POST: 2021-07-25T11:28:55+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 68

மராட்டிய பாரதிதாசன் (I)

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘திராவிட நாடு’ இதழில் சூட்டிய புகழ்மாலை வருமாறு:-

கலை என்றால், வானவில்லிலே தோன்றி மறைந்திடும் அழகை எப்போதும் மக்கள் கண் எதிரே கொண்டு வந்து நிறுத்தும் ஒரு மாயாஜாலத் தந்திரம் என்றும், கண்ணுக்குப் புலப்படாத உருவ அழகுகளைக் கலைக் கண் கொண்டு கண்டறிந்து, மற்றவரின் பார்வைக்குக் கொண்டு வரும் மந்திரவாதியின் வேலை என்றும் கூறி, கலையைச் சாதாரண மக்களுக்குச் சம்பந்தமேயற்ற அதியற்புதப் பொருôளாக்கினர். கலையை ரசிப்பதற்கே தனியானதோர் பண்பு வேண்டும் என்றனர்.

இவ்வளவு சுற்றுச்சுவர் ஏழுப்பி, இவர்கள் வளர்த்த கலை, எதற்குப் பயன்பட்டு வந்தது என்று கவனித்தால், சுகபோகிகளின் சுந்தரிகளை வர்ணிக்கவும், சூரர்களைப் பாராட்டவும் மற்றும் இயற்கை எழில், செயற்கை அழகு என்பன போன்றவைகளை விளக்கவும் பயன்பட்டதேயன்றி, வாழ்வுக்குப் பயன்படவில்லை.

கலையிலே திறம், கலையின் நிலையிலே உயர்வு, கலையிலே பல வகை என்று கூறுவதிலும், கலை கலைக்காகவே என்று பேசுவதிலும், பூரிப்பும் பெருமையும் அடைந்தனர்.

கலை, நோக்கமற்ற நேர்த்தியாகக் கருதப்பட்டது.

கலை, வெறும் அழகு விளக்கமா? என்ற கேட்டால், இல்லை என்பர்.

கலை, மன எழுச்சிக்குக் சாதனமா என்று கேட்டால், அதுமட்டுமல்ல என்பர், கலையை விளக்குங்கள், அதன் தன்மை எப்படி இருக்க வேண்டும்?
அது பயன் கருதும் செயலா?
அல்லது விளைவு இல்லாததா?
என்று கேட்டால், கலை, மணம்போல், அழகுபோல், உண்மைபோல், முழுவதும் விவரிக்க முடியாத வியக்கத்தக்க சக்தி என்பர்.

அழகு, சுவை, மணம் இவைகளால் பயன் உண்டே, அதுபோல் கலையினால் பயன் உண்டன்றோ! அங்ஙனம், கலையினால் பயன் உண்டு என்றால், யாருக்குப் பயன்தருவது கலை எனக் கருதப்படவேண்டும் என்ற கேட்டு விட்டாலோ, கலாரசிகர்களுக்கு முகம் கடுக்கும். கலை, கலைக்காக என்பர்.

காண்டேகர், கதாசிரியர் மட்டுமல்ல, கலாசிரியர்.

அவர் கருத்து, கவிஞர் பாரதிதாசனின் கருத்தப் போன்றதே

. கலை, கலைக்காக என்று பேசுபவர்களின் பகட்டுரை அவருக்குப் பிடிக்காது.

கலைக்காக வாழ்கிறேன் என்ற பொருளற்ற பேச்சுக்காரரல்ல காண்டேகர் புரட்சிக்காரர் கவிகைளில் கூறுவதைக் காண்டேகர், உரைநடையில், கதைவடிவிலே கூறுகிறார்.

புரட்சிக்கவிஞர் போலவே, காண்டேகர், முற்காலத்தவர் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஆகியவற்றை மீறுபவர்.

கலை, வாழ்வுக்காக! வாழ்வு செம்மைப்பட, மக்கள் வாழ்வை அனுபவிக்க வாழ்வு கருகும் நிலை பெறாமல் மலர்ந்து மணம் பரப்புவதற்குக் கலை பயன்படவேண்டும் என்ற கொள்கையினர் தென்றல் போன்ற இனிமையும், சிறுதூறலுகுள்ள ஜிலுஜிலுப்பும், ஆசைக்கு உள்ள எழுச்சியும் மக்களுக்கு, வெறும் மாளிகைவாசிகளுக்கு மட்டுமல்ல, உழைத்து அலுக்கும் மக்களுக்குப் பயன்படவேண்டும் என்பது காண்டேகர் கொண்டுள்ள கொள்கை,

அவருடைய கதை அமைப்பு முறை, கதைகளிலே கூறப்படும் நிகழ்ச்சிகள், கதையைக் தீட்டிச் செல்லும்போக்கு ஆகியவற்றிலே, கலைவாழ்வுக்காக என்பதனைக் காண்டேகர் அழகுபட விளக்கியிருக்கிறார்.

செல்வான்கள், சுகபோகிகள், கொண்டுள்ள கலை உணர்ச்சி, கலப்படம் நிறைந்தது.

அந்தக் கலாரசிகர்கள் ஏழைகளை உறிஞ்சி, இன்பம் பெற்று இறுமாந்து கிடப்பவர்கள் என்பதை நன்கு உணர்ந்து, சமுதாயத்திலே எதை எதையோ கூறி, என்னென்ன காரணமோ காட்டி உழைக்கும் கூட்டத்தைப் பாடுபடாத கூட்டம் ஏய்த்து வந்தது போலவே, கலையையும் இந்தச் சுரண்டும் காரியத்துக்குச் சுகபோகிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறார் காண்டேகர்.

கலைத்துறையிலே, நடைபெற்றுவரும் புரட்சியிலே, காண்டேகரின் முயற்சிக்கு ஓர் முக்கியமான பங்கு உண்டு.

காண்டேகர், மராட்டிய சுயமரியாதைக்காரர், சமதர்ம நோக்குடையவர்.

அவருக்கு மற்றவர்களிடம் மட்டற்ற அன்பு மட்டுமல்ல, வற்றாத நம்பிக்கை இருக்கிறது.

கொடுமைகளைக் களைய வீரர்கள் வாள் எடுத்துக் களம் புகுவது போலக் காண்டேகர், பேனாவைக் கருவியாகக் கொண்டு, ‘சுகம் எங்கே?’, ‘
இருதுருவங்கள்’, ‘
கருகிய மொட்டு’, ‘
வெறுங்கோயில்’
முதலிய பல ஏடுகள் மூலம் நாட்டுக்குப் பணிபுரிந்து வருகிறார்.

கலை, கோயிலுக்கு, இல்லையானால அரண்மனைக்கு, என்ற நிலை மாற்றிய பாரதிதாசன் போலவே கதை மூலம், கலையை, நாட்டுநிலையை விளக்கவும், அதனைத் திருத்தவும், காண்டேகர், உபயோகிக்கிறார், கலை கலைக்காக அல்ல, கலை மக்களுக்காக, மக்களின் வாழ்விலே மணம் பரப்புவதற்காக சிக்கலை அறுக்க, கலை ஓர் கருவி, கால வேகத்தையும் மீறக் கூடியது, அதனை நாட்டுப் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு ஆர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, திட்டத்தோடு, வேலை செய்கிறார், இந்தக் கலாசிரியர். ஆகவேதான் இவருடைய கதைகளிலே ஜீவசக்தி ததும்புகிறது, எழுச்சிக்கு வழிகாட்டும் எழிலுடை ஏடுகளாக உள்ளன.

கதை, வெறும் பொழுது போக்குக்காகக் கட்டமைக்கப்படவில்லை.

சில நிகழ்ச்சிகளின் தொகுப்பு என்பதை மட்டுமல்ல, காண்டேகர் மாற்றியது, புதுக்கருத்துக்களைத் தாங்கும் புரட்சி ஏடுகளை இக்கதைகளின் மூலம் தந்திருக்கிறார்.

கதைகளிலே, அவர் காட்டும் பாத்திரங்களின் பண்புகள் அவ்வளவும், வாழ்க்கையிலே நமக்கு ஏற்படும் மனப்போராட்டங்களை விளக்கும் சித்திரங்களாக உள்ளன.

காதலால் உருகிய கன்னியர், கட்டுக்கு அடங்காத காளை, கபடத்தால் உயிர் வாழ்பவன் என்று பலவகையானர்களை எத்தனையோ, கதாசிரியர்கள் தத்தமது ஏடுகளிலே, காட்டியுள்ளனர்.

அவைகளைப் படிக்கும்போது ஏன் பத்மா இப்படிப் பதைத்தாள்?
சேகர் ஏன் இவ்வளவு சஞ்சலப்பட்டான்?
குமாருக்கு இவ்வளவு குரூர குணமா? என்று கேள்விகள் படிப்பவர் மனதிலே எழுமேயொழிய, அந்தச் சூழ்நிலையிலே யார் இருப்பினும் இப்படித்தான் நடந்தேறி இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுவது இல்லை.

காண்டேகர், சூழ்நிலை, நமக்கு உண்டாக்கும் எண்ணங்கள் உள்ளனவே, அவைகளையே, பாத்திரங்களாக்கிக் காட்டுவதால், கதை உண்மையில் கருத்தோவியமாகின்றது.

காண்டேகர் புதுமையை விரும்புபவர், புதுமையின் பளபளப்பை அல்ல, அதன் ஆழ்ந்த பாடத்தை, அவருடைய முயற்சி அவ்வளவும், திறமை முழுதும், முன்னால் ஏற்பட்ட எண்ணங்கள், ஏற்பாடுகள், முறைகள், ஆகியவற்றை முறியடித்து, மனிதத் தன்மையின் மேன்மையை உணர்த்த வேண்டும் என்பதுதான். அவருடைய கதாநாயகிகளின் கண்ணீர் காலடியிலோ அல்லது பூஜா பாத்திரங்களிலோ பெரும்பாலும் விழுவதில்லை, ஆணின் ஆணவம் என்னும் தீயை அணைக்கவே, சிந்தப்படுகிறது.

பிரபஞ்சம் மாயை என்று கூறும் பழைமைவாதிகளைக் கண்டிப்பவர் பொதுவாகவே சமூக அமைப்பு முறையிலே, மிகப் புரட்சிகரமான மாறுதல் வேண்டும் என்பதற்கான போர்முரசு, காண்டேகரின் கதைகள் ஆகும்.

சுகம் எங்கே? என்று கேட்டால் ஏழை செல்வமுடையவன், உயர்ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற பேதங்கள் ஒழிந்து, ஆண், பெண்ணை அடிமை கொள்ளும் பழக்கம் ஒழிந்து, மக்கள் நிம்மதி அடைகின்ற தன்மை இருக்கிறதே, அதுவே சுகம்! பெண்களின் வாழ்க்கையை, குடும்பப் பெரியவர்கள் சிக்கலுள்ளதாக்குவதைக் கண்டேர்கார் மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

மராட்டிய நாட்டிலே, இவருடைய மறுமலர்ச்சி தரும் ஏடுகள் போற்றப்படுவது போலவே தமிழ்நாட்டிலும், இவருக்குப் பாராட்டுதல் வளர்ந்து வருகிறது.

வாழ்க்கை! இது, மதவாதிகள், வேதாந்திகள் மட்டுமல்ல கலைவாதிகளும் மறக்க வேண்டிய ஒன்று என்பது, ஓர் வைதீகக் கோட்பாடு, ஆனேகருடைய ஆபூர்வமான திறமை, வாழ்க்கையைப் பறிக்க, ஊதாசீனப்படுத்த, அதன் மாயை, மோசம், நிலையாமை ஆகியவற்றை வற்புறுத்தவே பயன்பட்டது.

காண்டேகர், புரட்சி எழுத்தாளர் கூட்டத்தைச் சேர்ந்தவர், உரைநடை பாரதிதாசன், ஆகவே அவர் வாழ்க்கையைப்பற்றி விளக்க, அதிலே வரக்கூடிய சிக்கல்களைத் தெரிவிக்க, அந்தச் சிக்கல்களின் காரணத்தை அறிவிக்க, அவைகளைப் போக்கும் மார்க்கத்தைத் தீட்டத் தமது திறமையைப் பயன்படுத்தகிறார்.

“வாழ்க்கை என்பது ஒரு புஷ்பம். அந்தப் புஷ்பத்தின் உயர்வு எது? வண்டைக் காணப்பொழுது மயங்க வைக்கும் மதுத்துளியா?

சே! அது அல்ல! ஒவ்வொரு விநாடியும் காற்றலை மீது குதித்து ஓடும் மதுரமான நறுமணம் என்று காண்டேகர், ‘எரி நட்சத்திரம்’ எனும் நூலில் எழுதி இருக்கிறார்.

வண்டுகளை மயங்க வைக்கும் மதுபோன்றது வாழ்விலே மக்கள் கொள்ளும் பிரேமை – இது வேதாந்திகள் கூற்று, வாழ்வை வெறுக்க வேண்டுமென்று உபதேசிக்கும் போக்கு, மலரிலே மது இருப்பது போல, வாழ்விலே, மயக்கமூட்டும் தன்மை மட்டுமே இருப்பதாக வேதாந்திகள் கூறுவர். மலரின் முழுப்பயனையும் கண்டறியாதது போலவே வாழ்வின் முழுத் தன்மையையும் அவர்கள் கண்டறியாது போலவே வாழ்வின் முழுத் தன்மையையும் அவரகள் கண்டறியா பேச்சு.

அவர்களின ஊரை, மேதைகளின் மதிமொழி என்று கருதப்பட்டு, கவிதை கதை, கூத்து, எதுவாயினும் இதே கருத்தினையே பலரும் தீட்டித் தீட்டி, வாழ்வு, வெறுக்கப்பட வேண்டுவதொன்று என்ற எண்ணத்தை மக்கள் மனதிலே பதியச் செய்துவிட்டனர்.

காண்டேகர், இந்த எண்ணத்தை எப்படிச் சாடுகிறார், பாருங்கள் மதுவா, புஷ்பத்தின் உயிர்? சே! அது அல்ல! என்கிறார்.

மயக்கமூட்டும் தன்மைதானா வாழ்வின் நோக்கம் விளைவு? சே! அது அல்ல!

வேறு என்ன? காண்டேகர் கூறுகிறார்.

ஒவ்வொரு விநாடியும காற்றலைமீது ஓடும் மதுரமான நறுமணம் புஷ்பத்தின் உயிர்.

பலருக்கு இன்பம் தரும் காரியமாற்றும் தன்மை, சக்தி, வாழ்வுக்கு உண்டு.

அதனைச் செய்தலே, வாழ்வின் நோக்கம் என்பதை ஆழகாக விளக்கிவிட்டார்.

வாழ்வு ஓர் சுமை அல்ல, வாழ்வு ஓர் சந்தர்ப்பம் – பயன்படுத்திக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் காண்டேகர், இந்தக் கருத்தைப்பல இடங்களிலே வலியுறுத்தி இருக்கிறார்.

வாழ்வு பெரிதல்ல, கலைதான் பெரிது என்று பேசுபவர்களுக்குக் காண்டேகர், நிலமும் ஆகாயமும் என்ற ஓர் உவமை மூலம் அறிவுறுத்தும் தன்மை, ரசமாக இருக்கும் அவர் கேட்கிறார்.

“வாழ்க்கை என்றால் நிலம். கன்னங்கரிய மேடும் பள்ளமுமான சத்தையும் கூளமும் நிரம்பிய நிலம்.

ஆனால் அதிலிருந்துதான் தானியம் விளையும், கலை என்பது ஆகாயத்தைப் போன்றது.

ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பிரகாசித்தாலும், பழங்கள் பூமியில்தான் பழுக்கின்றன.

ஆனால், அவைகளைப் பழுக்க வைப்பது எது?
ஆகாயத்திலிருந்து மழையே பெய்யாவிட்டால்?
ஆகாயத்துக்கு மழை எங்கிருந்து போகிறது?
பூமியிலிருந்து தானே?
என்ன பதில் கூற முடியும், வறட்டு வேதாந்தக்கார்கள்!!

வாழ்க்கையைப்பற்றி முக்கியத்துவம் கொடுத்துப் பேசலாம், எழுதலாம் ஐயா!
ஆனால் வாழ்க்கை இன்பம் சூழ்ந்ததாக இருக்கவேண்டுமே, அதற்கு என்ன வழி?
வாழ்க்கையிலே எப்படி இன்பம் வரச் செய்வது, என்று கேட்பவர்கள் உண்டல்லவா?
அவர்களுக்குக் காண்டேகர், வாழ்க்கைக் கீதத்தை விளக்குகிறார், ஓரிடத்தில்.

“வாழ்க்கைச் சங்கீதம் இரண்டு கம்பிகளின் இன்னிசையால் நிறுவப்படுகிறது.

ஒன்று தொண்டு, மற்றொன்று அன்பு, தொண்டு உலகத்தைக் களிக்கச் செய்கிறது, அன்பு மனத்தைக் களிக்கச் செய்கிறது.”

இந்தத் தொண்டும் அன்பும்தான், வாழ்க்கைக் கீதத்தின் நரம்புகள், புஷ்பத்தின் உயிர், நறுமணம், வாழ்வின் மேன்மையும், அன்பு தொண்டு ஆகியவற்றிலே இருக்கிறது எவ்வளவு ஆழ்ந்த பொருள் உள்ள கருத்து.

வாழ்க்கைக் கீதத்தை விளக்கிவிட்டு, வெறும் இலட்சியவாதியாக இருந்துவிடவில்லை.

காண்டேகர் இன்றைய சமூகத்தின் நிலை அவருக்கு விளங்காமற் போகவில்லை.

இன்று சுகம் அனுபவிப்பவர்கள் யார் என்பதையும் அவர் தெரிந்து கொள்ளாமல் இல்லை.

நொந்த மனதுடன், நீங்களும் நானும், வாழ்க்கையின் ரசத்தைப் பருகும் வீணர்களைப் பற்றி என்ன கூறுவோமோ அதனைக் காண்டேகர் அழகுபட சுகம் என்பது ரசவாதிகளின் ரசக குளிகையைப் போல், கிடைப்பதற்கு அரிய ஒரு பொருள்.

அது கேவலம் கவிதையின் கற்பனையில்தான் கிடைக்கக்கூடியது.

இவ்வுலகில் மனிதத் தன்மைக்கும் சுகத்துக்கும் சம்ப்நதமே இல்லை.

இவ்வுலகில் சுகமாக இருக்கவேண்டுபவன் புலியைப் போல மற்றவர்களின் ரத்தத்தைக் குடிப்பதையே ஆனந்தமாகக் கருதவேண்டும்.

நியாயம், தியாகம் கடமை, மனிதத்தன்மை, நாணயம், நம்பிக்கை ஆகிய சொற்களை மறக்க முடியாதவன் இந்த உலகத்தில் சுகம் அனுபவிக்கத் தகுந்தவனல்ல! என்று கூறுகிறார்.

ஆஹா! எவ்வளவு சரியான சவுக்கு, பிறர் உழைப்பிலே சுகம் தேடுபவர்களுக்கு.

அண்ணாவின் புகழ்மாலை தொடரும்….

—–

பத்துப்பாட்டில் மனம் பற்றுக!

பொருநராற்றுப்படை தொடர்ச்சி…

இப்பொருநராற்றுப் படையில் அழகிய உவமைகள் பலவற்றைக் கூறுகின்றார்.

அதிற் சில வருமாறு:

(4) பத்தல் x குளம்புவழி.
(5) பச்சைX விளக்கழலுரு.
(6-8) போர்வையிற்பெர்த்திய பொல்லம் X இளஞ்சூற்செய்யோள் வயிற்றுமயிர். (9-10) ஆணித்துளை x அலவன்கண். (11-12) (யாழின்) அண்ணாவில்லாவமைவருவறுவாய் x எண்ணாட்டிங்கள்வடிவு.
(13) யாழ்த்தண்டு X பாம்பின் எடுத்த தலை.
(14-15) திவவு x கைத்தொடி. (16.18) யாழ்நரம்பு x தினையரிசியவையல். (19-20)யாழ்வனப்பு : மணமாதரின் கோலம்.
(25) கூந்தல் அறல்: நுதல் பிறை,
(26) புருவம் x வில்; கண் x மழை.
(27) வாய் X இலவிதழ்
. (28) பல் x முத்து.
(29 – 30) காது X மயிர்குறைகருவியின்கடை.
(32) தோள் X அமை.
(33) விரல் X காந்தள். (34)உகிர்கிளிவாய்.
(37) கெர்ப்பூழ் X நீர்ச்சுழி.
(39) காழ் x வண்டு.
(40) குறங்கு x பிடிக்கை.
(42) நாய்நா X சீறடி.
(43) செந்நிலன் X அரக்குருக்கு. (45)பழுத்தமரல்Xநீர்மறுகுமொக் குள். (47) பாடினி x மயிலுரு.
(51) நிழல் வலந்தவலை.
(54 – 56) பாடல் X மூவருங் கூடியிருந்த அரசவை.
(64) கொடுப்போரை நாடும் தான் X பழுமரமுள்ளியபறவை.
(69-70) துத்திப்பாம்பின்பை x கைக்கசடிருந்த தடாரி.
(74) கரிகாலன் கேளிர்போலக்கேள் கொளல்.
(78) உருகுபவை போலென்பு குளிர்கொளீஇ.
(83) அறுவை X அரவுரி
(91-93) இவ்வுடம்போடு பொருநன் ஆறுசெல் வருத்தமகலநீக்குதல் X தவஞ்செய்வோர் தம்முடம்புடனே பய னெய்தல்.
(112-113) அரிசி X முகிழ்.
(114) சோறு X விரல்.
(117 – 118) ஊன் தின்னும்பல் X கொல்லையுழுகொழு.
(125) துடி, வேழக் கன்றின் பாதம். (131)முருகற்சீற்றத்து.
(135 – 140) கரிகாலன் தவழ்கற்ற தற் றொட்டுமிகுவலி செருக்கிப்பின் நாடுசெகிற்கொள்ளுதல் X இளஞாயிறு கடலின் மீதுபகற்கதிர் பரப்பி விசும்புபடர்தல்.
(139-147) கரிகாலன் இளமையிலேயே இரு பெருவேந்தருமொரு களத்தவிய வெண்ணி தாக்குதல் : ஆளிக்குருளை முலைக்கோள்விடா மாத்திரைத் தலைக்கோள் வேட்டங் களிறடுதல்.
(144)அரவாய் வேம்பின்குழை.
(151) ஈற்றாவிருப்பிற் போற்றுபுநோக்கி.
(153-154) மாசொடுகுறைந்ததுன்னற்சிதாஅர் x பாசிவேர்.
(159) பொற்றாமரை x அகைந்தஎரி.
(165) பால்புரைபுரவி.
(213) எக்கர் x நிலவு.
(242-244) நெல்லரிந்தகுப்பை குன்று. தற்குறிப்பேற்றம் வருமாறு:(77)பருகுவன்ன வருகாநோக்கம்.
(84) மழையென மருளும்மாடம்.
(124) சிரறியவன்போற்செயிர்த்த நோக்கம்.

யாழின் பத்தல் என்னும் வடிவம், இரண்டருகுந் தாழ்ந்து நடு உயர்ந்து உள்ளது.என்கினப் “பாம்படை தலையெடு பத்தல்” யிடத்து யாழ்த்து தின்ன ஓங்கிப் போன்று உள் பாழ் அலவன் அடின் கண்போலமைந்த ஆணிய (கூ) போல் போர்க்க-க) என அளைவம் கூட்டித் வந்த நிக்கிறார்கள் : இளையற்றம் எனப் பெற்றதும் நுட்பமும் அதற்கு மானின் குளம்பு அழுத்திய இடம் உவமையாயிற்று.

வளரும்…

– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *