POST: 2021-12-09T09:26:36+05:30

நல்லறிஞர் நூல்கள் நாட்டுடைமையாக்கம்!

31.08.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அறிவிப்பு

02.11.2021 அன்று நாட்டுடைமையாக்கம் செய்து பரிவுத் தொகையினை வரையறை செய்த நல்லறிஞர் குழுக் கூட்டத்தில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அலுவல் சார் உறுப்பினராகப் பங்கேற்பு

08.12.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழறிஞர்களான
சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன்,
புலவர் இளங்குமரனார்
மற்றும்
புலவர் செ. இராசு
ஆகியோரின் குடும்பத்திற்கு பரிவுத் தொகையாக தலா ரூ.15 இலட்சம் மற்றும் திரு. சங்கரவள்ளி நாயகம், திரு. முருகேச பாகவதர், ஆகியோரின் குடும்பத்திற்கு பரிவுத் தொகையாக தலா ரூ. 10 இலட்சம் என மொத்தம் ரூ.80 இலட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *