POST: 2021-11-12T10:28:24+05:30

வாழ்க வசந்தா அம்மையார்
முத்து விழா வாழ்த்து

அருள் காணொளி வாழ்த்துரை (2.7.2021)

ஐந்து வாரங்களுக்கு முன்பு அருந்தமிழில் அயற் சொற்கள் என்ற என்னுடைய தொடர் கட்டுரையில் திருமதி வசந்தா சீனிவாசனைப் பற்றியும் அவருடைய அன்பு மகன்கள் இராம்குமார், கிஷோர், சதீசைக் குறித்து கல்லூரிக் காலத்தில் அவர்களுடன் மகிழ்ந்திருந்த காலகட்டத்தை விரிவான கட்டுரையை எழுதி இருந்தது என் நினைவுக்கு வருகிறது.

பெருமக்களே

திருமதி வசந்தா சீனிவாசன்
குண நலன்களின் பெட்டகமாகவும், அன்பின் வடிவமாகவும்,பண்பின் உறைவிடமாகவும் திகழும் சிறந்த மாதரசி ஆவார்கள்.

அவருடைய அக்கார அடிசிலையும்,புளியோதரையையும் உண்டு வளர்ந்தவன் என்ற பெருமிதத்தில்
அவர்கள் வாழ்வாங்கு வாழுமாறு நான் வாழ்த்துவது என்னுடைய கடமை என்பதனால் என்னுடைய மிகப்பெரிய பணி என்று அவர்களை வாழ்த்தி வணங்க கடமைப்பட்டுள்ளேன்.

அவர்களுடைய குடும்பம் ஒப்பற்ற குடும்பம்

அவர்கள் மூன்று செல்வங்களையும் வளர்த்த அப்பாங்கே நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு சான்றாக அமைகிறது.

மலைபோன்ற நம்பிக்கையும், அருமையான குணநலன்களும் இன்றைக்கு தன்னுடைய பெயரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாக தன்னுடைய முத்து விழாவை அருமந்தமாக கொண்டாடி மகிழ்வது
மூன்று செல்வங்களும் செய்கின்ற ஒரு மாபெரும் பணியாகும்.

தன்னலம் இல்லாமல் உழைக்கின்ற அந்த ஆற்றலை கிஷோருக்கும், சதீஷ்க்கும்,இராம்குமாருக்கும் அவர்கள் கற்றுக் கொடுத்தது எல்லாம் என் நினைவில் உள்ளது.

மிகப்பெரிய வழக்கறிஞராக, கவிஞராக என் அருமை நண்பர் சதீஷ் திகழ்ந்து கொண்டிருப்பது
எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாகும்.

கிஷோரும் அதேபோல கேட்டவுடன் செய்கின்ற பாங்கு உடையவர்.

இந்தி மொழியில் தலைசிறந்த வித்தகராக வங்கியில் மாபெரும் பொறுப்பில் இருக்கும் இராம்குமாரும் அம்மையார் வசந்தாவின் ஈடற்ற செல்வங்களாகும்.

அவர்கள் நினைத்த
நினைப்புகளுக்கெல்லாம் அரணாக எப்பொழுதும் இருந்த திரு சீனிவாசன் அவர்களையும் நான் இப்போது நினைத்து உருகுகிறேன்.

வசந்தா அம்மையார் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க வாழ்க என்று வாழ்த்தி முத்து விழா, வைரவிழா, நூற்றாண்டு விழா காண வேண்டும் என்று வாழ்த்தி அமைகிறேன்.

வணக்கம்…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *