POST: 2023-02-19T09:10:44+05:30

தினசெய்தி – 20 2 2023
பக்கம் எண் : 4

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 149

வரலாற்று நுணுக்கம் !
முனைவர் ஔவை அருள்

தில்லி பல்கலைக்கழகத்தில் ஷேக்ஸ்பியர் ஆய்வு தொடர்பாக தொடர்ந்து யாம் வெளியிட்டுவரும் ஆய்வுச் சுருக்கஉரை பின் வருமாறு:

Swami Vibulananda’s Mathanga Choolamani was a lesson in itself which the Tamil Shakespeare generation learnt when it was gone in the old sense of its existence.

After all, the generative elements in the transitional stages of absorption and reproduction had to be differentiated in order to develop attraction.

Swami Vibulananda’s work, despite its disguise was a clue to composition.

He reduced the great bard and attacked him diminutively to the side of Tamil and created a sperm Shakespeare and gave no forecast of its illustrative potential.

This is a paradigm of the researcher understanding.

Apparently it was a subordination of the imperial English to a point in the actuals sacrifice of the Shakespeare in the act of fertilization. Mother Tamil ate up the oeuvre after such a union.

Examples are numerous but the rating of them is not the concern of this work, for the perspective it holds s indifferent to the discipline of evaluation upon standards of translations theories most of which are continental in nature and therefore do not reflect the truth or carry dialogue between English and Tamil.

A translation comparatist may inferior the trails and errors of the Pammal methods and dismiss them as unspecialized effusions.

Renaissance Tamil Vis-à-vis English thirsted to be made whole.

The Sanskritic check was felt in the recesses of Tamil. Overcome by English and Shakespeare Tamil shook it off and could not contain her new opulence.

T.P. Meenakshi Sundaram and
T.N. Seshachalam found themselves sensitive to a thousand stimuli which Tamil passed unfeelingly before.

They chose the Bard beyond wont.

It was a mate – call.

And translation in the hands of T.N. Seshachalam took on a new tenderness and the aphrodisiac potency of language love created the rhythm and pressure of the dance, the swing and confidence of exercise and the graceful buoyancy of the fluidity of Tamil.

The plays appealed.

MCeaser and Tempest swarmed in the season of love.

The pages of Kalanilayam were printed.

The youth of Tamil spruced up in this time and his characteristic notes added plumage to Translation riotously.

Like the costumes and make up painted and mutilated to catch eye and rouse the sense Translation became an ornament, a suggestion and a stimulant.

From the case study of Mathange Choolamani to the case study of T.N. Seshachalam’s Julius Ceaser the curve of the phenomenon was unbroke and was provocative of Shakespeare love.

Thus the Venus of start ford Avon could make an Adonis of Tamil.

From the spirit in Mathanga Choolamani came the poetry in T.N. Seshachalam’s from the passion of Swami Vibulananda viable for perpetuation of classical inherence came the loyalty of T.N. Seshachalam’s to Shakespeare, from Tamils coquettes seribendi came its devotion to the great playwright from the caliban theatrics of Pammal came at last our adoration Prospero.

This is the gamut of Home Shakespeare.

It was true that the pre Pammal period had known very little of Shakespeare i.e., they hardly had a word for him; when they confronted what they were actuated by nothing more akin to romance with Shakespeare than a desire for English and regular engagement with it. Even in Pammal’s presentation, Shakespeare was celebrated by performers, as unconcernedly as possible affection was altogether out of question.

They were the Tamil troubadours of Shakespeare’s.

But the spiritual development (of the Tamil spirit) was part of the reproductive impulse.

The early adapters knew romance with Shakespeare but in their own inverted way. Tamil was a cistern to collect whatever they could decant and shake as tables; it was almost culinary saucy, gravy and never a distillation.

The exaltation of Tamil purism which started roughly during Swami Vibulananda’s life, to the Shakespearean poetics the charm of the inaccessible and helped to mature the poetry of translation art.

After all in true love, the soul it is that embraces the body the Tamils found it in T.N. Seshachalam’s works that embraced Shakespeare.

The cautious poetics of Swami Vibulananda with all its symbolic import and input postponed the mate call of translator and left his mind with unfulfilled longing.

Therefore for T.N. Seshachalam, the beauty of Shakespeare was ultimately, intimately in the strength of the Tamil’s desire; which was weakened by fulfillment but made richer by denial T.N. Seshachalam was very careful as not to have translated the great Elizabethan import directly except through his notes.

With poetic repression at its height the prose of T.N. Seshachalam tempered his love and commitment to the original into a masked poetry of its own.

Any pre Pammal, semi Pammal effort is little more than an atavism originally normal and useful but then improved upon and surpassed.

Against the acquisitive advance of English one finds the seductive retreat of Tamil.

There are exceptions here.

The translation of Aru. Somasundaram are a case in point and so are those of S. Maharajan.

These are quite unhesitating in combat.

If the Tamil ever chose prose for Shakespeare Translation, it was for achieving mastery.

They warred with the form to war with love.

They fought with their syntax rather than with their patriotism, the claws were hidden behind the courtesies of language.

This is true of English loving Tamil scholars.

The Tamil loving English scholars, with the modesty a form of strategic retreat, allowed celluloidal transformations.

A generous Tamil could have bred contempt; and the native Tamil’s sense of ownership led him to enforce modesty on Tamil.

“The entire world is ours, All men are my Kinsmen”, is no sanction for the English rule.

As if precocious the rule departed and the school persisted and persists till date.

Shakespeare reserve in display and economy in transaction are better weapons in the hunt, when the languages courted through their people, the estoric anatomy was taught and attention was aroused. ANBU and VEDALA ULAGAM are instances of intentions seldom moved.

However the Shakespeare – love completes itself in production, closing the circuit of desire with a translation and with it, the love of the Tamils for Shakespeare is renewed but is strangely different from the flame that burned before.

When one reads T.N. Seshachalam, a Tamil especially, one tends to forget the original Shakespeare in his new devotion.

Did not our professors once say; “He whom Shakespeare touches not walks in darkness: like Santayana, one may exclaim profoundly, that everything natural has an ideal development.

Love of Shakespeare, thus continues to warm the heart of the Tamils despite rule and school, with unspeakable solace, even more when he gets translated and given them when gets received and possessed as such.
————
சென்னை, தரமணியில் உள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், ‘உரைவேந்தர் ஒளவை துரைசாமி அறக்கட்டளை சொற்பொழிவில் இராமேசுவரம், பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராமன், ஒளவை துரைசாமியின் உரைவீச்சு என்ற தலைப்பில் 16.02.2021 அன்று பேசிய உரைக் குறிப்பு

பகுதி – 11

சைவ இலக்கியங்களுள், கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை தோன்றியவற்றின் வரலாற்றைச் “சைவ இலக்கிய வரலாறு” என்ற தலைப்பில் ஒளவையவர்கள் தொகுத்தெழுதியுள்ளார்கள்.

இது ஒரு மிக முக்கியமான நூலாகும்.

இத்தலைப்பில், இது ஒரு முன்னோடி முதல் நூலாகக் கொள்ளத்தக்கதாகும்.

“சிவநெறியாகிய சிவ வழிபாட்டுச் சமயம் தென்னாட்டுக்குச் சிறப்பாக உரியதாதல் தெளியப்படும்.

முழுமுதற் கடவுளாகிய சிவத்தைச் சைவனென்றும் வழங்குவதுண்டு.

அதனால் சிவநெறி சைவமென்று வழங்குவதாயிற்று.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டினதெனப்படும் சிலப்பதிகாரத்தை அடுத்து நிற்கும் மணிமேகலை சைவ சமயத்தைக் குறித்துரைக்கின்றது.

இது கொண்டு சைவ சமயம் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலத் தொடக்கத்தே தென்னாட்டில் நிலவியிருந்த தொன்மைச் சமயமென்றும், அடுத்து வந்த புத்த சமண சமய காலங்களிலும் இது நாட்டு மக்களால் மேற்கொள்ளப்பட்டிருந்ததென்றும் நாட்டு வரலாறு நன்கு கூறுகின்றது” என்கிறார் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளையவர்கள்.

சங்க காலத்தில் செழுமையுற்றிருந்த தமிழ், பல்லவர் காலத்தில் படிப்படியாகச் செல்வாக்கிழந்தது மட்டுமல்லாமல், வடமொழிக்கே அரச ஆதரவு என்ற நிலையால் தன் வலியழிந்தது என்கிறார் ஒளவை.

இதனைப் பின்வரும் அவர் சொற்கள், தெளிவாக விளக்கக் காண்கிறோம்.

“சங்ககாலத்தில் வேந்தர்களாலும் செல்வர்களாலும் பெரிதும் பேணப் பெற்று வந்த தமிழ், இடையே வந்த களப்பிரர், சளுக்கர், இரட்டர், பல்லவர் முதலியோரால் பேணற்பாடு இழந்துபோகவே, அவர்வழி நின்ற தமிழ்ச் செல்வரும் பிறரும், தம்முடைய உரிமைத் தமிழை வளம்படச் செய்யும் துறையில் கருத்தூன்றாராயினர்.

அரசியல் தமிழிலே நடைபெற்றதெனினும், எழுத்து முறையில் தமிழ் வழியிழந்து நிற்பதாயிற்று.

சமயத் துறையில் வடமொழியிற் காணப்படும் வேதங்களும் ஆறங்கங்களும், சுருதிமிருதிகளும், புராண இதிகாசங்களும், வடமொழியிலே நிலவின.

புறச் சமயத்தவராய் வந்த பௌத்த சமணச் சான்றோர்களும், செல்வாக்குடைய வடமொழியிலும் பிற மொழிகளிலுமே தம்முடைய அறிவுப் பணி புரிந்தனர்.

செல்வ நிலையங்களாகிய கோயில்களிலும் மடங்களிலும் தமிழ் இலக்கியங்கள் நிலவுதற்கு இடமில்லையாயிற்று.

தமிழ் நாட்டில், தமிழ் மக்கட்கு, அரசியல் நீதி முறைகளையும், சமய நூல் வகைகளையும் இனிதெடுத்துரைக்கும் தமிழ் நூல்கள் அருகின;

இயற்றமிழ் என்ற தமிழ்த் துறை பல்லவர் காலத்தே போதிய ஆதரவு குன்றியது என்பது தெளியவுணர வேண்டியதொன்றாகும்.

இதுதான் சைவ இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த செந்தமிழ் நிலை. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர் தோன்றிய காலத்துச் சைவ இலக்கிய நிலையுமாம்” எனச் சங்க காலத்திற்குப் பிந்தைய தமிழின் நிலையைத் தொகுத்துரைக்கிறார் ஒளவை.

கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி. பத்தாம் நூற்றாண்டு முடியவுள்ள மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த 14 சைவ நாயன்மார்கள் பற்றிய ஆய்வைத் தம் ‘சைவ இலக்கிய வரலாறு’ நூலில், ஔவையவர்கள் நிகழ்த்தியுள்ளார்.

இது பற்றி, இனி விரிவாகக் காண முனைவோம்.
வளரும் . . . .
– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *