POST: 2021-11-09T08:31:40+05:30

பேத்தி இனியாவுக்கு தாராப் பாட்டியின் பாடல்

கருத்தே புகுந்து கதிகாட்டும் கண்னே வருக !

கருத்தே புகுந்து கதிகாட்டும்
கண்னே வருக, மெய்ஞ்ஞானக்
கரும்பே வருக, கருணைபொழி
காரே வருக, அனந்தப்

பெருக்கே வருக, யாங்கள் பெறும்
பேற வருக, மறைசொல்கினிப்
பிள்ளாய் வருக, பிறங்கு தெய்வப்
பெம்மான் வருக, குறமடந்தை

தருக்கே வருக, மிடிய கற்றும்
தருவே வருக, மன்பதைக்கோர்
தஞ்சே வருக . எமையளிக்கும்
தாயே வருக பவப்பிணிக்கு

மருந்தே வருக, சமரபுரி
வாழ்வே வருக வருகவே
மறையின் சிரமெய்ப் பொருளான
வள்ளல் வருக வருகவே.

கண்ணா ! இனியா !!
பட்டுக்குட்டி ! செல்லக்குட்டி !!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *