POST: 2022-05-24T09:28:30+05:30

முந்தி நின்றவருக்கு இதுவா முடிவு !:

இனிய நண்பரும் – இயலிசைப் பேராசிரியரும் –
பழகுதற்கு இனிய பண்ணாராய்ச்சித் திலகமாகவும் திகழ்ந்த
பெருந்தகை
மா வைத்தியலிங்கத்தின் திடுமென்று நிகழ்ந்த மறைவு
ஆற்ற முடியாத துயரத்தைத் தருகிறது .

என் மறைவுக்கு அவர் தன் இன்குரலால்
திருமுருகாற்றுப்படை ஓதுவார் என்று
நான் எதிர்நோக்கியிருந்தேன் .

தகுதியால் முந்தி நின்ற அவர் –
மறைவிலும் முந்தி நின்று எனக்குப்
பெரும் பிரிவை அளித்துள்ளார் .

இதற்கு மேல் என்னால் எதையும்
கூற இயலவில்லை ! .

அவருடைய அருமைத் துணைவியார் ,
அன்பு உறவுச்செல்வங்கள்
அழுது புலம்புவதை என்னால்
தாங்க முடியவில்லை !

மக்கட்செல்வங்களுக்கும் –
தோளோடு தோள் நின்ற
இசைத்தோன்றல் கோடிலிங்கத்துக்கும்
என் ஆறுதல்
எப்போதும் உண்டு .

தமிழவேள் சிவாலயம் மோகன்
எப்படியெல்லாம் போற்றிக்காத்தார்
என்பதை
நான் நன்கறிவேன் ! .

ஆறாத துயரோடு
ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *