தினசெய்தி – 12 2 2023
பக்கம் எண் : 4
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 148
வழிகாட்டும் முத்திரைக் குறிப்புகள் !
முனைவர் ஔவை அருள்
தில்லி பல்கலைக்கழகத்தில் ஷேக்ஸ்பியர் ஆய்வு தொடர்பாக தொடர்ந்து யாம் வெளியிட்டுவரும் ஆய்வுச் சுருக்கஉரை பின் வருமாறு:
The Anatomy of this Epiphenomenon
It is worth watching how the love of Shakespeare grew in the individual Tamil as distinct from the manic for the exotic in its evolution through the chain of exercises rather than artistry.
It is good to begin with this question:
was there anything in Pammal that corresponded to the later passion of Tamil
– Shakespeare conjugation.
In retrospect, Prof. Rengasamy had answered the question confidently in the affirmative and built astonishing catalogues of Shakespeare – latry out of the anglophilic possibilities of school and rule besides nursing at the breast of Tamil.
But when the facts here are separated from theory, they become microscopically small.
The flair for English was for sometime a monomania of the Tamil learners.
With the consciousness of the other in Shakespeare, a certain curiosity appeared in the Pammal productions.
This was projected of mingled shyness and attraction from where a wholesome love of Shakespeare in a scholarly vein could proceed later.
The time was one of the sprouting of vegetation.
The Shakespeare troupes were barbarically proud and actors donned the roles and removed the costumes which they had to put on next time with the patience of Sisyphus, Shylock and Hamlet, Cordelia and Desdemona, Portia and Cleopatra, Prospero and Miranda became household name with the cycle of Pammal’s theatrically reproductive power.
Shakespeare in Tamil reached the acme of vitality.
At this point of time Swami Vibulananda’s Matanga Choolamani as a three in one poetics brought out the softened contours of compositions that lured the scholar, the widened lay out that facilitated Shakespeare conception and not just consumption and the filled out breast of classical inherence in the pentad of architectonics nursed the successor.
What caused these? Might be a physical and psychical transformation of Tamil.
Partial de sanskritization led Tamil toward English and the language put on sudden foliage, with a depending of its voice to synthesize the folios of the Bard.
It was an almost secondary attraction bordering on the sexual.
It was a working organic change in the Tamil speaking world with feelings flooding the body and the soul of Tamil Shakespeare scholars.
At the school level curiosity drove the mind Shakespeare ward, but modesty proper to the people held it back.
Translation / adaptation at this period was young enough to appear slightly awkward and Shakespeare blushed in Tamil.
From Suguna Vilas Sabha to Kalanilayam, the long curve was one of quickening.
Spells of introspection moods of brooding and reverie, assault on the universe of Shakespeare alternated. Imagination in theatrics flowered and poetry had its day.
The overflow of love watered the roots of art and Shakespeare devotion.
Tamils imagined Shakespeare.
It was a period of puberty and an epoch of emotion. Actors acted and translators translated.
Their works expanded to fill the molting years. 1870 to 1930 was from experiment to settlement, from assembly to congregation; from spring time of power to seed time of growth from passion to nourishment from Sabha to nilayam.
It was Tamil Shakespeare of the second broke up into unlikeness and united to form the textualized theatre.
Wherein the text like that of Shakespeare original, had in it all that was required to apprehend the poetics and theatrics of Shakespeare.
This new development got established by insinuating itself into the old.
————
சென்னை, தரமணியில் உள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், ‘உரைவேந்தர் ஒளவை துரைசாமி அறக்கட்டளை சொற்பொழிவில் இராமேசுவரம், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராமன், ஒளவை துரைசாமியின் உரைவீச்சு என்ற தலைப்பில் 16.02.2021 அன்று பேசிய உரைக் குறிப்பு
பகுதி – 10
ஒரு பெருங்காப்பியத்தை வாசிக்கும்போது, எவ்வளவு கவனமாக நாம் அதை வாசிக்க வேண்டும் என்பதற்கும் ஒளவையின் உரைக் குறிப்புகளிலிருந்து பல சான்றுகளை நாம் காட்ட முடியும்.
ஒன்றே ஒன்றை மட்டும் இங்குக் காண்போம்.
“மணிமேகலை மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த மகளாயினும்
கண்ணகிபால் சிறந்த அன்பும் தொடர்பும் கொண்டு வளர்ந்திருக்கின்றாள்.
இதனை மாதவி, இவளைப் பற்றிக் கூறும்போது,
“காவலன் பேரூர் (மதுரை) கணையெரியூட்டிய, மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை” என்று கூறுதலால் அறியலாம்.
ஆனால், மணிமேகலை வஞ்சி மாநகர்ச் சென்று கோயில் கொண்டிருந்த கண்ணகியைக் கண்டபோது, அக்கண்ணகிக் கடவுள், கோவலற்குற்ற துன்பத்தை, “எம் இறைக்கு உற்ற இடுக்கண்” என்று சொல்லக் காண்கின்றோமேயன்றி, மணிமேகலையை, என் மகளே என்றோ, என் இறை மகளே என்றோ சொல்லக் காண்கிலோம்” என, மிக நுட்பமாக, மணிமேகலைப் பிரதியை ஒளவை வாசிக்கக் காண்கிறோம்.
மேலும், தான் பெற்ற கல்வியறிவு, தன் சமய நூலறிவு என்ற இரண்டாலும் தன்னையும் தன் மனத்தையும் வேறு வைத்து எண்ணித் தன் மனத்தை அறிவால் அடக்கும் திறன் பெற்றவளாகவும் மணிமேகலையை ஒளவை காண்கிறார்.
கண்ணகியை மட்டுமே போற்றிக் கொண்டாடும் தமிழ் மரபில், மாதவியைப் பற்றிய முழுவதும் நேர்நிலையிலான இந்த அவதானிப்பு, மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது ஒளவையின் சீரிய பெண்ணிலை நோக்கையும் புலப்படுத்துகிறதெனலாம்.
அறிவுத்தரத்தில் ஆண்களுக்குப் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற இக்காலக் கருத்தைப் பழம்பெரும் மணிமேகலைப் பிரதியிலும் ஒளவை கண்டு காட்டியுள்ளது போற்றத்தக்கதாகும்.
“மணிமேகலையின் பழம் பிறப்புணர்வும், எதிர்கால நிகழ்ச்சியுணர்வும் அவட்கு வாராதிருப்பின், அவள் வாழ்க்கையே வேறு வகையில் திரும்பியிருக்கும்.
இவட்கு மணிமேகலா தெய்வமும் தீவதிலகையும் அறவணவடிகளும் கந்திற்பாவையும் கண்ணகிக் கடவுளும் மாசாத்துவானும் பெருங்காவல் செய்வதுபோல இவ்வுணர்வுகளைக் கொளுத்தினமையின், இவள் தன் வாழ்வைத் தூய்மையாக நடத்தி அறப்பயனைப் பெற நேர்ந்தது.
இவளுடைய இயற்கையறிவு யாண்டும் தனித்து நின்று ஒரு நிகழ்ச்சியையும் நிகழ்த்தவில்லை” எனச் சமய அறிவாலும், தான் பெற்ற கல்வி அறிவாலும், தன்னைச் சார்ந்தோரின் அனுபவ அறிவாலும் தன் இயல்புணர்வுகளைக் கடந்து மணிமேகலை பெருந்துறவிப் பண்பேற்றதாகக் கருத்துரைக்கிறார் ஒளவை.
மேலும் அவர், “இந்நூலுட் கூறப்படும் வரலாறும் பிறவமைதிகளும் பொதுவாக வைத்து நோக்கின், இந்நூலாசிரியர் பெண்மையின் அமைதியும் பெண்ணின்பத்தின் சிறுமையும் விளக்கும் கருத்தினராதலைக் காணலாம்” என்றும் கருத்துரைகிறார்.
“பத்தினியுடன் கூடியுறைவோர் கோடற்குரிய வேட்கை, மகப்பேறு கருதியதேயன்றிப் பிறிதில்லை என்பது ஒருசாரார் கருத்து.
அதனை மறுத்து, இந்நூலாசிரியர், பத்தினிக்கூட்டம் அறஞ்செய்தற் பொருட்டேயன்றி மகப்பேற்றின் பொருட்டன்று என்பார்” எனச் சமண, பௌத்தக் கருத்துக்களைத் தழுவியே ஒளவை உரைக் குறிப்பெழுதியுள்ளதும் அறியத்தக்கதாகும்.
மணிமேகலையில் கூறப்படாத அல்லது விளக்கப்படாத சில செய்திகள் பற்றிய கவனத்தையும் தம் உரைக்குறிப்புகளில் ஒளவை பதிவுசெய்துள்ளார்.
“ஆபுத்திரன் மணிபல்லவத்தில் மணிமேகலையால் விடைபெற்றுச் சென்றவன் என்னானான் என்பதும், காஞ்சனன் உதயகுமரனை வாளால் எறிந்த தீவினைப் பயனை இன்னவாறு நுகர்ந்தான் என்பதும் குறிக்கப்படவில்லை.
கண்ணகி மதுரையை எரித்த தீவினைப் பயனை நல்வினைப் பயனின் இறுதியில் நுகர்ந்து முடிவில் “பிறவி நீத்த பெற்றியளாவள்” என்று கூறின இந்நூலாசிரியர், இவர்தம் முடிவுநிலை கூறாமை ஆராய்தற்குரியதாகும்.
இம்முடிவு நிலையேயன்றி, சித்திராபதியின் பிற்கால வாழ்வும் தெரிந்திலது” எனச் சீத்தலை சாத்தனார் மணிமேகலையில் முழுமையின்றிக் கைவிட்டுள்ள இடைவெளிகளையும் சேர்த்தே பிரதியைக் கூர்மையாக வாசிக்கிறார் ஒளவை.
“அறவணவடிகள் மணிமேகலைக்கு அறங்கூறுவதோடு நின்றுவிடுகிறார்.
அவரது முடிவும் தோற்றம்போலத் திடீரென நின்றுவிடுகிறது.
மணிமேகலை, உதயகுமரன் கையிற் சிக்குண்டு தன் தூய்மை கெடாது நீங்கியிருப்பளேல், இக்காப்பிய அமைதி மிக்க இன்பமாய் இருந்திருக்கும்” என்றோர் இலக்கிய விமர்சகராய் நின்று, மணிமேகலைக் காப்பியத்தை மதிப்பிட்டுரைக்கிறார் ஒளவை.
மணிமேகலையில் வடமொழிச் சொற்கள் மட்டுமல்லாமல், இதிகாசப் புராண வரலாறுகள் பலவும் கலந்திருப்பதையும் ஒளவை கவனிக்கத் தவறவில்லை.
இது பற்றி அவர், “இந்நூலுள் வைதீகச் சமயப் புராண வரலாறுகள் பல உவமைகளாகக் காட்டப்படுகின்றன.
இவ்வரலாறுகளின் குறிப்புக்களே காணப்படுதலின், இந்நூலாசிரியர் காலத்தே இவை, மக்களிடையே நன்கு பயின்றமை புலனாகிறது” எனக் கருத்துரைத்துள்ளதும் சிந்திக்கதக்கதாகும்.
இதற்குப் பல எடுத்துக்காட்டுகளையும் தம் உரைக் குறிப்புகளில் ஒளவை தந்துள்ளார்.
முருகன் கவுஞ்ச கிரியை எரிந்த வரலாறு
சங்க காலத்தும், அதனை அடுத்து வந்த சிலப்பதிகாரக் காலத்தும் காணப்படாத சொல் வழக்குகள் பல இந்நூலிற் (மணிமேகலையில்) காணப்படுகின்றன என்ற ஆய்வுக் கருத்தையும் பதிவுசெய்துள்ளார் ஒளவை. ”
ஏது நிகழ்ச்சி, ஆங்கனம், ஈங்கனம், ஆங்கு, ஈங்கு முதலியன மிகுதியும் பயில்கின்றன.
அ, இ என்ற சுட்டிடைச் சொற்கள், அந்த, இந்த எனத் திரிந்து வழங்கும் வழக்குகள்
(இது கம்பர் காலத்துக்குச் சிறிது முன்னர்த்தான் பயிலுவதாயிற்று.
இவ்வழக்கு சங்க நூற்களுள்ளே கிடையாது.
இந்நூலில் இஃது நன்கு வழங்குகிறது).
“முறைமையின் இந்த மூதூரகத்தே (26:63) என்றும், “இந்த ஞாலத்து எவ்வகை அறிவாய்” (27:285) என்றும், “அந்த உதவிக்கு ஆங்கவள் பெயரை” (29:30) என்றும் வருதல் காண்க” என, மணிமேகலையில் பயிலும் பிற்காலச் சொல் வழக்குகளை எடுத்துக்காட்டுகிறார் ஒளவை.
பிற்காலச் சொல் வழக்குகள் மற்றும் வடமொழிச் சொற்கள் எனும் இவை மட்டுமல்லாமல், மணிமேகலைப் பிரதியில் இதிகாசப் புராண வழக்குகள் பல காணப்படுவதையும்கூட ஒளவை எடுத்துக்காட்டுகிறார். ”
இந்நூலுள், வைதீகச் சமயப் புராண வரலாறுகள் பல உவமைகளாகக் காட்டப்படுகின்றன.
இவ்வரலாறுகளின் குறிப்புக்களே காணப்படுதலின், இந்நூலாசிரியர் காலத்தே இவை, மக்களிடையே நன்கு பயின்றிருந்தமை புலனாகிறது” என்கிறார் ஒளவை.
1. முருகன் கிரவுஞ்ச கிரியை எறிந்த வரலாறு
2. திருமால் இராமனாய்த் தோன்றிக் கடலணையிட்ட செய்தி
3. பெருமாள் வாமனனாய்த் தோன்றி மாவலிபால் நிலம் பெற்றது
4. அசுரர் மோகித்து விழுமாறு திருமகள் கொல்லிப்பாவை வடிவு கொண்டு கூத்தாடியது
5. நெடியோன் கண்ணனாய்த் தோன்றி இடையர் சேரியில் விளையாடிய செய்தி
6. இந்திரன் அகலிகைபாற் பெருவேட்கை கொண்ட செய்தி
7. இந்திரன் மகன் சயந்தனை அகத்தியன் சபித்தது
8. அங்கிக் கடவுள் முனிவர் மகளிர்பால் வேட்கையுற்றது
9. காமன் தன் மகன் பொருட்டு வாணன் நகரில் பேடிக் கூத்தாடியது
10. விசுவாமித்திர முனிவன் பசிக்கு நாயூன் தின்றது
என மணிமேகலைப் பிரதியில் இடம்பெறும் பல புராண வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைத்துள்ளார் ஒளவை.
இவற்றுடன் மட்டும் அமைதி காணவில்லை ஒளவை.
முன்பே நாம் குறிப்பிட்டுள்ளதைப்போல, “இதன்கண் மிக்க வடசொற்கள் காணப்படுகின்றன.
சங்க காலத்தும் அதனையடுத்து வந்த சிலப்பதிகாரக் காலத்தும் காணப்படாத சொல் வழக்குகள் இந்நூலிற் காணப்படுகின்றன” என்றுமுரைக்கிறார்.
ஒளவையின் இக்கருத்தின் நீட்சியாய்ப் பெரும் பேராசிரியர் வ.சுப.மாணிக்கமும், மணிமேகலையில் வடமொழிச் சொற்களும் வடமொழிப் பெயர்களும் மிகுதியாகக் கலந்துள்ளதாகவும், வடநாட்டுக் காசியும் தென்னாட்டுக் குமரியும் இடம்பெற்றுள்ளதாகவும்,
“சம்பாபதி, சம்பாதி, சண்பை, சமந்தம், சந்திரதத்தன், சரவணம், சனமித்திரன், சங்க தருமன், சங்கமன், சக்கரவாளக் கோட்டம், சந்திரன், சமயக் கணக்கர், சடை, சம்பு, சரண், சங்கு, சங்கம், சலம், சதுக்கம், சமம், சலாகை, சக்கரக் கை, சந்தி, சமண், சண்பகம், சரணாகதி” போன்ற பல சங்க காலத்தல்லாத சகரமுதற் சொற்களைப் பெருவழக்காகச் சாத்தனார் பயன்படுத்தியுள்ளதாகவும் கருத்துரைத்துள்ளார்.
(வ.சுப.மாணிக்கம் (ப.ஆ.), சிலப்பதிகாரச் சிந்தனைகள், முதல்பதிப்பு:1976, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு).
எனவே, நமது உரைவேந்தர் ஒளவையவர்களின் இவ்வுரைக் குறிப்புகள், வெறும் சொற்பொருள் தெளிவு மற்றும் விளக்கக் குறிப்புகளாக மட்டும் அமையாமல், வ.சுப.மாணிக்கம் போன்ற பின்வந்த புலமையிற் சிறந்த ஆய்வாளர்களுக்கும் வழிகாட்டும் முத்திரைக் குறிப்புகளாயுள்ளன எனலாம்.
வளரும் . . . .
– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Add a Comment