POST: 2022-11-29T09:58:52+05:30

தின செய்தி

திங்கள், நவம்பர் 25,2022

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 81

கலைஞர் புகழ் வணக்கம்

முளைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.

இடம்: மியுசிக் அகாடமி, சென்னை நாள் : 04.09.2018
கலைஞர் புகழ் வணக்கம் .
ஔவை நடராசன் பேச்சு

இந்த நாள் நம்முடைய மனதெல்லாம் நெருக்கத்தில், துன்பத்தில், துபரத்தில் துடித்துக் கொண்டுடிருக்கிற நாளாக இருக்கிறது.

ஆயிரம் நிகழ்ச்சிகளைத் தமிழ் முழுதறிந்த தன்மைபாளராகத் திகழ்ந்த அந்த தனிப்பெரும் தலைவரின் புகழை எந்த வகையிலும் எடுத்துச் சொல்லலாம்.

அவர் அறியாத தமிழ் இல்லை.

அவருக்கு தெரியாத சங்கப்பாடல்கள் இல்லை.

அவர் எழுதாத வரி விளக்கம் இல்லை, ஒன்று மட்டும் சொல்லுகிறேன்.

கோப்பு என்பதை பார்கிறபோதுகூட அவருடைய இலக்கியத்திறன் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதற்கு ஒரு சான்று நான் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன்.

ஏதோ ஒரு கோப்பில் விதி இதற்கு இடம் தர வில்லை என்று நான் எழுதி அனுப்பியிருந்தேன்.

மறுநாள் காலை முதல்வர் எழுதுகிறார்

விதியை மதியால் வெல்ல தெரியாதா?

இதைவிட நாட்டு மக்களுக்கு நலம் செய்கிற தொடர் இருக்க முடியுமா?

இன்னும் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.

திண்டுக்கல் அருகே குஜிலிபாளையம் என்று ஒரு பகுதி இருக்கிறது.

குஜிலிபாளையம்
என்ற சொல்லை மாற்ற வேண்டும் அதை என்ன பொருள் என்று விளங்கவில்லை என்று அந்த கோப்பு வந்தது நானும் என்னால் முயன்ற வரையிலும் பார்த்து, குஜிலி என்று சொன்னால் குஜராத்தியர்கள் குடிநீர் கடை வைத்திருந்த இடம் என்பதனால் அந்த கடை வைத்திருந்த இடத்தின் பெயர் குஜிலிப்பாளையம் என்று வந்திருக்கிறது.

இதனை மாற்றுவது என்று சொன்னால் திண்டுக்கல் பகுதியை சார்ந்தது என்பதற்காக குறிஞ்சிபாளையம் என்று மாற்றலாம் என்று முதலமைச்சரிடம் பணிந்து இந்த கோப்பு அனுப்பப்படுகிறது.

வின்ஸ்டன் சர்ச்சிலை சொல்லுவார்கள்

அவர் தலைமை அமைச்சராக இருந்தது மட்டும் இல்லை பெரிது, அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் ஆறு தொகுதிகள் தான் அவருக்கு ஆங்கில இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்று தந்தது.

உலகத்தில் சர்ச்சிலுக்கு அடுத்து மாசே துங் சொல்லுவார்கள்

அப்படிப்பட்ட இலக்கியமனம் உடையவர்கள் என்று. இந்த இரண்டு பேரிடம் காணாத ஒரு திறன் நம்முடைய கலைஞர் பெருமானுடைய பெரும் திறமை என்று சான்று ஒன்று சொன்னால்

அவருக்கு அரசியல் தெரியும், இலக்கியம் தெரியும்.
கலை தெரியும்.
சிந்தனை தெரியும்.
எண்ணுகிற எண்ணங்களை யெல்லாம் எப்படி என்று எடுத்துக் காட்டவும் தெரியும்,

அவர் சிந்திய எழுத்துகளின் துளி தான் என்னை போன்றவர்களை எல்லாம் துணை வேந்தராக ஆக்கியது.

12 மணிக்கு நம்முடைய சண்முகநாதன் தொலைபேசியில் கேட்டார்.

பொருதடக்கை வாளெங்கே என்ற தொடர் எங்கே வருகிறது என்று.

எனக்கு கேட்டால் எதுவும் நினைவுக்கு வராது.

நான் அவரிடம் சொன்னேன்

பொருதடக்கை வாளெங்கே பொதுவாக போட்டு விட்டால் போகிறது.

யார் அதை கவனிக்க போகிறார்கள் என்றேன்.

சண்முகநாதன் சொன்னார் உங்களுக்கு வேண்டுமென்றால் தூக்கம் வரும்.

கடை திறக்க விடியற்காலை வரை எனக்கு தூக்கம் வராது,

அந்த தொடரின் பொருள் தெரிந்தால்தான் எனக்கு தூக்கம் வரும்.

அந்த குஜிலிபாளையத்தை பற்றி நான் சொன்னேனே அதற்கு ஒரு விளக் கம் எழுதியிருந்தார்.

குறிஞ்சிபாளையம் என்று மாற்றுவதில் குற்றம் இல்லை.

ஆனால் குஜிலி என்ற சொல் வருகிறபோது அதற்கு பங்கஜம் என்பதை பங்கயம் என்று மாற்றுவதை போல குபிலம்பாளையம் என்று மாற்றவேண்டும்.

சிலப்பதிகார சிந்தனை அதைத்தான் சொல்லுகிறது.

இது ஒரு கோப்பில் எழுதியது.

நான் நினைக்கிறேன்

இன்றுதான் இந்தி நாளிதழில் ஒரு கட்டுரை படித்தேன்

ரைட்டர் சேக்ஸ்பியன் என்று கலைஞரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

எ ஸ்கலர் சேக்ஸ்பியன் அவருக்கு தெரியாத கருத்துகளே இல்லை.

அவர் எதை சொன்னாலும் அதில் ஒரு துளி இருக்கும்.
சிந்தனை இருக்கும்.
ஒளி இருக்கும்,
ஆற்றல் இருக்கும்

புறநானூற்றில் அவருக்கு பிடித்த ஒரு பாடலைச் சொல்லி நான் முடிக்க விரும்புகிறேன்.

அவர் சொன்னார்

ஒரு மாமன்னன் மறைந்த போது அந்த சங்க புலவன் எப்படி புலம்பினான் என்றால்.

வேந்தன் என்று சொல்லுவதா? மக்களுடைய உயிர் என்று சொல்லுவதா?

நாட்டு மக்கள் நாயகன் என்று சொல்லுவதா?

எவ்வாறு சொல்லுவேன் என்று புலம்பியதைப் போல

நாடன் என்போம்
ஊரன் என்போம் பாடில்
விழுகடல் சேற்பன என்போம் யாங்கனும் முடி வோம் ஓங்குவார் காதை என்று புறநானூற்றுப் புலவன் புலமபியதைப் போல அவர் தொடாத துறை இல்லை.

எண்ணிப்பார்த்தால் எழுபது ஆண்டிற்கு முன்பு கூட நீதியரசர் பேசும்போது எனக்கு நினைவுக்கு வந்தது.

புமாலை நியே புழுதி மண்மேலே வினோ வந்தேன் தவழ்ந்தாய் அந்த பாடலில் மாமன்மார்கள் மூவர் தம்பி உன் மாமன் கன்னத்தில் முத்தம் மாரி பொழிந்திடுவாய் அந்த தொடர் எப்படி வருமென்றால் வெள்ளியினால் செய்த ஏட்டில் நல்ல வைரம் எழுத்தாணிக் கொண்டு தெள்ளுதமிழ் பாடம் எழுது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு அந்த தொடர்தான் தமிழ் இயக்கத்தை உருவாக்கியது.

தமிழ் வளர்ச்சியை உருவாக்கியது.

அது தான் தமிழ் எழுச்சியை தந்தது.

எனவே தமிழகம் கலங்கியிருக்கிறது அறிவு உலகம் புலம்பியிருக்கிறது. புலவர் உலகம் இல்லையே என்று தனிக்கிறது இவ்வளவு துடிப்பிற்கும் கூட நம் முடைய கவிப்பேரரசு சொன்னது போல ஒரு நூற்றாண்டைப் புதைத்து இருக்கிறோம்.

பத்து பல்கலைக்கழகத்தைப் புதைத்து இருக்கிறோம்.

ஆயிரக் கணக்கான நூல் நிலையங்களைப் புதைத் திருக்கிறோம்.

யார் இந்த தமிழகத்தைக் காக்க முடியும் என்று எண்ணி கலங்குகிற இருட்டில் தான் நம்மையெல்லாம் தங்கவைத்து சென்று யிருக்கிறத் தங்கத் தலைவருக்கு நம்முடைய

தமிழ்தான் துணையாக இருக்கும்.

அவருடைய வழி முறைகளில்தான் காத்திருந்து அடமையை ஆற்றி செழிப்பாக முடியும் என்று அவரே வழி காட்டியிருக்கிறார்

ஒன்று சொன்னால், தம்பிக்கு என்று அண்ணா எழுதியிருக்கிறார்.

அந்த நாளுக்கு அது சரி கோடிக்கணக்கான தங்கைகளும் மகளிர்களும் தாய்மார்களும் நம் முடைய கழகத்தில் இருக்கிறார்களே அதை எப்படி சொல்லுவது என்றால் அவர் ஏற்கௌவே முடிவு செய்திருக்கிறார் என்று பொருள். அன்று பிறந்த சொல் தான் உடன்பிறப்பே என்பதாகும்.

உடன்பிறப்பே என்ற சொல்லுகிற சொல்லில் தம்பி, தங்கை, தமக்கை அண்ணான், மாமன், மைத்துனன் அனைத்து உறவுகளும் அதில் அடங்கும் என்று காட்டியதையெல்லாம் இப்படி நினைக்க நினைக்க நெஞ்சம் பொங்குகிறது,

இந்த கலங்குகிற மனத்தை தேற்றுகிற கரங்கள் பெருக வேண்டும் என்று சொல்லி வாய்ப்பை தந்த கவிப்பேரரசு நெஞ்செல்லாம் மணக்கும் இந்த புகழ் வணக்கத்தை சொல்லி வாய்ப்பைதந்துயிருக்கிறார்கள்.

அதை எண்ணிப்பார்த்தால் தமிழகத்தினுடைய இல்லங்களில் உள்ளங்களில் வாழ்வியல் நடைமுறையில் சிந்தனையில் எல் லாத் துறைகளிலும் எங்கும் நிறைந்திருக்கும் கலைஞர் பெருந்தகைக்கு என் வணக்கம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *