நாவேந்தர் ஒளவை நடராசன் மேடைத்தமிழ் அறக்கட்டளை
நன்றியுரை
முனைவர்.ந.அருள்
26.2.2021 – வெள்ளிக்கிழமை – நண்பகல் 12.30
இடம் : உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,தரமணி
என் பெற்றோர்களின் பவள மங்கல பிறந்த நாள் பெருவிழாவை நடத்திய போது பேராசிரியர் உலக நாயகி பெருந்தூணாக இருந்து விழாவை சிறப்பாக நடத்திக் காட்டிய அருந்திறத்தைக் கண்டு நயவுரை நம்பி முதல் தமிழார்வர்கள் அனைவரும் அக்கா உலக நாயகியை போற்றிப் பாராட்டினார்கள்.
அவையிலுள்ள மாணவச் செல்வங்களே , தமிழ்ப்படித்த பேராசிரியர் உலக நாயகிக்கு நல்ல வாய்ப்பு இருந்திருந்தால் துணைவேந்தராகவே வந்திருப்பார்கள்.
தலைசிறந்த பேச்சாளர உலகநாயகியின் அருமை இளவல் திருமகன் கலைமாமணி வில்லிசை வேந்தர் கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மருகன் ஆவார்கள் .
பெரும்புகழ் படைத்த விஜிபி குழுமத் தலைவர் அண்ணாச்சி சந்தோசம் இப்பொழுதெல்லாம் எந்த நாடு சென்றாலும் , அது குறிப்பாக இலக்கியக் கூட்டம்,திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவதல் என்றால் முதலில் அண்ணாச்சி உலக நாயகி அக்காவிடம் சொல்லி பயண நிரல் திட்டமிடச்சொல்லி ஒருங்கிணைக்கும் தூதர் போல செப்பமாக வரையறுப்பார் என்பது நம்பிக்கை.
வெற்றிகரமாக நடைபெற்ற பத்தாம் உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது.
அண்ணன் இயக்குநர் விசயராகவன் அவர்களும் நானும் அமெரிக்கா செல்லும் வாய்ப்பினை அரசு எங்களுக்கு வழங்கியது.
மாநாட்டு நிகழ்ச்சியிலும் அக்கா தான் எங்களை வரவேற்று பெருமைப்படுத்தினார்கள்.
இன்றைக்கு உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் சென்னையில் பெருமிதமாக இயங்குகிறது என்றால் அதன் மூல காரணம் உலக நாயகி அம்மையார் தான்.
சென்னைப் பல்கலைக்கழகத்திலுள்ள
தமிழ் வளர்ச்சி மன்றத்தின் இயக்குநராக செவ்வேன பணியாற்றுகிறார்கள்.
மாணவிகளுக்கு எப்படி முனைவர் ஆய்வு செய்ய வேண்டும் என்று நீங்கள் அணுக வேண்டும் என்றால் பேராசிரியர் உலகநாயகி அவர்களைத்தான் நீங்கள் அணுகலாம்.
இன்று நடைபெறும் அறக்கட்டளை உரையான நாவேந்தரின் மேடைத்தமிழ் நூலை முப்பது நாட்களில் அணி செய்து காட்டிய பாங்கும், ஒவ்வொரு களமாக சென்று தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சைக்கு தானே செலவு செய்து சென்று திரட்டிய தகவல் சிறப்பாகும்.
தனக்குப் பெரும் உதவியாக மிளிர்ந்த தன்னுடைய காரோட்டி கந்தசாமிக்கும் நூலில் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இன்றைக்கு இக்கூட்டத்திற்கு பேராசிரியர் அர்த்தநாரீசுவரர் வருகை புரிந்திருக்கிறார்.
தமிழ் வளர்ச்சிக் கழகத்தினுடைய ஆற்றல் வாய்ந்த ஆய்வுச்செம்மலாவார்,
170 முதுநிலை ஆய்வுகளும்,
70 முனைவர் ஆய்வுப் புலமையாளர்களை பட்டைத் தீட்டி அணி செய்து தந்திருக்கின்றார் என்பது அவரின் பெரும் சிறப்பாகும்.
ஆய்வுக்கதிர் அர்த்த நாரீசுவரர் நம்முடன் இருப்பது மகிழ்ச்சி.
என்னென்று சொல்வேன் ? என்னென்று சொல்வேன் ? பேராசிரியர் தாமரைப்பாண்டியன் வாயிலாகத் தான் இன்றைய சிறப்பு நடைபெறுகிறது.
நாவேந்தர் உடைய பேச்சுத் தமிழ் நூலாக வருவதற்கு தாமரைப்பாண்டியன் தான் மூல காரணம்.
என்னிடம் தாமரை சொன்னார் என்னுடைய பாட்டனார் உரைவேந்தருடைய அறக்கட்டளை நூலைக் குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள் அண்ணா.
என்னிடம் நூல் வடிவாக இருக்கிறது என்றார்.
அதே போல பேராசிரியர் உலக நாயகியை அழையுங்கள் .நாம் இந்த விழாவை நடத்திக்காட்டுவோம் என்றார்.
இதுவரை நாவேந்தர் ஒளவை நடராசன் குறித்து இரண்டு அறக்கட்டளைப். பொழிவுகளை ( நினைவில் வாழும் பேராசிரியர் மோகன் ( 28 – 2 – 2018 ),
பேராசிரியர் இராம குருநாதன்
( 26 – 2 – 2020 ) பொழிவாற்றியது குறிப்பிடத்தக்கது.
எந்தையார் பெயரில்,தாய்வான் நாட்டுப் பெருந்தகை யூசியின் கொடையால் உருவாக்கப்பட்ட இவ்வறக்கட்டளையை தன்னுடைய தலைமையில் எடுத்து செய்கிற பேராசிரியர் தாமரைப் பாண்டியனுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்,
உலக நாயகி அம்மையாரின் உரையின் சிறப்பு என்னவென்றால், தில்லியிலிருந்து வந்திருக்கின்ற பேராசிரியர் உமாதேவிக்கு நான் யார் என்றே தெரியாது.
அக்கா பேசிக்கொண்டிருந்த பொழுது,
“ சார் என்ன சார் ,ஒளவை நடராசன் ஐயாவைக் குறித்து இவ்வளவு அழகாகப் பேசுகிறார்கள் .
யார் சார் ஒளவை நடராசன்,
அவர்கள் அவ்வளவு நல்லவரா ? ” என்றார்கள் என்னிடம் .
நான் ஒன்றும் சொல்லவில்லை, சிரித்தேன்.
பிறகு அவர்கள் நான் அவருடைய மகன் என்று தெரிந்த பொழுது அவர்களும் பெருமையாகச் சிரித்தார்கள். இவ்வுரையை நேர்த்தியாக காணொளி வடிவில் நுட்பமாக செய்து உதவிய ஆசிரியர்,கலைச்செம்மல் ,அமெரிக்க வாழ் தமிழர் திருமதி தேமொழிக்கு நன்றி நன்றி நன்றி
நன்றி .
வணக்கம்.

Add a Comment