POST: 2020-12-22T11:33:21+05:30

ஈடில்லா செயல் வீரர் இரவியின் எழுபதாம் பிறந்த நாள் ( 17 – 10 – 2020 ) ஒளவை நடராசன் அவர்களின் வாழ்த்து
_________________________________________

அருட்செல்வரின் தனிச்செல்வராய்த் திகழ்ந்து இன்று சக்தி குழுமத்திலும் அதே பொறுப்பில் திகழ்கிற என் இனிய நண்பர் இரவி அவர்களை நான் பண்புத் திலகம் என்றும் சீரிய நலங்கள் வாய்ந்த செம்மல் என்றும் பலமுறை பாராட்டிக் குறிப்பிட்டிருக்கிறேன்.

20 வயது இளைஞராக அவர் அலுவலில் சேர்ந்த நாளில் இருந்தே நான் அறிவேன்.

வாழ்க்கையில் எவ்வளவோ துயரங்களைக் கண்டு அவைகளையெல்லாம் வென்று கடமை ஒன்று தான் தலைமையானது என்று இன்று வரையில் நின்று புகழ் சிறக்க வாழ்கிற இரவி அவர்களை நான் மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

காரணம் இரவிக்கு தான் என்ற எண்ணம் இல்லாமல் தன்னைச் சார்ந்தவர்கள் அத்தனை பேரையும் அன்போடு காக்க வேண்டும் என்பதில் அவர் தோள் கொடுத்து தூக்கியவர்கள் என்று பார்த்தால் நான் நூற்றுக்கணக்கானவர்களை எண்ணிப் பார்க்க முடியும்.

நண்பர் இரவிக்கு 70 வயதா என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

அன்று பார்த்த மேனியும் அன்று செய்த கடமைகளும் அன்று ஆற்றிய பணிகளும் இனியும் அவருக்குத் தொடரும் என்பதில் ஐயமில்லை.

இரவி வாழ்க. இரவியின் குடும்பத்தார் வாழ்க!

இரவியைக் காப்பது என்பது தமிழகத்தினுடைய கடமை என்ற வகையில் நான் உடன்பிறவாத தம்பியாகத் திகழும் இரவி 70 ஆண்டல்ல நூறு ஆண்டுகளையும் தாண்டி இதே வகையான நுண்ணறிவும், அழகிய உடலும், ஆற்றலும் பெற்றுத் திகழ வேண்டும் என்று நான் மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்

வாழ்க இரவி! வாழ்க லலிதா இரவி!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *