POST: 2020-11-05T09:37:01+05:30

நின் உயிர் நமன் கேட்டாலும்
நங்கையாள் என்றும் தாராள்
தன்னுயிர் தாரா தந்தே
தரணியில் நின்னை வைத்தாள்
மன்ன நீ உளநாள் மட்டும்
மங்கையும் உன்னில் வாழ்வாள்
அன்னவள் அமைதி கொள்ள
ஐய நீ ஆறு வாயே

ஆய்ந்ததோர் அறிஞருக்கோர்
ஆணிவேராக வாழ்ந்தீர்
தோய்ந்ததோர் அன்பில் மூன்று
தோன்றல்கள் வளர்த்தெடுத்தீர்
பாய்ந்திடும் கனிவால் வென்ற
பாவையாம் தாரா அம்மை
தேய்ந்திடா நிலவாய் நெஞ்சில்
திகழ்ந்தென்றும் வாழ்க வாழ்க

– மரபின் மைந்தன் முத்தையா

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *