POST: 2022-12-22T10:53:14+05:30

நாளொன்றில் நயத்தகும் நிகழ்ச்சிகள் நான்கு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 21.12.2022 புதன் கிழமை காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலக செய்தியாளர் அறையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்

புதுதில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியலுக்குத் தனித் துறை தொடங்கிட வைப்பு நிதியாக ரூபாய் 5 கோடிக்கான காசோலையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், பேராசிரியர் குமாரசாமி மற்றும் பேராசிரியர் அறவேந்தன் ஆகியோரிடம் வழங்கினார்.

வாழும் தமிழறிஞர்களான
திரு. நெல்லை செ. திவான்,
திரு. விடுதலை இராஜேந்திரன்,
திரு. நா. மம்மது மற்றும்

மறைந்த தமிழறிஞர்கள்
திரு. நெல்லைகண்ணன்,
திரு. கந்தர்வன் என்கிற நாகலிங்கம், திரு. சோமலெ,
முனைவர் ந. இராசையா,
தஞ்சை திரு. பிரகாஷ்
ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகையினை வழங்கினார்.

அரியலூர் திரு சி சிவசிதம்பரம், இராணிப்பேட்டை கவிஞர் மா. சோதி, இராமநாதபுரம் புலவர் அ. மாயழகு, ஈரோடு திரு. முத்துரத்தினம்,
கடலூர் திரு.ஆ.நாகராசன்,
கரூர் முனைவர் கடவூர் மணிமாறன், கள்ளக்குறிச்சி திரு. இரா துரைமுருகன்,
கன்னியாகுமரி புலவர் சு கந்தசாமி பிள்ளை,
காஞ்சிபுரம் திரு. இரா எல்லப்பன்(மறைவு),
கிருஷ்ணகிரி திரு. ஆ. இரத்தினகுமார்,
கோயம்புத்தூர் திரு. மானூர் புகழேந்தி,
சிவங்கை முனைவர் தேனப்பன், செங்கல்பட்டு திரு.எம்.கே. சுப்பிரமணியன்,
சென்னை திருமதி வே. மாணிக்காத்தாள்,
சேலம் திரு இரா, மோகன் குமார், தஞ்சாவூர் திரு. ஆறுமுக சீதாராமன், தருமபுரி கவிஞர் கண்ணிமை, திண்டுக்கல் திரு. துரை தில்லான், திருச்சிராப்பள்ளி திரு. க. பட்டாபிராமன்(மறைவு), திருநெல்வேலி திரு வ. பாலசுப்பிரமணியன்,
திருப்பத்தூர் திருமதி தெய்வ. சுமதி, திருப்பூர் திரு. அ. லோகநாதன், திருவண்ணாமலை திரு. க. பரமசிவன்,
திருவள்ளூர் திரு. செ. கு. சண்முகம், திருவாரூர் திரு. இரெ. சண்முக வடிவேல்,
தூத்துக்குடி கவிஞர் அ. கணேசன், தென்காசி திரு. ஆ. சிவராம கிருஷ்ணன்,
தேனி திரு. தேனி சீருடையான், நாகப்பட்டினம் திரு. மு. சொக்கப்பன், நாமக்கல் திரு. சி. கைலாசம்,
நீலகிரி திரு. போ. மணிவண்ணன், புதுக்கோட்டை திரு. வீ. கே. கஸ்தூரிநாதன்.
பெரம்பலூர் திருமதி செ. வினோதினி,
மதுரை திரு.நெல்லை. ந. சொக்கலிங்கம்,
மயிலாடுதுறை திரு ச. பவுல்ராஜ், விருதுநகர் திரு. அ. சுப்பிரமணியன், விழுப்புரம் பேராசிரியர் ப. வேட்டவராயன் (மறைவு),
வேலூர் திரு. ம. நாராயணன்

ஆகிய 38 தமிழறிஞர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது வழங்கி சிறப்பித்தார்.

திரு. செ. சுகுமாரன்,
திருமதி செ. இராஜேஸ்வரி, முனைவர் மு. வளர்மதி,
முனைவர் இராக. விவேகானந்த கோபால்,
முனைவர் அ.சு. இளங்கோவன், முனைவர் வீ. சந்திரன்,
முனைவர் ரா. ஜமுனா கிருஷ்ணராஜ்,
பேராசிரியர் தமிழ்ச்செல்வி,
திரு. ந. தாஸ் (மறைவு),
முனைவர் மா. சம்பத்குமார்

ஆகிய 10 பேருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் நன்றியுரை பின் வருமாறு…

தமிழக மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்

மதிப்பிற்குரிய தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் அவர்களுக்கும்

மதிப்புமிகு தலைமைச் செயலாளர் அவர்களுக்கும்

உயர்திருதமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் அவர்களுக்கும்

மற்றும் விருதாளர்களுக்கும்
அறிஞர் பெருமக்களுக்கும் சான்றோருக்கும்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக நன்றியினைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நிகழ்வு – 2

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற தென்காசி பெரியவர் திரு. சிவராமன் அவர்களை 21.12.2022 புதன்கிழமையன்று மாலை 3.00 மணியளவில் சென்னையில் உள்ள அவரது உறவினர் (மொழிபெயர்ப்பாளர் இராஜாராமன்) இல்லத்தில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் சந்தித்து பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

நிகழ்வு -3

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் பாலக்காடு தமிழ்ப் பண்பாட்டு மையம் இணைந்து நடத்திய இருமொழிக் கவிஞர் வானவில் கே. இரவியின் படைப்புகள் பற்றிய 101ஆவது தேசியக் கருத்தரங்கம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 21.12.2022 புதன் கிழமை மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

வாழ்த்துரையின்போது,
நாவேந்தர் ஔவை நடராசன் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதி வழங்கிய பின்வரும் நிறைவு வாழ்த்துரையை அவையோரிடம் எடுத்தியம்பினார்.

Sirs,

The cause for the lack of projection the latent genius of Peninsular India particularly of Tamilnadu suffer from is centred in not having been translated in the languages of Europe .

Eurocentrism though fair and just by the norms of Occidental Oriental mutualness , calls for many level translations of the pastmasters.

No doubt the nomination of Vanavil Ravi is well supported by native merit surpassing the global standards.

Two things hinder the classical bent of Tamil genius from accessing consideration ; both of them can be overcome.

One: datedness of the entire oeuvre
Two: affirmation of Contemporary Tamil Classical Universals.

If right recommendations by the Government are made in due time and a careful studied appraisal of the total corpus of Vanavil’s is endorsed by all the universities in India and South East Asia, the nomination would lead to a definite short listing and a prospective wait for the recognition,

I believe the academicians and the even unorthodox geniuses at work may collaborate to highlight this.

Great R. K. Narayan missed much under Eurocentric paradox that searched for his extraordinary Malgudi and called it as Utopian nowhere.

Creativity is subject to such critical halters.

However, I am for such a proposal.

There ate many to be recognised in this manner.

Notwithstanding, it is in the hands of a concerted academic projection by universities in India and South East Asia to make the process really recognition oriented.

Of course, to use keatsian consolation ”

Heard Melodies are Sweet;
those unheard are sweeter!

I recommend the unheard hitherto by the world at large must soon be heard with provisions to overcome both datedness and affirmation of our authentic universals!

I wish a speedy drive to the goal with no further delay.

நிகழ்வு – 4

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் வழங்கும் தீராக் காதல் திருக்குறள் நிகழ்வின் பொருண்மையாக
சுதா சுவர்ணலட்சுமி குழுவினரின் திருக்குறள் நாட்டிய நாடகமான குறள் இனிது நிகழ்ச்சி

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் 21.12.2022 புதன் கிழமையன்று மாலை 7.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின்போது ஐயன் திருவள்ளுவர் திருவள்ளுவர் படத்திற்கு தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் மலர் வணக்கம் செய்தார்.

தினமணி -22.12.2022.
பக்க எண் – 3

வானவில் கே. ரவியின் படைப்புகள்
குறித்த கருத்தரங்கம்

சென்னை, டிச 21: இரு மொழிக் கவிஞர் வானவில் கே. ரவியின் படைப்புகள் குறித்த தேசிய அளவிலான 101-ஆவது கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாலக்காடு தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம் இணைந்து இக்கருத்தரங்கத்தை நடத்தின.

இதில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந. அருள் பேசியதாவது:

வானவில் கே.ரவி, தமிழ், ஆங்கிலத்தில் பல்வேறு கவிதைகள் எழுதியுள்ளார்.

அவரது கவிதைகளின் நயம், சொல் வீச்சு, கற்பனைத் திறன் கொண்டவை. அவர் மனித நேயத்தின் மீது அபரிமிதமான அன்பு கொண்டவர்.

அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.

நிகழ்வுக்கு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன்
தலைமை வகித்தார்

. எழுத்தாளர் சிவசங்கரி வாழ்த்துரை வழங்கினார்.

பாலக்காடு தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் ராஜாராம் அறிமுக உரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில், காரைக்குடி அழகப்பா பல்கலை. முன்னாள் துணை வேந்தர் முனைவர் என். ராஜேந்திரன்,

விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் வா.வே.சு.,

இசைக்கவி ரமணன்,

தொழிலபதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் பேசினர்.

நிகழ்வில், ‘வானவில் வண்ணங்கள்’ என்ற பெயரில் லதாகிருஷ்ணா இயக்கிய கவிஞர் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *