக்கேற்ற உரிலை. மகளைப் பெறுவதும், எல்லா நிலைகளிலும் எல்லோரும் சரி நிகராக நடத்தப் பெறுவ தும் விடுதலை வாழ்வின் விளைந்த வெற்றியாகும். ஆகையால் தான் உரிமை மலர்ந்த மக்களாட்சியை நாகரிக வாழ்க்கை நெறியாக உலகம் பாராட்டிப் போற்றுகிறது.
மக்களுக்குக் காப்பாக நிற்கும் அடிப்படையில் காவலமைப்பாகத்தான் அரசாங்கம் என்று தொடக்கத்தில் இயங்கியது. மக்களுக்கு வாழ்வு நிலைகளிலும் பொருளியல் வளங்களிலும் நன்மை செய்யும் நல்லரசாக நாளும் அந்த அமைப்புமுறை வளர்ந்து, பல்முனைப் பணிகளைப் பரந்த நிலையில் மக்களுக்கு எளிதில் நலமேற்பட உதவும் அமைப்பாக மக்களாட்சி இப்போ து வடிவெடுத்துள்ளது.
மனமருள் கொண்ட மக்களால் அரசன் இறைவனே என்ற நிலையில் அரச மைப்பு உருவாகியது. அரசனே இறைவன் என்ற அடிப்படை யில் மன்ன ன் கையில் உரிமைகளை நம்பி வழங்கிவிட்டு, நீ உலகத்தை எப்படியாவது வேந்தன் நடத்திச் செல்வான் என்ற துணிவுடன் மக்கள் வாளாயிருந்த நிலைமை பழைய வரலாறாகும். பின்னர் பிரெஞ்சு நாட்டு அரசியல் சிந்தனையாளர் ரூசோவின் கருத்துப்படி மக்களின் பொதுநலனுக்காகத்தான் அரசு ஆட்சியுரிமை வழங்கப்பெற்றதென்றும், மக்களுக்கும் ஆளும் உரிமையும் உண்டு என்ற கருத்தும் எழலாயிற்று. இவ்வகையில் புரட்சி உருவாகி மக்களாட்சி முறை அரும்பியது. அரும்பு மலர்ந்து விரிந்து நேர்முக மக்களாட்சியாகத் திகழ்ந்து இன்று உலகம் எல்லாம் பொதுநல மனம் கமழ்கிறது. ஓரே மன்னன் என்னும் நிலைமை மாறி, எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாகி உரிமையும் கடமையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கூட்டாக வாழும் முறை மக்களாட்சியின் நடைமுறைகளாகியுள்ளன.
ஏறத்தாழ எழுபது கோடி உயிரணுக்களைக் கொண்ட ஓருயிர் உடலமைப்பாக நமது நாட்டில் மக்களரசு உருவாகியுள்ளது. அலுவலக ஆட்சி கலையைப் பற்றிய அறிவும் திறனும் இறியமையாத தேவையாகிவிட்டது.
முன்னாளில் அரசன் அரியணையில் அமர்ந்திருந்ததுபோல, மக்களாட்சியும் அரியணையின் மேல் அமர்ந்துள்ளது என்பர். மூன்று கால்களில் நிற்கும் ஆட்சியாக ஓர் அரியணை அமைந்துள்ளது. ஆட்சித் துறை, சட்டப்பேரவைத் துறை, நீதித்துறை என்ற மூன்றும் சேர்ந்து அரசை இயக்குகின்றது.
அந்தப் பிரிவுகளில் எந்தப் பிரிவுக்கு எவ்வளவு வல்லமை என்ற வாதம் எப்போதுமே அரசியல் உலகில் நீரால் நடந்துள்ளது. நமது அரசியல் அமைப்பு பெருமளவுக்குப் பிரித்தானிய அரசியலபைப்பைத் தழுவியது. நம் அரசியல் வல்லுநர்கள் அமெரிக்கப் பாங்கையும் தண்ணோடு இணைத்திருக்கிறார்கள். சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களப் பற்றிப் பிரித்தானிய நீதிமன்றம் எந்த மேலாய்வையும் செய்யவியலாது. சட்டமன்றம் அஃகே உயர்வற உயர்ந்த உரிமையுடையதாகும். அமெரிக்க நாட்டிலும் பாரத நாட்டிலும் நீதிமன்றமே நிகரற்ற உரிமை கொண்டது. சட்டமன்றம் செய்த சட்டங்களை நீதிமன்றம் ஆராய்ந்து கருத்தறிவிப்பதை நாம் காணலாம்.
அரசியலில் கருத்து மாற்றங்கள் எழும், விழும். சட்டப்பேரவைகள் மாறும், மறையும். ஆனால், ஆட்சித்துறை மட்டும் நிலைத்து நின்றபடி செயற்படும். இருந்ததனை இருந்தபடி அலுவல்துறை இருந்த காட்டும். அதனாலேயே நிலைத்த ஆட்சித்துறை என்று அழைப்பார்கள். ஸ்டாலின், ரூசுவெல்டு, சர்ச்சில் ஆகிய முப்பெருநாட்டுத் தலைவர்களின் உச்சிமாநாடு இரண்டாம் உலகப் போரின்போது நடந்தது. தொடர்ந்து இரண்டாம் மாநாடு நடந்தபோது, உலகப்போர் முடிந்துவிட்டது. பிரிட்டன் தலைமையமைச்சராக இருந்த சர்ச்சில் மாறி அட்லி தலைமையமைச்சராகப் பதவியேற்றிருந்தார். முதலில் நடந்த மாநாட்டுக்குச் சர்ச்சிலோடு வந்திருந்த அலுவலர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள் அனைவரும் மாறாமல் அட்லியுடன் மீண்டும் வந்தது கண்டு ஸ்லினும், ரூச்வெல்டும் வியந்தார்களாம். அரசாங்க மாறுதல், அலுவலல் முறையை மாற்றாத பிரித்தானிய மாட்சியை அது காட்டியது என்பர்.
அனைத்து மக்களுக்கும் அவரவர்களின் குறை நிறைகளை ஆராய்வதோடு, நலந்தீங்குகளை, கல்வி வாய்ப்புகளை, நிலபுலங்களை, ஊதிய மேம்பாடுகளை அலுவல் நடைமுறைகளை முறைப்படுத்தித் தீர்வு காண்பது அரசின் கடமையாகும். நெறிமுறைகளை வகுக்கும்போது, கோட்பாடுகளை ஒருங்குறப் பின்பற்றி, தனிச்சலுகைக்கு இடந்தாராமல், முன்னமைகளையே பெரும்பாலும் பின்பற்றி, நிறமையாகவும், விரைவாகவும் மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற அடிப்படையில் தான் அலுவலகம் அமைந்தது.
தங்களுக்கு விதித்த பணிகளை வரம்பு மீறாமல் ஒத்த நெறியில் ஒருபாலும் கோடாமல் எந்திரப் பொறிகளைப்போல அலுவலர்கள் செயலாற்ற வேண்டுமென்று உருவான நன்னோக்கம், காலப்போக்கில் கனத்துப்போய் கல்லாகிவிட்டதோ என்று அனைத்து நாடுகளிலும் உணரத் தலைப்பட்டுள்ளனர்.
ஊரில் தீப்பற்றி எரிகிறது என்றால், அது தீயணைப்புப் படையின் பணி என்றும், பிற துறையினர் தமக்குத் தொடர்பில்லாதாராக ஒதுங்குவதும் நடைமுறையை விடாது பின்பற்றும் அலுவல் நாகரிகமாகச் சீர் குலைந்துள்ள து. அலுவலகத்தின் மூலையில் தீப்பற்றிக் கொண்டது என்று ஓடிவந்து ஒருவர் முறையிட்டாராம். காதுகொடுத்தும் கேட்காமல், இது விற்பனைப் பிரிவு நீங்கள் தகவல் பிரிவுப் பகுதிக்குப் போய் இதைச் சொல்லுங்கள் என்றாராம். அலுவல் அமைப்புக்கு அறியும் மூளைதான் உண்டு. உணரும் உள்ளம் இருப்பதில்லை என்பதை இப்படிச் சுட்டிக் காட்டுவார்கள்.
ஆட்சி அலுவலகங்களில் உள்ளவர்கள், அறியும் அறிவிளை மட்டுமே துணை கொண்டு, உ ரும் உள்ள இல்லாத மனப்பான்மையோடு செயற்படும்போது, நேர்மையாகப் பணிபுரிந்தாலும்கூட அன்பில்லாத அறம் என்பில்லாத புழுவை வாட்டி வருத்துவது போல, ஏழை எளியவர்களுக்கு இன்ன ல் நேர்கின்றது. சுற்றி வளைத்துச் செல்லும் சுணக்கமான போக்கே அலுவலகத்தில் இருப்பதுபோலவும், அதை முறையாகச் செயற்படுவது என்றால், ஒவ்வொரு பிரிவையும் அணுகி அப்பாவின் முடிவுக்குப் பிறகு பிறிதொரு பிரிவு என்று பல வரிசை நிலைகளில் நெடுக வளர்ந்து அயரவைக்கும் போக்கை எப்படியாவது மாற்றலாமா என்று பலர் கருதியாலும், புதிய போக்கை வகுக்கத் தயங்குகின்றனர்.
மக்களாட்சிக்குப் பெருமதிப்புத் தந்து, மக்கள்பால் பேரன்பு பூண்டுள்ள நமது முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஒருமுறை பேசியபோது, அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களும் பணியாளர்களும் தாமெடுக்கும் ஒவ்வொரு கோப்பினையும் உயிரற்ற ஒரு காகிதக்கட்டு தானே என்று என் அன்பில்லாமல் அசட்டையாகக் காலங்கடத்தினால், பல இன்னல்கள் நேரும். ஒவ்வொரு குறிப்புக்குப் பின்னாலும் அதன் முடிவை எதிர்பார்த்து தனியொருவரோ, குடும்பபோ , மக்கள் கூட்டமோ பொது நல அமைப்போ காத்துக்கிடக்கிறார்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தாளின் பின்னும் ஒருவர் ஆணைக்காக அனுமதியை, எதிர்பார்த்து ஏக்கத்தோடு காத்து நிற்கிறார் என்பதை உருவகமாகக் கண்டு, உள்ளக் கனிவுடன் குறிப்புக்களை அலுவலர்கள் விரைந்து அப்ப வேண்டுமென்று உருக்கமாகக் குறிப்பிட்டார்.
நெடு நாளாக ஊறிக்கிடக்கும் சில பழக்கங்களை அலுவலர்கள் மாற்றிக் கொண்டால் வேகமாகவும், திறமையாகவும் செயற்படலாம். தம்பியிடம் வரும் தகவல்களை அசட்டை செய்து தட்டிக் கழிக்காமலும், பொறுப்பை இன்னொருவர் மேல் சுமத்தாமலும் முடிவெடுக்க தனிப் பயிற்சியும் பக்குவமும் வேண்டும்.
பொதுவாக நம் நாட்டிலுள்ள பழைமைப்பற்று, புதுமையைப் புறக்கணிக்கச் செய்கிறது. எனவே, அணிந்து புதுமைகளையேற்கவும், புகுத்தவும் நாம் தயங்குகிறோம். இதுவரை நம்மால் எளிதாகக் கருதப்பட்டிருந்த வாழ்க்கைச் செயல்முறைகள் காலப்போக்கில் அறிவியல் சார்ந்த துறைகளாக மாறியுள்ளன. அலுவலக ஆட்சியும் அறிவியல் நுட்பம் செறிந்த கலவையாக அயல் நாடுகளில் கற்பிக்கப்படுகிறது. என் கடன் பணி செய்துக் கிடப்பதே’ என்ற தொண்டுணர்வோடு அனைவரும் தம் அலுவலகங்களில் சிந்தனை செலுத்திதால், மக்களாட்சியில் புத்தொளியும் புதுவுணர்வும் பூத்து அனைத்து மக்களுக்கும் சிறந்த வாய்ப்பும் நிறைந்த பயனும் அளவில் கிட்டும்.

Add a Comment