POST: 2022-04-09T09:18:16+05:30

தினமணி நாளிதழில் 1.4.2022 அன்று வெளியான நூற்றாண்டு கண்ட ரீடர்ஸ் டைஜஸ்ட் மாத இதழ் குறித்து
வெளியான கட்டுரைக்கு

தினமணியின் 8 4 2022 வரப்பெற்ற வாழ்த்து ….

இமாலய சாதனை

உலகப் புகழ் பெற்ற ‘ ரீடர்ஸ் டைஜஸ்ட் ‘ இதழ் நூற்றாண்டைக் கடந்தும் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருப்பதே அதன் தரத்திற்கு சான்றாகும்

( ‘ நூற்றாண்டு காணும் பல்சுவைப் பனுவல் ‘ துணைக்கட்டுரை 1-4-2022 ).

சிந்தனைக்கு விருந்தளிக்கும் செய்திகளை வழங்குவது இதன் தனிச்சிறப்பாகும்.

‘ ரீடர்ஸ் டைஜஸ்ட் ‘ படித்து தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டவர்கள் ஏராளமானோர்.

இந்த இதழின் பத்திகள், வாசிப்போரை தன் வயமாக்கும் தன்மை கொண்டவை.

இந்த இதழ் கடந்த நூறு ஆண்டுகளில் ஏறத்தாழ 3,500 கட்டுரைகளை வெளியிட்டிருப்பது ஓர் இமாலய சாதனையாகும்.

ஒரு நூற்றாண்டு கண்ட ‘ ரீடர்ஸ் டைஜஸ்ட் ‘ இன்னும் பல நூற்றாண்டுகள் காணட்டும்.

என்.பி.எஸ். மணியன்,
மணவாள நகர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *