POST: 2022-11-24T09:27:24+05:30

முரசொலி பக்கம் 5

தேன் கலந்த தீந்தமிழ் வான் கலந்ததே

உரைத்தமிழ் வேந்தர் என்னும்
உயர்துரை சாமி பெற்ற
நிறைமதிச் செல்வர்; எங்கள்
நெடுந்தமிழ்க் குன்றம், நீலத்
திரைகடல் திரண்டாற் போலத்
தீந்தமிழ் கொட்டித் தீர்க்கும்
நிறைகுடம் மறைந்தார் என்று
நெஞ்சிலே நெருப்பை வைத்தார்!

பஞ்சிலே வைத்தாற் போலப்
பற்றிதான் எரிந்த சோகம்
கொஞ்சமா? ஒருகூட்டுக்குள்
கொஞ்சிய காலம் என்ன
கொஞ்சமா? குறைதீர்ப் பாயா
கோவிந்தா என்று கேட்டுத்
துஞ்சிய காலம் மீண்டும்
தோன்றுமா.. ஐயோ! ஐயோ!

தென்றலாய் வீசி எங்கள்
திசைகளைக் குளிர வைத்து
வென்றவர் சென்றார்” என்னும்
வெந்கழல் செய்றி கேட்டு
மன்றெலாம் கண்ணீர் சிந்தி
மயக்குறும் என்றால்..அந்தோ!
என்றனின் கதியைச் சொல்ல
இல்லையே தமிழில் வார்த்தை!

எந்தமிழ்ப் பொழிவென் றாறும் “இதுபிழைப் பொழிவோ” என்று முத்தமிழ்ச் சுவைஞர் சித்தமி முற்றுமே கலங்க வைப்பார்! வித்தகம் விரிப்பார்: நெஞ்சில் விணையாய்ச் சிரிப்பார்! கோடிப் புத்தகம் போலி ருப்பார்!
புகழ்விட்டுப் போய்விட்டாரே!

இன்னியச் சொற்கூட்டங்கள்
எழிலுற மேவும் நாவில்
மின்னய மொழிதூ வாமல்
அடர்த்தியாய்ப் பேசுவாரே!
புண்ணியப் பேறாய் வாய்த்துப்
பூச்சரம் போலம ணந்து
திண்ணிய ராயிருந்த
தென்னவர் போய்விட் டாரே

வண்டமிழ் சுரந்த கொண்டல்
வற்றுமா? வளங்கொழிக்கும்
வண்டுலாம் சோலை கூட
வாடுமா? தலைநிமிர்ந்து
பண்டுலா செய்த சங்கப்
பாட்டுநம் கண்ணை வீட்டு
விண்ணுலா செநுமா? எங்கள்.
விதியிது தாளோ அம்மா!

அவ்வையார் குப்பம் பெற்ற
அமிழ்தமா வழந்த தையோ!
செவ்வையாய் உயர்ந்து நின்ற சிகரமா இடிந்த தையோர் எவ்வுல கத்தும் சென்ற ஏற்றமா முடிந்த தையோ!
செவ்விதழ் விரித்த ஞானச்
சிற்பமா விழுந்த தையோ!

பண்ணிலே பொருள்க வந்த
பான்மையில் எந்நே ரத்தும்
என்னிலே கலந்தி ருந்த இலக்கிய ஞானி இன்று
விண்ணிலே கலந்தார் என்னும் வேதனைத் தீயில் வீழ்ந்து கண்ணெனும் கடலில் மூழ்கிக் கையற்று நிற்கின் றேனே!

ஆவினை இழந்த கன்றாய்
அறைவோ தமிழ் படித்தேன்.
பூவினை இழந்த பெண்ணாய்ப் புலம்பவோ உட்டரில டுத்தேன். நாவினை இழந்து விட்ட நாவலன் ஆகி விட்டேன்.
சாவினை என்ன செய்வேன் சான்றவர் போய்விட் டாரே!

தனக்கொரு நடைகொண்டாரே
தண்டமிழ்ப் படைகொண்டாரே கணக்கிலாச் சீர்கொண்டாரே கவித்துவத் தேர்கொண்டாரே எனக்கொரு மனங்கொண்டாரே! எனக்குளே குடிகொண்டாரே! நினைக்கவே முடியா வண்ணம் நெடுந்தகை விடைகொண்டாரே!

சாலவே இனித்த எங்கள்
சாக்கரைத் திரளும் எங்கே?
ஏலமாய் மணந்தி ருந்த
இலக்கிய மேயம் எங்கே?
ஞாலமே ஏத்தி நின்ற நவரசத் தேனும் எங்கே?
காலமே..தமிழா வீட்டுக் காவியம் எங்கே எங்கே?

கோடைவாய் விரிந்த எங்கள் குளிர்தரு நிழல்தான் எங்கே?
மேடைவாய் வீசி வாழ்ந்த மேன்மையின் வடிவம் எங்கே? ஏடெலாம் ஆட்சி செய்த இருந்தமிழ்ச் செங்கோல் எங்கே? நாடெலாம் நடந்த எங்கள் நடராசச் செம்மல் எங்கே?

நீர்நசை தவிர்க்க வந்த நெல்லியங் கனிதான் எங்கே?
வேர்நனி சிறக்க வந்த விரிவுரைத் திலகம் எங்கே?
நேர்மையின் பிம்பம் எங்கே? நீடிய இன்பம் எங்கே?
கூர்மையின் ஆணி எங்கே?
கொண்டஆண் வாணி எங்கே?

ஐயகோ..என்னைவ ளர்த்த அன்னையும் எங்கே? என்னை ஐயனாய்த் தூக்கித் தோளில் ஆடிய பாதம் எங்கே?
மெய்யெலாம் புளகம் செய்த மேதைதான் எங்கே? என்னைப் பையவே வார்த்தெடுத்த
பல்கலைக் கழகம் எங்கே?

தலைவருள் தலைவரான
தனிப்பெருந் தலைவர் எங்கள் கலைஞரின் கனிநெஞ் சத்தில் கரைந்தவர் எங்கே? என்றும் இளைஞராய் வீற்றி ருந்த இயற்றமிழ்ச் சொற்கோ எங்கே? இளையாழ்வான் கதறு கின்றேன் என்னுயிர் இராமன் எங்கே?”

எடுத்தவோர் சொல்லுக் குள்ளே
எத்தனை பொருள்சொல் வாய்நீ
மடுத்தவர் செவிகட மெல்லாம் சிரபுஞ்சி மழையா வாய்தி! அடுத்தவர் களஞ்சி யத்தில் அனுதினம் பொன்னா வாய்நீ விடுத்தெமைச்சென்றாய் அந்தோ வேறுலகில் என்னா வாய்நீ?

கல்வியிற் பெரியார் நீரே!
கம்பனில் மூழ்கினீரே! சொல்லினில் கீரர் நீரே! சுந்தரக் குறஞ்சொன் னீரே!
வெல்வதில் அவ்வை யாரே! விளைவதில் புறநா னூறே! பல்துறை அறிவின் பேறே! பதறவைத் தீரே! யைா!

ஏங்குமே உம்மைத் தேடி எழுதுகோல்! எங்கே என்னைப்
பாங்குறச் செய்தார் என்றே
படபடத் தழுமே அந்த
ஆங்கில மொழியும் கூட!
அறிவரைக் காணா மல்போய்த்
தேங்குமே தமிழு ரர்ச்சி! சிற்றடியேன் என்செய் வேனோ?

தாமரைப் பொய்கைக் குள்ளே
தவழ்ந்திடும் அன்னங் கள்போல் சாமமோ பகலோ உம்மில் சங்கமித் திருந்தோம் ஐயா!
பூமது வுண்டோம்; உங்கள் புன்னகைத் தமிழ்மோ கித்துத் தாமுரை கற்றோம்: இன்று
தாயிலா நிலையைப் பெற்றோம்!

உண்டிடும் உணவும் சோறும் உகந்திடும் உறவும் நட்பும் கொண்டிடும் பொருளும் தாராள குணங்களை நீயே தந்தாய்! மண்டிடும் புலமைச் செல்வம்
மாண்புறும் தலைமைப் பண்பை அண்டிட வைத்தாய்; அந்தோ! அழுகிட என்னைத் தாயோ?

நயவுரை நம்பி என்றே
பயவுரை ஆற்றும் என்னை பறவுரை ஆற்ற வைத்தாய்!
இயற்கையின் அழைப்பை ஏற்றாய்
எந்தாய்நீ போய்விட டாயே!
பாற்கடல் இல்லா விட்டால்
நம்பிநீ முன்மொ ழிந்தாய்! தயவுரை தான்கற் பித்துந தலையினை நிமிர வைத்தாய்!

பரமனும் துயில்வ தெங்கே? நூற்கடல் நீயில் லாமல் நூற்பொருள் உறைவ தெங்கே? நாற்கடல் பொங்கும் நாளின் நல்லுரை கேட்ட தெங்கே? மேற்புலவர் இல்லா எங்கள் மேதைநீ போன வதங்கே?

அரசுலாம் அவையம் எங்கும்
அறிவினால் கீர்த்திபெற்றாய்! அரசியற் கப்பால் என்றும் ஆளுமைச் சீர்த்தி பெற்றாய் அரசுகள் விருத ளிக்க அளவிலா நோற்றி பெற்றாய்! அரசுதரும் மரியா தைக்குள் அடடா..நீ பூர்த்தி பெற்றாய்!

தமிழினம் போற்றும் நல்லார்
நாதிகள் அறிய வல்லார்
தமிழுணர் வதிகம் உள்ளார்.
தளபதி ஆணை யிட்டார்; தமிழ்ச்சிறப் புற்றீர்! எங்கள் தலையெலாம் வணங்கப்பெற்றர் தமிழக வரலாற் றேட்டின் தலைப்பிலே வாழ்வீர் ஐயா!

முராதன் கட்டில் மீது
முத்தமிழ்ப் புதல்வன் தூங்க
அரசனோ கவரி வீசி
அரும்புகழ் பெற்றான் அன்று!
அரசரில் அரச ரான
அருந்தமிழ் முதல மைச்சர்
சிரசிலே உம்மை வைத்துச்
சிறப்புகள் செய்து விட்டார்?

அண்ணனுக் குரிய சீரை
அமைவுறச் செய்து விட்ட மன்னனைப் போற்று கின்றேன்! மண்டியிட்டு வணங்குகின்றேன்! பன்னருங் கலைஞானத்தைப் பராவிய தளப திக்கே
எண்ணருங் காலம் தொண்டை இயற்றிநான் வாழ்வேன் ஐயர்!

நன்னுடல் உயிர னைத்தும் தமிழ்க்கென வாழ்ந்த உங்கள் பொன்னுடல் சுமக்கும் பேற்றைப் புல்லியன் பெற்றேன், ஆனால் என்னுடல் ஆவி எல்லாம் எப்படித் தளர்ந்தேன் என்றே என்னுடை நாவால் சொல்ல இயலுமோ.., அந்நோ.. அந்தோ!

கற்பகச் சோலை போலக் கனிந்தவர் போய்விட் டீரே!
அற்புதம் புரிந்த நாவை அசைத்தவர் போய்விட் மரே! மற்றையாய் வெளிச்சம் தந்த கதிர்வாணர் போய்விட் டீரே! ஒற்றையாய் நிற்பதைப்போல் உணர்வளித்துப் போய்விட் டீரே!

கான்கலந் திருக்கும் காற்றாய்க்
கண்களில் வாழ்வீர்: இன்பத்
தேன்கலந் திருக்கும் பூவாய்
சிந்தனைக் குள்ளே வாழ்வீர்
வான்கலந் திருந்தே எம்மை
வாழ்த்துவீர் ஐயா! உங்கள்
மாண்புகழ் பேசிப் பேசி
மறுபடி உயிர்ப்போம் ஐயா!.

டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.

மேனாள் ஒன்றிய இணை அமைச்சர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *