இசைத்தேனருவி மறைந்தது !
தீங்குரலால் திசையெங்கும் புகழ் மிளிர வாழ்ந்த லதா மங்கேஷ்கர் தாம் பாடிய மொழிகளுக்குத் தனித்தனியாக இன்னமுது ஊட்டியவர் .
இந்தித் திரையுலகு லதா மங்கேஷ்கரின் குரலுக்கு ஏங்கித் தவித்தது .
இந்திய மாநிலங்கள் அனைத்தும் தம் புகழ்க்கம்பத்தில் கொடிகளைப் பாதியில் இறக்கிப் புலம்பியது.
இப்படி ஓர் இன்னிசை அருவி
இனி ஒருமுறை காணக் கிடைக்குமா என்று அனைவரும் அரற்றினர் .
அவரோடு உடன்பிறந்த ஆஷா போன்ஸ்லேவுக்கும் அதே குரல் வளம் வாய்த்தது .
இசைத்தேன் காதில் பாயும்
இன்னொரு நூற்றாண்டு !
மலரும் என்று எதிர்பார்த்து
ஏங்குவது தவிர வேறு வழியில்லை
துயரோடு
ஒளவை நடராசன்

Add a Comment