POST: 2021-03-04T10:25:35+05:30

படைப்பை ஊக்கும் பண்பு

தினமணி நாளிதழில் 22.2.2021 அன்று வெளியான ” நூற்றாண்டு கண்ட நல்லபெருமாள் ” குறித்து
” நயம்படு சொல்லறிவார் ” என்ற தலைப்பில் வெளியான நடுப்பக்கக் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்து .

பாராட்டத்தக்கது

மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் ந . அருள் எழுதிய ” நயம்படு சொல்லறிவார் ” கட்டுரை
( 22 – 2 – 2021 ) படித்தேன்.

பொறியாளரான நல்லபெருமாளின் தமிழ்க்கம்பன் கவிதையில் ஊறிய மனமும் வியப்பூட்டுகின்றன .

ரசிகமணி டி கே சி ” வட்டத்தொட்டி ” அமைத்து இலக்கிய சுவையை நண்பர்களுக்கு உணர்த்தினார் .

கம்பர் கவிநயச் செல்வர் நல்லபெருமாள் ” இலக்கிய முற்றம் உருவாக்கி கம்பன் புகழ் பரப்பினார்

அவர் கம்பரின் கவிச்சுவையை எடுத்துரைத்ததோடு நின்றுவிடாமல் இளங்கவிஞர்கள் பலரையும் பாராட்டி ஊக்குவித்த பண்பு பாராட்டத்தக்கது .

மு ,ரகுநாதன் – பட்டுக்கோட்டை .

நிலைத்து நிற்கும்

மொழிபெயர்ப்பாளர் இயக்குநர் முனைவர் ந அருள் எழுதிய ” நயம்படு சொல்லறிவார் ” கட்டுரை ( 22 – 2 – 2021 ) படித்தேன் .

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் புகழை தனது வாழ்நாள் முழுதும் போற்றிப் புகழ்ந்தவர் ரசிகமணி என்று அறியப்பட்ட குற்றாலம் டி கே சிதம்பரநாத முதலியார் , அவரைப் போலவே கம்பர் ஆர்வலர்களை ஒன்றிணைத்து ” இலக்கிய முற்றம் ” நிறுவி கம்பர் புகழைப் பாடிப் பரப்பியவர் சிறமடம் நல்லபெருமாள் .தமிழறிஞர்களுக்கு செவிக்கு உணவளித்ததோடு வயிற்றுக்கு உணவளித்து வாழ்ந்த வள்ளல் அவர் .

கம்பரையும் ஆங்கிலக் கவிஞர்களையும் ஒப்பிட்டு நூல்கள் எழுதியவர் .இலக்கியவாதிகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்களையும் இருப்பர் என்பதற்கு நல்லபெருமாள் சான்றாவார் .

நூற்றாண்டு கடந்த நல்லபெருமாளின் புகழ் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை .

– ச கண்ணபிரான் .திருநெல்வேலி .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *