POST: 2022-12-15T10:50:55+05:30

தினமணி – 13 12 2022
திருச்சி – தஞ்சாவூர் பதிப்பு
பக்கம் எண் : 5

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் :
புதிய தலைவர் நியமனம்

சென்னை, டிச. 12:

ஒய்எம்சிஏ பட்டிமன்றம் அமைப்பின் புதிய தலைவராக
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்
ந.அருள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனத்தை அந்த அமைப்பின் துணை தலைவரான பேராசிரியர் இ.மறைமலை முன்மொழிந்தார்.

ஒய்.எம்.சி. ஏ.வில் கடந்த 77 ஆண்டுகளாகப் பேச்சுக்கலை வளர்க்கும் பைந்தமிழ்ப் பெரு மன்றமாக, ‘ ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ‘புகழ் பெற்றுள்ளது.

கடந்த 1981 – ஆம் ஆண்டு முதல், நாற்பது ஆண்டுகளாக ” செவ்வாய் தோறும் செந்தமிழ் விருந்து ” படைக்கும் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இரா .பி. சேதுப்பிள்ளை இந்த அமைப்பின் முதல் தலைவராகவும்,

எழுத்தாளர் அன்புப்பழம்நீ முதல் செயலாளராகவும் பொறுப்பு வகித்தனர்.

இந்த நிலையில் அந்த அமைப்பின் தலைவராக இருந்த தமிழறிஞர் அவ்வை நடராசன் கடந்த நவ.21 – ஆம் தேதி மறைந்தார்.

இதையடுத்து தற்போது புதிய தலைவராக ந.அருள் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினசெய்தி – 14 12 2022
பக்கம் எண் : 2

செய்தி துளிகள்…

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தின்
புதிய தலைவராக ஔவை அருள் நியமனம்

சென்னை,டிச. 14 –

புகழ்வாய்ந்த சென்னை ஒய். எம். சி. ஏ. வின் ஒன்றான தமிழ் பட்டிமன்றத்தின் புதிய தலைவராக ஒளவை அருள் நியமனம் பெற்றுள்ளார்.

நியமனத்தை பட்டிமன்றத்தின் துணை தலைவரான பேராசிரியர் மறைமலை முன்மொழிந்தார்

1981 – ஆம் ஆண்டு முதல் கடந்த 40 ஆண்டுகளாக செவ்வாய் தோறும் செந்தமிழ் விருந்து படைக்கும் மன்றம் ஒய்.எம். சி .ஏ .பட்டிமன்றத்தின் ஒப்பற்ற தலைவராக பத்மஸ்ரீ அவ்வை நடராஜன் இப்பெருமன்றத்தை பாங்குற தலைமை தாங்கி வந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வட திசையில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் தமிழ் தலை நிமிர்ந்து நிற்கும் எசுபிளனேடுவில் கடந்த 77 ஆண்டுகளாக பைந்தமிழ் பெருமன்றமாக ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் புகழ்பெற்றுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் செந்தமிழ் பேராசிரியர் சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை
பட்டிமன்றத்தின் முதல் பெரும் தலைவராவார்.

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தின் முதல் செயலாளராக அன்புப்பழம் நீ இருந்தார்.

அவருக்கு பிறகு செயலாளராக பேரறிஞர் கே. பக்தவச்சலம் ஐம்பதாண்டிற்க்கும் மேலாக செயலாளராக பணியாற்றினார்.

கடந்த ஈராண்டுகளாக சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் தாமரைக்கண்ணன் செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *