15.8.2022, திங்கட்கிழமை
தினசெய்தி பக்கம் 4
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 66
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ் வழி தனி வழி !
அனைவரும் பேசும் வாத்ஸ்யாயனர் தம் நூலில் எண்வகைத் திருமணங்கள் பற்றிப் பேசுகிறார். அவை பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் காந்தர்வம், அசுரம், பைசாசம், இராக்கதம் என்று அழைக்கப்படுகின்றன.
பிரமம் எனும் வகை அணிகளால் அலங்கரிக்கப்பட்ட தன் மகளைத் தந்தை அழைத்து ஒருவனுக்கு மனைவியாகக் கொடுத்தல் பிரசாபத்தியம் என்பது ” நீங்கள் இருவரும் இணைந்து உங்களுக்குரிய தருமத்தைச் செய்வீர்கள் ” என்று ஒருவன் சொல்லிச் சேர்த்து வைப்பது.
ஆரிடம் என்பது பொருளையும் பசுவையும் எருதையும் பெண்ணோடு கொடுப்பது.
தெய்வம் என்பது வேள்வி செய்வோனுக்கு வேள்வித் தீயின் முன்னால் பெண்ணைக் கொடுப்பது.
காந்தர்வம் என்னும் வகையை வாத்ஸ்யாயனர் வருணிப்பது கருதற்குரியது.
ஒரு பெண்ணை விரும்பும் ஆண் அவளைத் தனியாகச் சந்தித்துப் பேச முடியாத நிலையில் இன்னொரு பெண்ணின் துணையுடன் அவளைப் பலவகை உத்திகளைக் கையாண்டு வழிப்படுத்தி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி அவளைச் சேர்கிறான்.
வேதமறிந்த ஒரு பிராமணன் வீட்டிலிருந்து தீயைக் கொண்டு
வந்து, தருப்பைப் புல்லை நிலத்திலே பரப்பி, நூல்கள் விதித்தபடி சடங்குகளைச் செய்து, தீயை மும்முறை வலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டபின்தான் அவளுடைய தாய தந்தையர்க்கு அது பற்றிய செய்தியைச் சொல்லி அனுப்புகிறான்.
அக்கினியால் பார்க்கப்பட்ட திருமணத்தை மாற்றமுடியாது என்பது அந்நாளில் கூறியுள்ள விதியாதலால் திருமணம் பெற்றோர்கள் அறியாமல் நிகழ்த்தப்படுகிறது. அவளைச் சேர்ந்தபின் அவளுடைய உறவினர்களுக்கும் மெதுவாக அவன் திருமணம் பற்றி அறிவிக்கிறான்.
குடும்பப் பெயர் கெட்டுவிடக் கூடாதென்பதாலும் அரசனது தண்டனைக்கு அஞ்சியும் அவளுடைய உறவினர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
அவர்களுக்கெல்லாம் பல பரிசுகளைக் கொடுத்தும் அன்பு காட்டியும் தன் வழிக்குக் கொண்டு வந்து விடுகிறான்.
இவ்வாறு தான் காதல் திருமணத்தை அவன் நடத்துகிறான்.
திருமணம் நடைபெறுதற்குப் பெண்ணின் தாய் இசையவில்லையானால் அவளிடம் இன்னொரு மணமகனைப் பற்றிய குறைகளைச் சொல்லி அவளுடைய சம்மதத்தைப் பெறுதல் நடைபெறும்.
பெண்ணின் சகோதரன் அவனை ஒத்த வயதினனாகவும் பிறர் மனைவியரிடமும் பரத்தையரிடமும் தொடர்பு கொண்டவனாகவும் இருந்தால் அவனுக்கு இடையூறுகள் நேர்ந்தபோது உதவி செய்து அவனைத் தன்வயப்படுத்தி அவனைக் கொண்டு அப்பெண்ணை ஒரு தனியிடத்திற்கு வரவழைத்து அவளோடு இணைந்து பின் திருமணத்தை நடத்திக் கொள்கிறான்
.
இதனைத்தான் காதல் திருமணம் என்றும் காந்தர்வ விவாகம் என்றும் காமசூத்திரம் விளக்கும்.
இதற்கும் தமிழ் அகவிலக்கியங்கள் காட்டும் களவு மணத்திற்கும் உள்ள வேறுபாடுகளைச் சொல்லத் தேவையில்லை.
நேர்மையும் நெஞ்சக் கலப்பும் கொண்ட தமிழர் மணமாகும் தமிழர் குணம் .
இந்த நெறிகள் தமிழர் வகுத்த வாழ்வு பற்றி முத்தமிழறிஞர் கலைஞர் எழுதியதைக் காணலாம் .
களவியலுக்காமெனக் காப்பிய மேலோன் தீட்டிக் காட்டும் களவொழுக்க இயல்பு எனும் நூற்பாவுக்குத் தமிழ்
உளங்கொண்ட பெரியோன் வெள்ளை வாரணர் உரை வகுத்துச் சொல்வதைக் காணின்
மறையோர் தேயத்து மணமுறை எட்டு என்று தொல்காப்பியர் சுட்டிக் காட்டுவது ஏன் என்று புரியும்.
குறையுடைய அவ்வழிகள் முழுவதையும் நிறையுடைய தமிழர் ஏற்றாரில்லை என்றும்
வடமொழியாளர்க்கே அந்த முறையனைத்தும் வகையாகப் பொருந்துமென்றும் – அவற்றில்
ஒன்றிரண்டே தமிழர் மணமுறைக்கு ஒத்துப் போனதென்றும் உரையாளர் மொழிகின்றார்.
எட்டுவகை மன்றல் முறை என்னவென்று சுட்டும்போது: அய்ம்பதை நெருங்கிடும் ஆண்மகன் ஆறிரண்டு பன்னிரண்டு வயதாளை மணப்பதெனில்” பிரமம் ” என்று பெயர் பெறுமாம். ” பிரசாபத்தியம் ” எனும் பெயரோ,
பெண் கொடுத்தல் என்றும் பெண்னுக்குப் பகவும் எருதும் சிலையாகப் பொன்னாலே செய்து தருதல் ஆரியர் என்றும் ஆசிரியன் ஒருவன் வேள்வி மூட்டச் செய்து அதன் முன்னே ஆராணங்காம் காணிக்கையாக்கம். ”
தொக. மணா என்றும் ஆனும் பண்ணும் அவரவரும் தாமே எதிர்ப்பட்டு அனைத்து மகிழ்ந்து ஆயிற்று எல்னம் எனவோ, அதனைக் காத்தான என்றும் மற்றும் கொல்லேற்றுக் கொம்பொடித்து அடக்கியவனை கற்றவில் வித்தைப் போட்டியிலே கரைகாண்டு வென்றவனை பற்றுண்டு பொருள்மேல் எனப் பேழை கேட்டுப் பெற்றவனைக் கற்றுணர்ந்த பெண் கழுத்தில் கூடத் தாலி கட்டச் செய்வதுண்டு .
அதற்குப் பெயர் ” அரை மணமென்பார் ! அவன் விருப்பத்திற்கு மாறாக நடத்தும் மணம் இராக்கத மென்றும்
வயதில் மூத்தவளை தூங்குவதே வழக்கமாகக் கொண்டவளை, பயமின்றி மதுவருந்திக் களிப்பவளைக்
கட்டி வைக்கும் மண நிகழ்வுக்கு அட்டியின்றிப் பெயர் வைத்தார் ” பைசாச மென்று
இந்த எட்டுவகை மணமுறை ஏற்பாட்டை ஏற்காத காரணத்தினால் தான்
மறையோர் தேயத்து மணமுறை இவையென்று கூறி மறைமுகமாக உணர்த்துகின்றார் காப்பியர் என்றுரைத்து மணமுறை இவை பெரும்பாலும் தமிழர்க்குரியதன்றென மதிப்புமிகு பெரும்புலவர் மறுப்புரையே எழுதிவிட்டார்.
களவு என்பது கையாடல்; சிறிய கொள்ளை ; கயவர் செயல் அவை என்று கருதி வெறுப்பது இயல்பு !
அவ்வியல்புக்கு மாறாக ஆணழகன் ஒருவனும் ஆரணங்காம் ஒருத்தியும், அருகருகே நின்றாலும்,
உடற்புணர்ச்சிக்கு அவசரம் காட்டாமல், உள்ளங்களின் புணர்ச்சியாலே உவகைகொண்டு
நிறை கடவாமல் நினைந்துருகி மறைமுகமாய்ச் சந்தித்து மகிழ்வர் என்றும்
ஆங்கதற்கான துணை நின்று ஆவன செய்தல் பாங்கன், பாங்கியர் பாசமிகு பணிகள் என்றும்
அறம் பொருள் இன்ப மொடு அய்ந்தொழுக்கமிணைந்த அன்பும் கலந்து அருங்காதல் பிணைப்புத் தோன்று மென்றும் ஆருயிர் இரண்டும் ஓருயிராய் ஆகுமென்றும் யாழ் மீட்டும் இசைவல்லார் – ஆழ்கடல் முத்துப் போல் அருந்தமிழ்ச் சொல்லெடுத்து வாழ்க
திரச் செல்வனை வாழ்த்திடுவர்: ”
களவியல் ” குற்றமன்று: உளமொன்று படுவதாலே தாழ்வொன்றும் இல்லையெனப் பாழ்மனப் பிறவிகட்கும்
விளக்கம் சொல்லி விரித்து வைப்பார் களவியல் நிகழ்வுகளை !
” இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக்கூட்டம் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே ”
( பொருளதிகாரம் – களவியல் – நூற்பா : 1 )
காமக்கூட்டம் = காதலர்கள் அன்புச் சந்திப்பு
குறிப்பு :
தொல்காப்பியனார் காலத்தே வடவர் நாகரிகம் தமிழகத்தில் மெல்ல மெல்லப் பரவத் தலைப்பட்டமையால் மறையோர் தேஎத்து மணமுறைக்கும் தென்றமிழ் நாட்டு மண முறைக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளங்கவுணர்த்தல் அவரது கடனாயிற்று.
ஒருவன் ஒருத்தியென்னும் இருவரிடையே உண்டாகும் கூட்டுறவை ஒருதலைக்கேண்மையாகிய கைக்கிளை, ஒத்த கேண்மையாகிய அன்பினைந்திணை, ஒவ்வாக் கேண்மையாகிய பெருந்திணையென மூவகையாகப் பகுத்துரைத்தல் தமிழ் மரபு. அவை பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என எட்டு வகையாகப் பகுத்தல் வடநூல் மரபாகும்.
( பேராசிரியர் வெள்ளைவாரணனார் )
தொடர்புக்கு :
thamizhavvai@gmail.com

Add a Comment