POST: 2022-01-25T09:21:26+05:30

நாகத்தின் நல்லொளி இருண்டதே !

தொல்லியல் திலகமாகவும் –
உலகு புகழும் கல்வெட்டாய்வாளராகவும் –

தொல்லியல் துறையைத் தமிழகத்தில் தோற்றுவித்த நாளிலிருந்து தலைமை தாங்கிய நல்லறிஞர் .நாகசாமி
( 10 8 1930 – 23 1 2022 ).
என் இனிய நண்பர் .

சிந்தனை வேறுபாடுகளுக்கிடையிலும் செழித்த புலமை வாய்ந்த பேராசிரியர் .

நலிந்த நிலையிலும் என்னோடு அவ்வப்போது உரையாடி வந்தவர் .

90 வயதைத் தாண்டுவேனா என்று கேட்டார் .

தொல்லியல் துறையில் நல்லறிஞர் – இளைஞர் பலர் ஓங்கி உயர்வடைய வழிகாட்டியவர் .

வடமொழி ,தென்மொழி ,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெரும்புலமை கொண்டவர் .

காஞ்சிப்பெரியவர் ,
திருமதி கபில வாட்சாயனர் ,
அறிஞர் நாகராஜ ராவ் ,
அயல் நாட்டறிஞர் சிலர்
எனப் பெருமக்களிடம் நெருங்கிப் பழகியவர் .

வடமொழிப்புலமையால் சிலப்பதிகாரத்துக்குப் புதுவிளக்கம் கூறியவர் .

அறிஞர் நாகசாமியின் இழப்பு ஈடுசெய்யவே முடியாதது .

ஆழ்ந்த இரங்களோடு
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *