POST: 2022-06-02T10:02:02+05:30

2.6.2022 வியாழக்கிழமை
முரசொலி-பக்கம் 10

நீங்கா நினைவு!

கலைஞர் பெருமகனே ……
எங்கள் கண்ணீரைத் துடைத்தவரே !

உங்கள் நினைவுகளின்
தாலாட்டில் உறங்குகின்றோம்….
உங்கள் தநயனின்
தலைமையில் வாழ்கின்றோம்….

கலைஞர் பெருமானே !

நீங்கள் இனம், மொழி,நாடு காக்க
இரவு பகலாய் உழைத்தீர்கள்

உங்கள் உழைப்பையெல்லாம்
உங்கள் திருமகன் –
எங்கள் முதல்வர்
ஓய்வின்றிச் சுமக்கின்றார்

இந்நாட்டைக் காக்க வந்த
இனமான வரிப் புலியின்
பொன்னேட்டைக் காணாமல்
புறப்பட்டுச் சென்றீரே

முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்
முழங்குகின்ற திராவிடத் தித்திப்புச் சொல்
ஒவ்வொன்றும் மொத்த இமயத்தை
மூழ்கடிக்கச் சொல்லும் !

கத்து கடல் சூழ்ந்து, காணுமிடமெலாம் பரவி
கவிதையா, கட்டுரையா, திரைக்கதையா,
தீப்பறக்கும் கனலுரையா,திருக்குறளா,
அகம் புறமா,
கொட்டிக் குவித்த மடலுரையா ?

எல்லாம் குவித்த
எல்லையிலாப் பெருங்கடலே…
அன்னைத் தமிழை
ஏன் தனிமையிலே தவிக்கவிட்டாய் ?

கடற்கரை ஓரத்தில்
கண்ணுறங்கும் இடத்திற்கும்
எங்கள் முதல்வர் போராடி
இட ஒதுக்கீடு பெற்றாரே !

எங்கள் தமிழினத்தின்
நற்றாயே !
உங்களை என்றும்
வணங்குகிறோம்.

நீங்கா நினைவோடு !

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *