POST: 2022-04-08T10:26:20+05:30

அமுதசுரபி – ஏப்ரல் மாத – இதழ் – 1.4.2022. திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்

தமிழறிஞர் அவ்வை நடராஜனோடு உங்களுக்கு இலக்கியப் பரிச்சயம் உண்டா ?
– ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

அவர் நான் பெரிதும் மதிக்கும் தமிழறிஞர்களில் ஒருவர்.

அவரோடு சில மேடைகளில் பேசியிருக்கிறேன்.

திருந்திய உச்சரிப்பு, இலக்கண அமைதி குலையாத சிக்கலற்ற வாக்கிய அமைப்பு,

ஆய்வுப் பார்வை, அரிய தகவல்கள் என அவரது மேடைப் பேச்சின் சிறப்புகளைப் பட்டியலிட முடியும்.

என்றாலும் முக்கியமான சிறப்பம்சம் என்பது அவரது பேச்சில் தென்படும் கட்டுக்கோப்பு.

இன்றைய இளம் பேச்சாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய கலை அது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *