POST: 2021-09-11T11:19:09+05:30

செல்வத் திருமகன் இரவிக்கு
நலம் விளைக !

வானத்தை வில்லாக வளைக்கும் அயராத முயற்சியில் வெற்றியே கனியும் .

அருளிடம் என்னைப் பற்றி உருக்கமாகக் கேட்டீர்களாம் .
பரிவு பொங்கியது .

தாங்கள் நடத்தும் மகாகவியின் மாட்சிக்கு நினைவு நூற்றாண்டு
என்றும் வரலாற்றில் நின்று நிலைக்கும் .

தொண்டர் வாயில் துதியறிவாய்
அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்குவாயே.

தங்கள் கனவுகள் மெய்ப்பட்டு வருகின்றன .

அன்போடு
ஒளவை நடராசன்
11 9 2021

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *