POST: 2022-02-04T09:56:10+05:30

பேராசிரியர் மா வே பசுபதி – மறைவு

திருப்பனந்தாள் அணி செய்த திலகம் !

சிவந்த மேனியும் – வெற்றிலை மென்றபடி சிவந்த வாயும் , உரைநடை , ஓலைச்சுவடி
,கல்வெட்டு ,புராண இதிகாசங்கள் ஆகிய இலக்கிய வடிவங்களைக் கற்றுத் தேர்ந்த புலமையும் கொண்டவர் .

இராமலிங்கர் பணிமன்றம் அறிஞர் பலரைக்கண்டு பழக எனக்கு வாய்ப்பளித்தது ..

அறிஞர் கா ம வேங்கடையா அவர்களிடம் நான் பழகியிருக்கிறேன் .

திருப்பனந்தாள் திருமடத்தில் வெளிவந்த திருக்குறள் பதிப்பு பேராசிரியர் பெருமையைக் காட்டும் .

திருப்பனந்தாள் கல்லூரி முதல்வராய் ,
சென்னையில் டாக்டர் உ வே சா பதிப்புகளை ஆராய்ந்த நூலகத் தந்தையாய் விளங்கிய போது அவர் நுண்ணிய புலமையை எண்ணி வியந்திருக்கிறேன் .

என் மகன் அருளை எப்போது எங்கு பார்த்தாலும் பாராட்டி நாம் ஒரு குருகுலம் என்பாராம் .

கவிதையில் நகைச்சுவை ததும்ப அறிஞர் பசுபதி பாடிய கவிதைகள் எப்போதும் நினைவில் நிற்பவை .

சைவ சித்தாந்தம் மட்டுமின்றி அனைத்திலும் மதிநுட்பம் கொண்டவர் .

கா ம வே புதல்வர்கள் எனக்குத் தெரிந்து மூவரும் பல்வேறு திறமைகளில் மிகுந்த தகுதியானவர்கள் .

சீலமும் செறிவும் கொண்ட அவர் மறைவு மாளாத்துயரம் தருகிறது !

துயரத்துடன்

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *