POST: 2020-09-11T10:36:16+05:30

புலவர் பு சீ கிருட்ணமுர்த்தி வழங்கிய பாராட்டுரை – 15.7.2020

குழந்தைகளின் குலதெய்வம் – டாக்டர்.தாரா அம்மையார் !

நம்மிடையே வாழும் தலைசிறந்த குழந்தை நல மருத்துவராக திகழ்பவர் டாக்டர்.திருமதி .தாரா நடராசன் அம்மையார்களாவார் .15 – 7 – 1932 ஆம் ஆண்டில் சென்னையில் பிறந்தார்.

எளிய குடும்பத்தில் பிற்பட்ட வகுப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதமங்கலம் என்னும் சிற்றூரில் வாழ்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு,.மாசிலாமணி தன் குடும்பத்தோடு சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

வேலூரில் கல்விப் பயின்ற டாக்டர்.தாரா விசாகபட்டினத்தில் மருத்துவக் கல்லூரியிலும் , சென்னை மருத்துவக் கல்லூரியிலும் தம் ஐந்தாண்டு மருத்துவக் கல்வியை முடித்த பெருமைக்குரியவர் .

பிறகு தொடர்ந்து குழந்தை மருத்துவத்தில் பட்டயப்படிப்பும் ( DCH ) ,எம் .டி ( M . D ) முதுகலையும் பெற்றார்.

சென்னையில் கஸ்தூரிபாய் காந்தி குழந்தை மகளிர் நல மருத்துவமனை ,
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, எழும்பூர் – அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்ற மருத்துவ நிறுவனங்களில் டாக்டர்.தாரா அம்மையார் பணியாற்றினார் .

தன்னுடைய குறிக்கோள் தலைவராக தன்னை வழிநடத்தி உயர்த்திய பெருமை டாக்டர்.மரைக்காயர் ,
அவர்களையும் டாக்டர்.ஆச்சாரையும் சாரும் என்று பலமுறை என்னிடம் சொல்லியுள்ளார்.

மேலும் எண்பத்தேழாம் அகவையைத் தொடும் டாக்டர். தாரா நடராசன் மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும்
இராசாசி மருத்துவமனைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார் .

தம் இல்லத்தைச் சுற்றி வாழ்ந்த நலிந்த பிரிவினர்களுக்கு எவ்வித ஊதியமுமின்றி குழந்தை மருத்துவராக புகழ் பெற்றிருந்த டாக்டர். தாரா அம்மையார் .

வயிற்றுப்போக்கினால் பெரிதும் அவதிப்பட்ட குழந்தைகளுக்கு தானே தயாரித்துக் கொடுத்த மருந்துக்கு ஒளவை அவர்கள் ” தாரா வாட்டர் ” என்று விளித்து பாமரர்களின் தேவதையாகக் கருதி வழிபட்டதை நான் நன்கறிவேன் .இப்போது அறுபத்து இரண்டு வயதான தன் அக்கா மகள் சுதாவுக்கு தாரா வாட்டர் தந்ததை ஒளவை என்னிடம் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் .

மகளிர் மருத்துவர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி மதுரையிலும் , சென்னையிலும் மகளிர் மருத்துவர் மாநாடு நடத்தியதை எல்லோரும் நினைவு கூர்வார்கள்.
தமிழக அரசின் சார்பில் இலிபியா நாட்டுக்கு குழந்தை நல மருத்துவராக அனுப்பப்பட்ட பெருமையும் கொண்டவர்.
குழந்தைகளின் குலதெய்வம் என்ற விருது பெற்ற டாக்டர்.தாரா நடராசன் இன்றும் நன்னிலையில் தம் கணவர்
ஒளவை நடராசனுடன் சென்னை அண்ணாநகரில் வாழ்ந்து வருகிறார்.

வாழ்க தாரா அம்மையார்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *