தாரகை இல்லா வானம் !
தமிழ் வானின் தங்க மீன்கள்
தாரணியில் மறைந்த தம்மா
அமிழ் தூய நல்லன்பை ஊட்டும்
நடராசர் இதய தெய்வம்
குமிழ்சிரிப்பும் கொள்ளை கொண்ட
குறிக்கோளாய் வளர்த்தாய் அம்மா
உமியெனக் கிடந்த எம்மை
செதுக்கிய வாழ்க்கைச் சிற்பி
அருளினை ஈன்ற தாயே
அரும் பெரும் தாய்மை நீயே
உருண்டிடும் காலத் தேரின்
ஒளிரும் அச்சாணி அம்மா
மருண்டிடும் மழலைப் பூவாய்
மடியினில் கிடந்தோம் அம்மா
இருண்ட வீடாய் அம்மா
தாரகை மறைந்த தேனோ
இல்லத்தில் நுழையும் போது
இன்முகத் தாமரை நீங்கள்
உள்ளத்தில் கண்ணீர் சிந்தி
உருகினோம் நாளும் நாங்கள்
துன்பப்பெரு வெள்ளம் சூழ்ந்தால்
தோணியாய்க் காத்த தேவி
அன்னத்தை ஈந்த கைகள்
அம்மா உன் பெருமை என்னே
மருத்துவப்பணியில் உங்கள்
மருத்துவ சேவை கண்டோம்
குருத்துவப் பணியில் என்றும்
குடிகாத்த தாய்மைக் கோவில்
பொறுப்புடன் சுற்றம் நட்பும்
புனிதமாய் போற்றும் அரசி
வறுமையாம் நாட்டு மக்கள்
வாட்டத்தை போக்கும் சேவை
பேராசிரியர் வா மு சே ஆண்டவர்
பச்சையப்பர் கல்லூரி
சென்னை .

Add a Comment