திருச்செங்கோடு ரோட்டரி சங்கம்
இழை – அக்டோபர் 2020 மாத இதழ்
இழை
அருந்தமிழும் அன்றாட வழக்கும்
பாரசீக மற்றும் பிற நாட்டு மொழிச் சொற்கள் தமிழில் கலந்த வரலாறு
முனைவர்.ஒளவை ந.அருள்
( இயக்குநர் – அரசு மொழிபெயர்ப்பு துறை )
பாரசீக மொழி, தில்லி சுல்தான்கள் காலம் முதல் முகலாயர்கள் காலம் வரை நாடெங்கும் ஆட்சி மொழியாக இருந்தது. நீதி நிர்வாகத்திலும் ஆட்சியிலும் பாரசீக மொழியே இருந்தது. அரசுப் பணியில் இருந்த இந்துக்கள் இந்தி மொழியைப் பயன்படுத்தினர். ஆனால், இந்தியாவிலிருந்த பல அரசுகள் மாமன்னர் அக்பரின் ஆணையினால், அரசின் கணக்கு வழக்குகள் அனைத்ததையும் பாரசீக மொழியிலேயே எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆங்கிலம் அங்குலம் அங்குலமாக வளர்ந்து நிலையாக அமரும் வரை பாரசீக மொழிச் சொற்கள்தான் அரசு நிர்வாகத்தில் கோலோச்சின. பாரசீகம் தமிழில் கலந்த பல பாரசீக சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளன.
1. அஜ்மாஷ் – ஆய்வு செய்தல் பயிரடைப்பு 2. கம்மி – குறைவு 3. குமாஸ்தா – எழுத்தர் 4. கொத்தவால் – காவல்துறை அலுவலர், ஆணையாளர், 5. சராசரி – நிரல், 6. சிரஸ்தார் – அலுவலக மேலாளர், 7. தர்காஸ்து – தரிசு நிலம், 8. பந்தோபஸ்து – காப்பு செய்தல், 9. பினாமி – இரவல் பெயர், 10. ரசீது – பற்றுச்சீட்டு, 11. ஜமீன் – நிலம், 12. டபேதார் – அலுவலக உதவியாளர், 13. டவாலி – கச்சை, 14. தஸ்தாவேஜி – ஆவணம், 15. பிராது – குற்ற முறையீடு, குறையீடு 16. காபந்து – பாதுகாப்பு, 17. சிப்பந்தி – பணியாளர். 18. யாதஸ்து – எழுத்தாலான குறிப்பாணை, 19. ரோந்து – சுற்றி வரல் 20. காகிதம் – தாள், 21. சிப்பாய் – படை வீரன், 22. பஜார் – கடைத்தெரு, 23. துப்பாக்கி – சுடும் கருவி, 24. பாரா – காவல், 25. சந்தா – தவணைப் பணம், 26. நங்கூரம் – ஆதாரம் 27. அந்தஸ்து – நிலை பொருள், 28: சுமார் – பரவாயில்லை , 29. சிபாரிசு – பரிந்துரை, 30. தயார் – ஆயத்தம், 31. தராசு – துலாக் கோல், 32. ஜல்தி – விரைவு, 33. சடுதி – விரைவு, 34. சலான் – செலுத்து சீட்டு, 35. பட்டா- நில உரிமை ஆவணம், 35. மிட்டா – நிலக்கிழார் 36. தண்டோரா – ஒலி எழுப்பி அறிவித்தல், 37. தமுக்கு – ஒலி எழுப்பி அறிவித்தல் 38. திவால் – முறிவு, 39. பஞ்சாயத்து – ஊராட்சி. 40. புகார் – முறையீடு, 41. பட்டுவாடா – வழங்கல் 42. பேட்டி – நேர் காணல், 43. உண்டியல் – சிறு பணப்பெட்டி, 44. லத்தி – தடி,45. வசூல் – தண்டல், 46. இஸ்திரி – பெட்டி போடல், 47. செலாவணி – நாணயம் , 48. பட்டியல் – அட்டவணை. 49. பாலம் – இணைப்பு. 50. ஜோடனை – அலங்கரித்தல் 51. வாரிசு – மரபுரிமை. 52. வாய்தா – தள்ளிப் போய், 53. ஒப்தி – கைப் பற்றல். 54. ஜமாபந்தி – வருவாய் தீர்வாயம், 55. ஜாமீன் – பிணையம். 56. ஜாஸ்தி – அதிகம். 57. மகஜர் – விண்ணப்பம். 58. அசல் – முதல். 59. அத்து – எல்லை . 60. அமுல் – நடைமுறைப் படுத்தல். 61. அநாமத்து – ஒப்படைத்த பொருள். 62. ஆசான் – ஆசிரியன். 63. ஆஜர் – வருகை. 64. ஆபத்து – இடர். 65. இனாம் தார் – மானிய நிலத்துக்குரியவர். 66. கஜானா – கருவூலம். 67. காயம் – நிலையான, 68. இருகால் – செலுத்துகை, 69. உசூர் – மாவட்டம், 70. கலால் – சாராயம், 71. கைது – சிறையீடு. 72. சரகம் – வட்டம். 73. சராப்பு – பணம் அளிப்பவர். 74. ஜாப்தா – பட்டியல், 75. ஜில்லா – மாவட்டம். 76. தனக்கை – கணக்கு சரி பார்த்தல், 77. தாக்கீது – குறிப்பாணை. 78. தபா – காலம் 79. திவான் – முதலமைச்சர். 80. நமூனா – படிவம். 81. பசலி – வருவாய் ஆண்டு . 82. நகல் – படி. 83. மராமத்து – பழுது பார்த்தல். 84. மஹால் – மாளிகை. 85. ருஜு – மெய்ப்பித்தல். 86. மகசூல் – விளைச்சல், 87. ரயத்து – குடியானவன். 88. ரயத்து வாரி – நிலத் தீர்வை . 89.ரொக்கம் – பணம். 90. லாயக்கு – தகுதி. 91. அம்பாரம் – குவியல். 92. அலாதி – தனி. 93. சாவி – பதர், 94. ஜமீன்தார் – நிலக்கிழார், 95. பூரா – முழுவதும். 96. ராஜினாமா – பணி விலகல். 97. முச்சலிகா – உடன்படிக்கை . 98. கரம் – சூடு, 99. ஆப்காரி – மது வரி. 100. மனு – விண்ணப்பம். 101. ஜமீன் – நிலம்.
தமிழ் அறிவோம் !
தமிழ் காப்போம் !!
தமிழ் வளர்ப்போம் !!!
– நன்றி ..
தினச்செய்தி

Add a Comment