தினமணி நாளிதழில் 4.5.2021 அன்று வெளியான ” இளவரசர் எடின்பரோ கோமகன் ! ” என்ற தலைப்பில் வெளியான நடுப்பக்கக் கட்டுரைக்கு வரப்பெற்ற கருத்துரை ( 11 5 2021 ) – பக்கம் எண் : 6 .
நிறைவாழ்வு
மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் ஒளவை அருள் எழுதிய ” இளவரசர் எடின்பரோ கோமகன் ” கட்டுரை ( 4 5 2021 ) படித்தேன் .
அண்மையில் மறைந்த பிரிட்டன் இளவரசர் எடின்பரோ கோமகன் பற்றி ஏராளமான செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது .
இளவரசர் என்றாலும் அவர் அகவை ஏறக்குறைய நூறு .
நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார் .
அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பண்ணைகள் ,சுற்றுச்சூழல் இவற்றில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார் என்பது வியப்பளிக்கிறது .
அவரது நகைச்சுவை உணர்வும் குறிப்பிடத்தக்கது .
பிரிட்டன் அரசியாரும் இளவரசர் பிலிப் கோமகனும் இந்தியாவுக்கு மூன்று முறை வருகை புரிந்துள்ளனர் என்பது புதிய செய்தியாகும் .
பா .மருதமுத்து – தேனி .

Add a Comment