முரசொலி-19.12.2021
பக்கம் 5
இனமானச் சிகரம் வாழ்க !
எனக்கு அவ்வப்போது சிந்தனைக்குரிய
சேதி தரும் போதிமரங்கள்
சிலருண்டு .
இனமானப் பேராசிரியர்
க. அன்பழகன்
பச்சையப்பர் கல்லூரியிலுருந்து வந்த போதிமரம் .
மாணவப் பருவத்திலிருந்தே எங்களைப் போன்ற
அன்பர்களைக் கழகக் கொள்கைகளில் முறுக்கேற்றியவர்
என்று சொன்னால் மிகையாகாது.
இனமானப் பேராசிரியரின் உருவத்தை
சிலையிலும் – உள்ளத்தை இலக்கியக் கலையிலும்
இணைத்துக் காட்டி இந்த நூற்றாண்டு விழாவை
ஒப்பற்ற விழாவாக அமைத்த பெருமை
மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களையே சாரும் .
வாழ்க இனமானச் சிகரம் !
வளர்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெரும்புகழ் !!
ஒளவை நடராசன்

Add a Comment