POST: 2021-02-27T10:51:11+05:30

சீரிளமைத் திறம் வாய்ந்த செந்தமிழ் நல்லிதழ் என்றும் வாழ்க !

திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் சிவனுக்கு மூன்று கண்கள் என்பர் ,அதுபோலச் செந்தமிழ் – தமிழ்ப்பொழில் – செந்தமிழ்ச்செல்வி ஆகிய மூன்று இதழ்களும் வெளிவந்ததைத் தமிழுலகம் நன்றியோடு போற்றி மகிழ்ந்தது .

மதுரைத் தமிழ்சங்கத்தின் சார்பில் செந்தமிழ் இதழ் வெளிவந்ததும் தலைமைப் புலமையாளர்கள் அரிய கட்டுரைகளை எழுதியதையும் நான் நினைவுகூர்கிறேன் .

செந்தமிழ் இதழ்தான் காலத்தால் பழமை சான்றது .

பல்லாண்டுகள் கழித்து மதுரையில் என் தந்தையார் சில திங்கள்(1955 _1963) செந்தமிழ் இதழுக்கு ஆசிரியராக இருந்ததையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் .

தன்னிகரில்லாத தமிழ்வேந்தர் பாண்டித்துரை மன்னரால் தொடங்கப்பெற்ற பெருமிதம் கொண்டது செந்தமிழ் இதழ் .

செந்தமிழ்க் கல்லூரியும் – சங்கமும் சேர்ந்து செந்தமிழைத் தொடர்ந்து வெளியிடுவது பெருமகிழ்ச்சியைத் தருகின்றது .

தமிழக அரசு – தமிழர் தந்தை சி பா ஆதித்தனார் திங்களிதழ்ப் பரிசிலைச் – செந்தமிழ் திங்களிதழுக்கும் வழங்கியதில் அரசே பெருமடைகிறது ! .

வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !
வாழிய செந்தமிழ் ஆசிரியர் குழு !

வாழ்த்துகளோடு
ஒளவை நடராசன்
27 2 2021

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *