POST: 2021-01-22T10:47:30+05:30

குமுதத்தில் வழிந்த அமுதம் !

வெண்புரவி மீது
வீற்றிருந்த
தோற்றத்தைக்
கண் குளிரக் கண்டேன் !.
களிப்பு மிகக்
கொண்டேன் .

எங்கே தமிழுக்கு
இடர் வருமோ என வினவி
அங்கே செல்வதற்கு
மலையன் தான்
விரைந்தாரோ !

வென்றி தவிர
வேறொன்றும் அறியாத
வீரனுக்கு
நன்றி சொல்கின்றோம் .

நாட்படு தேறல் என்று வருமென்று
ஏங்கும் தமிழர் எண் கோடி

பரிவோடு
ஒளவை நடராசன்
19 1 2021

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *