ஸ்ரீராம் இலக்கிய கழகத்தின் பாரதியார் விழா, குயில் பாட்டு பாடுவோம் நூல் வெளியீட்டு விழாவின் (23.4.2022) செய்திப்பரல்கள்…..
தினமணி 24.4.2022
தினமலர் 24.4.2022,
மக்கள் குரல் 25.4.2022 தினசெய்தி 26.4.2022
உரத்த சிந்தனை 26.4.2022
தினமணி பக்கம் எண் : 3
ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2022
விருது
ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற பாரதி புகழ் பரப்பும் தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில்
(இடமிருந்து) பங்கேற்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி பிரதாப், பேராசிரியர் உலகநாயகி பழநி, கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு, சொற்பொழிவாளர் சுகி சிவம், உரத்த சிந்தனை உதயம் ராம், மாநிலக் கல்லூரி முதல்வர் கல்யாணராமன்,திருவையாறு சிவக்குமார், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் அவ்வை அருள்,ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகத் தலைவர் ஜி.சுந்தரேசன், டாக்டர் பாலசாண்டில்யன்.
தினமலர் பக்கம் எண் : 5
சென்னை
ஞாயிறு 24.4.2022
மகாகவி பாரதியார் 140 ஆம் பிறந்த நாள்
மகாகவி பாரதியாரின் 140 ஆம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் சார்பில் மகாகவி பாரதியார் புகழ் பரப்பி வருபவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, சென்னை தி.நகரில் நேற்று நடந்தது.
இதில் இடமிருந்து:
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி பிரதாப், பேராசிரியை உலகநாயகி பழநி, கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு, பேச்சாளர் சுகி சிவம், உரத்த சிந்தனை உதயம் ராம், சென்னை மாநில கல்லுாரி முதல்வர் ராமன், திருவையாறு சிவகுமார், எழுத்தாளர் அவ்வை அருள், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகத்தின் தலைவர் சுந்தரேசன் மற்றும் எழுத்தாளர் பாலசாண்டில்யன்.
மக்கள் குரல் பக்கம் எண் : 8
பாரதியாரின் 140 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில் பாரதி புகழ் பரப்பும் விருது, கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு, சூரியபிரகாஷ், உதயம் ராம், உரத்த சிந்தனை அமைப்பு, உலகநாயகி பழனி, திருவையாறு சிவக்குமார், நரம்பியல் மருத்துவர் மெய்கண்டான் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
விழாவில் ஒளவை அருள் எழுதிய “பாரதியின் குயில் பாட்டு” நூலினை சொல்வேந்தர் சுகி சிவம் வெளியிட்டார்.
விழாவில் பொன்னேரி பிரதாப், உரத்த சிந்தனை உதயம் ராம், சென்னை மாநில கல்லுாரி முதல்வர் ராமன், திருவையாறு சிவகுமார், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகத்தின் தலைவர் சுந்தரேசன் மற்றும் எழுத்தாளர் பாலசாண்டில்யன், ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் ஆர்.தியாகராஜன், குழுமத்தின் இயக்குநர் ஜி.சுந்தரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினசெய்தி பக்கம் எண் : 8
ஸ்ரீராம் குழுமம் நடத்தும் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா
34 ஆண்டுகளாக மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் ஸ்ரீராம் நிறுவன குழுமத்தின் ஸ்ரீராம் பாரதி காலை இலக்கியக் கழகம், சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பாரதி புகழ் பரப்பும் மூன்று அறிஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
23.4.2022 (சனிக்கிழமை) அன்று சென்னை, தி.நகர், ‘கிருஷ்ண கான சபா’வில் நடைபெற்ற விழாவில் டாக்டர் ஒளவை அருள் அவர்கள் ஸ்ரீராம் குழுமம் நடத்திவரும் பாரதியாரின் பிறந்தநாள் விழாவின் சிறப்புகளை விளக்கி அறிமுகவுரை ஆற்றிகையில்,
சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் அண்மையில் தமிழக அரசின் ‘தனித்தமிழ்த் தந்தை’ அடிகளார் விருது பெற்றவராவார் என்றும், உலகெங்கும் உள்ள தமிழர்கள் போற்றும் தலைசிறந்த பேச்சாளரும், சிந்தனையாளருமான, ‘சொல்வேந்தர்’ சுகி சிவம் இம்முறை 6 தகுதி வாய்ந்த அறிஞர்களுக்கு ‘பாரதி’ விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தவுள்ளார் என்றும்,
இளமையான புலமைவாய்ந்த தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இராமன், சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வராக வீற்றிருப்பது தமிழுலகுக்குக் கிடைத்த பெரும்பேறு என்றும்,
தகுதி வாய்ந்தவர்களைத் தேடி மேடையில் அழகு பார்க்கும் பாங்கில் ஸ்ரீராம் நிறுவனம் தனித்து நிற்கிறது என்றும்,
பம்பரம் போல் சுழன்று பணியாற்றும் குழுமத்தின் ஆலோசகர் ‘திறன் வேந்தர்’ திரு. சுந்தரேசன் என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் முனைவர் இராமன் தன்னுடைய சிறப்புரையில், பாரதியின் பாநலத்தின பெருமிதத்தையும், தமிழுலகத்தில் நீக்கமற அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் பாரதி என்றும், தன்னுடைய மாநிலக் கல்லூரியில் நூறாண்டுகளுக்கு முன்பு தமிழ்த் தாத்தா உ.வே.சா. தமிழ்ப் பேராசிரியராக இருந்த போது நடந்த பாராட்டு விழாவில் பாரதி கலந்து கொண்டதையும், இன்றைக்கும் கல்லூரியில் நிறுவப் பெற்றுள்ள தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் திருவுருவச் சிலையில் பாரதியின் முத்திரைப் பாடல் வரிகள் தான் கல்வெட்டாகப் பொறித்திருக்கிறோம் என்று பெருமிதமாகத் தெரிவித்தார்.
விருது பெற்றவர்கள் சார்பில் ஏற்புரையாற்றிய சங்க இலக்கிய ஆய்வறிஞர், கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு, ஸ்ரீராம் நிறுவனத்தின் வாயிலாக வழங்கப்பட்ட இவ்விருது மிகவும் பெருமை தரக்கூடியது என்றும், எழுச்சி மிக்க பாரதியின் பாடல்களை மென்மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தீவிரமாக எடுத்துச் செல்லும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் இந்தச் சமூகத்தில் அறத்தை நிலைநாட்ட திருவள்ளுவரின் அறங்களோடு பாரதியின் வீரியத்தையும் எடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் தெரிவித்தார்.
கலைமாமணி ‘சொல் வேந்தர்’ சுகி சிவம், மகாகவி பாரதியாரின் புகழ்மிக்க படைப்புகளின் சிறப்புகளை விளக்கிப் பேருரையாற்றினார்.
முனைவர் ஒளவை அருள் எழுதிய “பாரதியின் குயில் பாட்டு” நூலினை சொல்வேந்தர் சுகி சிவம் வெளியிட்டார்.
ஸ்ரீராம் நிறுவனம் சார்பாக பாரதி புகழ் பரப்பும் விருதுகளை, கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு, டாக்டர் கலைமாமணி சூரியபிரகாஷ், திரு.உதயம் ராம், உரத்த சிந்தனை அமைப்பு, பேராசிரியர் உலகநாயகி பழனி, திருவையாறு சிவக்குமார், நரம்பியல் மருத்துவர் மெய்கண்டான் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் ‘பத்மபூஷண்’ திரு.ஆர்.தியாகராஜன், குழுமத்தின் இயக்குநர் திரு.ஜி.சுந்தரேசன் மற்றும் கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.—–
உரத்த சிந்தனை – ஏப்ரல் 2022 – பக்கம் எண் : 11
பாரதியின் குயில் பாட்டு – நூல் வெளியீடு
சென்னை ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகத்தின் சார்பில் மகாகவி பாரதியின் 140 வது பிறந்தநாள் விழாவில் சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் முனைவர் இராமன் தலைமையில் முனைவர் ஒளவை அருள் எழுதிய “ பாரதியின் குயில் பாட்டு ” நூலினை சொல்வேந்தர் சுகி சிவம் வெளியிட்டார்.
ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் ‘ பத்மபூஷண் ‘ திரு.ஆர். தியாகராஜன், குழுமத்தின் இயக்குநர் திரு.ஜி.சுந்தரேசன் மற்றும் கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
ஸ்ரீராம் – குழுமத்தின் பாரதி விருதுகள்
மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் சார்பில் மகாகவி பாரதியார் புகழ் பரப்பி வரும் டாக்டர் கலைமாமணி சூரியபிரகாஷ், நரம்பியல் மருத்துவர் மெய்கண்டான் பேராசிரியை உலகநாயகி பழநி , கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு , உரத்தசிந்தனை உதயம்ராம், திருவையாறு சிவகுமார் ஆகியோருக்கு பாரதி விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் முனைவர் இராமன் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.
சொல்வேந்தர் சுகி சிவம் சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் அவ்வை அருள், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகத்தின் தலைவர் சுந்தரேசன் மற்றும் எழுத்தாளர் பாலசாண்டில்யன் பங்கேற்றனர்.

Add a Comment