விழி தொட்ட இடமெல்லாம் வெற்றி
தமிழ் நாடு அரசின் செய்தித்துறை இயக்குநர் முனைவர் ஜெயசீலன்
1.10.2022 சனிக்கிழமை அன்று மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை தரமணியில் உள்ள
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்டதோடு கம்பராமாயண ஒலைச்சுவடியிலுள்ளபாடலைப் பிசிறில்லாமல்
படித்து மகிழ்ந்தார்…
பார்வையிடும் போது ஒரு கருத்தை என்னிடம் பதிவு செய்தார்.
தமிழ் நாட்டில் இளங்கலை தமிழ் இலக்கியம்(மூன்று ஆண்டுகள்) படிக்கும் மாணவ மாணவியர் எண்ணிக்கை 28093 என்றும்
முதுகலை(ஈராண்டுகள்) எண்ணிக்கை 4149 என்றும்
முனைவர் ஆய்வு மாணவர்கள் எண்ணிக்கை 291 ஆக உள்ளது…
அது மட்டுமின்றி பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 90% மதிப்பெண் பெற்று தமிழ்ப்பற்றால்,தமிழ் ஆர்வத்தோடு இளங்கலை தமிழ் இலக்கியம் சேரும் மாணவர் எண்ணிக்கை 233 ஆகும் …
பெருந்தகை ஜெயசீலனின் துல்லிய தகவல் திரட்டின் விவரம் கண்டு பெருமிதமடைந்தேன்.

Add a Comment