ஈழத் தங்கையின் இசைப் பாடல்
ஒளவை ஐயா இதயத்திலே
ஆண்டவன் அல்லவோ குடியிருந்தான்
குடியிருந்தவனே சாட்சி சொன்னான்
சாட்சியால் இன்பம் பேரின்பம்
சாட்சியால் இன்பம் பேரின்பம்
இன்தமிழ் பெற்ற செல்வனவர்
எவ்வுயிர்க்கும் இங்கு உயிராமே
நம் தமிழ் மேன்மை காத்தவரைச்
சிந்தையில் வைத்தே பாடுகிறேன்
ஒளவை ஐயா இதயத்திலே
ஆண்டவன் அல்லவோ குடியிருந்தான்
குடியிருந்தவனே சாட்சி சொன்னான்
சாட்சியால் இன்பம் பேரின்பம்
சாட்சியால் இன்பம் பேரின்பம்
பாரதி யென்றால் போதுமிங்கே -அவர்
பாசத்திற்க்கில்லை ஈடு இங்கே
நாரொடு பூவாய் ஆனவரை -இந்த
நற்றமிழ் உலகம் போற்றிடுமே
ஒளவை ஐயா இதயத்திலே
ஆண்டவன் அல்லவோ குடியிருந்தான்
குடியிருந் தவனே சாட்சி சொன்னான்
சாட்சியால் இன்பம் பேரின்பம்
சாட்சியால் இன்பம் பேரின்பம்
பாசத்தோடு
கவிதாயினி ஈழத்தமிழச்சி அம்பாளடியாள் சாந்தரூபி
சுவிட்சர்லாந்து .

Add a Comment