பட்டத்து யானைக்குப் பட்டாடை !
நாளும் நற்பணிகளாற்றுவதே தம் வாழ்வின் குறிக்கோள் என்று அருந்தொண்டாற்றும் ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பகம் தமிழக மக்களுக்கு வாய்த்த நல்வரவாகும் .
கலைகளும் – பண்பாட்டுப் பெருமித விழுமியங்களும் தழைக்கச் செய்வதைத் தவமாக ஆற்றி மகிழ்பவர் அருமை நண்பர் முரளி அவர்கள் .
” பட்டத்து யானைக்குப் பட்டாடை ” போல பல்வேறு பரிசுகள் நடுவில் முரளி அவர்களுக்குக் கலைமாமணி விருது அரசு வழங்கியது.
உரியவருக்கு உரிய விருதை அரசு அளித்ததைப் பாராட்டலாம் .
முறுவல் மாறாத முகத்தோடு பண்பாட்டின் உயர்வையே நாளும் பரப்பி மகிழும் நண்பர் முரளி அவர்கள் பல்லாண்டு வாழ்க ! .
வாழ்த்துகளோடு
ஒளவை நடராசன்
27 3 2021

Add a Comment