POST: 2022-09-17T10:31:00+05:30

1) மக்கள் குரல்
15 9 2022

பக்கம் எண் : 7

தமிழ் வளர்ச்சித் துறை ஏற்பாடு

அண்ணாவின் 114வது பிறந்த நாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

சென்னை, செப்.15

பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாள் மற்றும் உலகத்
தமிழாராயச்சி நிறுவனத்தின் நிறுவனர் நாள் விழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் தலைமையில் நடைபெற்றது.

ஐக்கிய நாட்டு மூத்த அரசியல் அலுவலர், இரா. கண்ணன் ’அண்ணா’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ந. அருள் நோக்கவுரையாற்றினார்.

பேரறிஞர் அண்ணா குறித்த சிறப்புக் கருத்தரங்கம் பொதுப் பணித் துறையின் உதவி செயற்பொறியாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் நடைபெற்றது.

கருத்தரங்கில் ’கலையாண்ட அண்ணா’ என்னும் தலைப்பில் திருத்தணியில் உள்ள கே. வினாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இரா. வேதநாயகி,

’திரையாண்ட அண்ணா’ என்னும் தலைப்பில் திரைப்பட இயக்குநர் பிருந்தா சாரதி, ’

ஏடாண்ட அண்ணா’ என்னும் தலைப்பில் இந்தியக் கடலோரக் காவற்படை இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கவிஞர் இனியவன்,

’தமிழாண்ட அண்ணா’ எனும் தலைப்பில் உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழர் புலம் முனைவர் து. ஜானகி, ’

நாடாண்ட அண்ணா’ என்னும் யர், தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் கோ. பன்னீர் செல்வம்,

’புகழாண்ட அண்ணா’ என்னும் தலைப்பில் உதவிப் பேராசிரியர், தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலம் நா. சுலோச்சனா ஆகியோர் உரையாற்றினர்.

50% தள்ளுபடியில் புத்தகங்கள்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதல் (15ந் தேதி) அக்டோபர் 14ந் தேதி வரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் நிறுவன வெளியீடுகள் 30 முதல் 50% கழிவுத் தொகையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தாய் மண்ணுக்குப் பெயர் சூட்டிய தனயன், மாணவர்களுக்கு அண்ணா, அண்ணாவின் மேடைத் தமிழ், அண்ணா வழியில் அயராது உயர்வோம், அண்ணாவின் வாழ்விலே ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், அண்ணாவின் மனித நேயம், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவும் தமிழ்ச் சமுதாயமும், அண்ணாவின் அடிச்சுவட்டில் ஆகிய தலைப்புகளில் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சும் போட்டியும் தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளன.

வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ரூ .5 ஆயிரம், 2ம் பரிசு ரூ. 3 ஆயிரம், 3ம் பரிசு 2 ஆயிரம் வழங்கப்படும். மேலும், சிறப்புப் பரிசாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.

2) தினமணி
15 9 2022
பக்கம் எண் : 3

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அண்ணா பிறந்த நாள்

சென்னை , செப். 15:

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள்விழா சென்னை தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்துறைத்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் ‘ அண்ணா ‘ எனும் தலைப்பில் ஐ.நா. அவை மூத்த அரசியல் அலுவலர் இரா.கண்ணன் பேருரையாற்றினார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ந. அருள் நோக்கவுரையாற்றினார்.

அண்ணா குறித்த சிறப்புக் கருத்தரங்கம் பொதுப் பணித் துறையின் உதவி செயற்பொறியாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் நடைபெற்றது .

கருத்தரங்கில் ‘ கலையாண்ட அண்ணா ‘ எனும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் இரா. வேதநாயகி,

திரையாண்ட அண்ணா ‘ எனும் தலைப்பில் திரைப்பட இயக்குநர் பிருந்தா சாரதி, ‘

ஏடாண்ட அண்ணா ‘ எனும் தலைப்பில் கவிஞர் இனியவன் உள்ளிட்டோர் பேசினர்.

இதையடுத்து அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அண்ணாவை மையப்படுத்தி பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

முன்னதாக பேராசிரியர் ஆ.மணவழகன், ச. மாலதி ஆகியோர் எழுதிய ‘ ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு அற நெறிமுறைகள் ‘ என்ற நூலை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன் வெளியிட்டார்.

கழிவு விலையில் நூல்கள்: அண்ணாபிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 14 வரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் நிறுவன வெளியீடுகள் 30 சதவீதம் 50 சதவீதம் வரையிலான கழி வுத் தொகையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

3) தினசெய்தி
16 9 2022

பக்கம் எண் : 9

சென்னை .செப் 16

தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆம் பிறந்த நாள் பெருவிழா நடைபெற்றது.

அறிவுலக மேதை பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 ஆம் பிறந்த நாள் மற்றும் உலகத் தமிழாராயச்சி
நிறுவனத்தின் நிறுவனர் நாள் விழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடத்தில் நேற்று கொண்டாடப்பட்டது .

விழா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் தலைமையில் நடைபெற்றது .

‘ அண்ணா ‘ எனும் தலைப்பில் முனைவர் இரா. கண்ணன் மூத்த அரசியல் அலுவலர், ஐக்கிய நாட்டு அவை, விழாப் பேருரையாற்றினார் .

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ந. அருள் நோக்கவுரையாற்றினார்

பேரறிஞர் அண்ணா குறித்த சிறப்புக் கருத்தரங்கம் பொதுப் பணித்துறையின் உதவி செயற்பொறியாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் நடைபெற்றது.

கருத்தரங்கில் ‘ கலையாண்ட அண்ணா ‘ எனும் தலைப்பில் திருத்தணியில் உள்ள தளபதி கே. வினாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் இரா. வேதநாயகி,’

திரையாண்ட அண்ணா ‘ எனும் தலைப்பில் திரைப்பட இயக்குநர் பிருந்தா சாரதி,’

ஏடாண்ட அண்ணா ‘ எனும் தலைப்பில் இந்தியக் கடலோரக் காவற்படை இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கவிஞர் இனியவன், ‘

தமிழாண்ட அண்ணா ‘ எனும் தலைப்பில் உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழர் புலம் து. ஜானகி, ‘

நாடாண்ட அண்ணா ‘ எனும் தலைப்பில் உதவிப் பேராசிரியர், தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் கோ. பன்னீர் செல்வம், ‘

புகழாண்ட அண்ணா ‘ எனும் தலைப்பில் உதவிப் பேராசிரியர், தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலம் முனைவர் நா. சுலோச்சனா ஆகியோர் உரையாற்றினர்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 14 வரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் நிறுவன வெளியீடுகள் 30 – 50 விழுக்காடு கழிவுத் தொகையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் வியாழக்கிழமையன்று பள்ளி / கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது .

வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ரூபாய் 5,000 இரண்டாம் பரிசு ரூபாய் 3,000 மூன்றாம் பரிசு 2,000 வழங்கப்படும் மேலும், சிறப்புப் பரிசாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா 2,000 வழங்கப்பட உள்ளது .

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ந. அருள் நோக்கவுரையாற்றினார்.
அவர் பேசியதாவது :-

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் என்று எண்ணும்போதே நமக்குப் பெருமிதத்தால் தமிழ் சிலிர்ப்பு ஏற்படுகிறது.

பேரறிஞர் அண்ணாவால் தான் தமிழினம் பாராட்டு பெற்றது.

தந்தை பெரியார், அதட்டி எழுப்பினார்.

அண்ணாவோ அன்பால் வருடி தமிழ் உணர்வுகளைத் தூண்டினார்.

பெரியாரைச் சாக்ரடீஸ் என்று அழைப்பது போல, அண்ணாவை அறிவுக்கதிர்கள் ஆயிரம் கொண்ட அரிஸ்டாடில் என்று புகழ்ந்து சொல்லலாம் .

சிட்டுக்குருவிகள் விட்டு விடுதலையாகி விண்ணில் விரும்பியபடி பறக்கட்டும் என்றெல்லாம் உவமைத் தொடர்களை அடுக்குத்தொடர்களைத் தமிழகம் அதற்கு முன்னால் கேட்டதில்லை.

புத்துணர்ச்சியின் சிற்பியாகத் திகழ்ந்த பேரறிஞர் அண்ணா பகுத்தறிவுத் தென்றல் சுயமரியாதைச் சுடர் தன்மான இயக்கத்தின் கனல் பேரறிவின் நிழல்.

அவர் ஊட்டிய உணர்வு, மூட்டிய கனல் என்றும் அணையாது சுடர்விடச் செய்வது தமிழினத்தின் கடமையாகும்.

இவ்வாறு அருள் பேசினார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் தலைமையுரை ஆற்றினார்.

அவர் பேசியதாவது :

தமிழ் நிலத்துக்கு ‘ தமிழ்நாடு ‘ எனப் பெயர் கேட்டு வலியுறுத்தி ” தமிழ்நாடு ” என்று என் மாநிலத்தை அழையுங்கள் என்று 1963 – ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங்களவையில் பல சான்றுகளைக் காட்டிக் கருத்தாழமிக்க உரையை நிகழ்த்தினார்.

1967 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் நாள் அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சென்னை மாகாணத்திற்குத் ‘ தமிழ்நாடு ‘ என்ற பெயர் சூட்டும் தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியப் பெருமை பேரறிஞர் அண்ணாவைச் சாரும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனர் நாளில் இதை சொல்லிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

4): மக்கள் குரல்
16 9 2022

பக்கம் எண் : 6

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனர் நாள்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா

சென்னை, செப். 16

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அண்ணாவின் 114ஆம் பிறந்த நாள் மற்றும் உலகத் தமிழாராயச்சி நிறுவனத்தின் நிறுவனர் நாள் விழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அண்ணா கருத்தரங்கக் கூடத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

விழாவில் ‘அண்ணா’ எனும் தலைப்பில் ஐக்கிய நாட்டு அவை, மூத்த அரசியல் அலுவலர் இரா. கண்ணன் விழாப் பேருரையாற்றினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ந. அருள் நோக்கவுரையாற்றினார்.

அண்ணா குறித்த சிறப்புக் கருத்தரங்கம் பொதுப் பணித் துறையின் உதவி செயற்பொறியாளர் நெல்லை ஜெயந்தா தலைமையில் நடைபெற்றது .

கருத்தரங்கில் திருத்தணியில் உள்ள தளபதி கே. வினாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் இரா. வேதநாயகி, திரைப்பட இயக்குநர் பிருந்தா சாரதி, கடலோரக் காவற்படையைச் சேர்ந்த இனியவன், உதவிப் பேராசிரியர்கள் து. ஜானகி, கோ. பன்னீர் செல்வம், நா. சுலோச்சனா ஆகியோர் உரையாறினர்.

விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ந. அருள் பேசுகையில்,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் தோற்றுவித்தப் பெருமையும் அண்ணாவைச் சார்ந்ததாக இருப்பதினால் இன்று நிறுவனர் நாள் என்று நீங்கள் மகிழ்ச்சியாக்க் கொண்டாடுவதைப் பாராட்டுகிறேன்.

தமிழ்ச் சமூகத்திற்குப் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து அறிவால் வெற்றிபெற்று, தமிழால் உயர்ந்து நின்ற அண்ணாவின் சிந்தனையான கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு! எனும் தாரக மந்திரத்திற்கேற்ப உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பணிகள் நடைபெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

5) இந்து தமிழ் திசை
16 9 2022

பக்கம் எண் : 10

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு

தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள்
தள்ளுபடி விலையில் விற்பனை

சென்னை

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 – வது பிறந்த நாள் விழா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் நாள்விழா சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன் தலைமை வகித்தார். ‘

அண்ணா ‘ எனும் தலைப்பில் ஐ.நா. சபையின் மூத்த அரசியல் அலுவலர் முனைவர் இரா. கண்ணன் உரையாற்றினார்.

தொடர்ந்து, விழாவின் நோக்கம் குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ந.அருள் உரையாற்றினார்.

பிறகு, பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் அண்ணா குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்.15 ( நேற்று ) முதல் அக்.14 – ம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில், நிறுவன வெளியீடுகள் 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு இந்த விழாவில் வெளியிடப்பட்டது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *