POST: 2023-04-07T10:52:25+05:30

தினமலர் – 5 4 2023

பெயர் பலகைகளில் 6 மாதங்களில் தமிழ்
சென்னை, ஏப். 5 –

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில், ஆறு மாதங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க நடவடிக்கை எடுப்பதாக, தமிழக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா உறுதி அளித்துள்ளார்.

சென்னையில், நேற்று முன்தினம், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் செல்வராஜ், தமிழக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவை அழைத்து, தமிழில் பெயர்ப் பலகை வைப்பது குறித்து விசாரித்தார்.

இதுகுறித்து, விக்கிரமராஜா கூறியதாவது :

தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்பது, ஏற்கனவே உள்ள சட்டம் தான்.

ஆனால், அரசு, வணிக உரிமத்துக்கான படிவத்தில் இதைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழில் பெயர்ப்பலகை வைத்தால் தான் உரிமம் வழங்கப்படும் என்பதை, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள், புதிய வணிகர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

அரசாணைகள், சுற்றறிக்கைகளை தமிழில் வழங்க வேண்டும். என வலியுறுத்தினோம்.

பிற மொழிகளில் உள்ள பெயர்ப் பலகைகளை மாற்ற ஆறு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளோம்.

இதற்காக மாவட்ட வாரியாக, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன் – 4 4 2023
பக்கம் எண் : 2

‘ தமிழ் பெயர்ப்பலகை வைக்க ஒத்துழைப்பு ’

வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழ் பெயர் பலகைகளை முறையாக வைக்க முழு ஒத்துழைப்பு வழங்குவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உறுதியளித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் செல்வராஜனை தலைமை செயலகத்தில் நேற்று விக்கிரமராஜா சந்தித்தார். ‘

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றில் தமிழ் பெயர் பலகைகளை முறையாக வைக்க முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்’ என அப்போது அவர் உறுதியளித்தார்.

தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவ்வை அருள் உடனிருந்தார்.

தினசெய்தி – 4 4 2023
பக்கம் எண் : 7

தமிழ்நாட்டில் கடைகளின் பெயர்களை தமிழில் எழுதுவோம் !

தமிழ்நாடு அரசுக்கு விக்கிரமராஜா உறுதி

சென்னை ஏப் 4-

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளை நினைவு கூரும் வகையில் தமிழ்வளர்ச்சித்துறை வாயிலாக ஆட்சிமொழிச் சட்டவாரம் என்கிற நிகழ்வு ஒருவார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்கள் கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பெறுகிறது

. மேலும், வணிக நிறுவனங்கள் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் வணிக அமைப்பு நிருவாகிகளுடன் பெயர்ப் பலகைகள் தமிழில்
வைக்கப்படுதல் குறித்துக் கலந்துரையாடல் கூட்டமும் நடத்தப்பெறுகிறது.

அவ்வகையில், சென்னையில் 21.02.2023 அன்று நடத்தப்பெற்ற ஆட்சி மொழிச் சட்ட வார நிகழ்வில் சென்னை மாவட்ட ஆட்சியர், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆகியோர் கொடி அசைத்து விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி 27.02.2023 வைத்தனர்.

தமிழ் வளர்ச்சி இயக்குநர் தலைமையில் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது தொடர்பாக வணிக நிறுவன உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

மாநிலப் பொருளாளர் மீ. சதக்கத்துல்லா, மாநில
தலைமை செயலாளர் பேராசிரியர் ரா. ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் வே.பா. மணி, மாநில செய்தி
தொடர்பாளர், ப. பாண்டியராஜன், சென்னை மண்டலத் தலைவர்,. கி. ஜோதிலிங்கம்,தென்சென்னை கிழக்கு
மாவட்டத் தலைவர், து.மோகன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் . செ.சாமூவேல், வடசென்னை மேற்கு
மாவட்டத் தலைவர். ஜெயபால், வடசென்னை வடக்கு மாவட்டத் தலைவர் . த.ராமச்சந்திரன், வடசென்னை
கிழக்கு மாவட்டத் தலைவர். பொ. ஆதிகுருசாமி,தென்சென்னை வடக்கு மாவட்டத் தலைவர் . யே.எட்வர்ட், தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், சென்னை மாநகர பழையபொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் இ. ஜெயக்குமார் மற்றும் 100 க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தமிழில் பெயர்ப்பலகை வைப்பது தொடர்பான வாசகங்கள்
அடங்கிய பதாகைகள் ஏந்தி தமிழில் பெயர்ப்பலகை வைப்பதாக உறுதியளித்தனர்.

விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடித்த ஒட்டிவில்லைகளும், துண்டுச் சீட்டுகளும் வணிகர்களுக்கு வழங்கப்
பட்டன.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக நேற்று (03.04.2023) வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் . ஏ.எம். விக்கிரமராஜா, மணி ஆகியோர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு. இரா. செல்வராஜை சந்தித்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வணிக நிறுவனங்கள் / கடைகள் ஆகிய
வற்றில் தமிழ்ப் பெயர்களை முறையாக வைத்திட முழு ஒத்துழைப்பும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஒளவை அருள் உடன் கலந்து கொண்டார்.

செய்திக் குறிப்பு

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளை நினைவு கூரும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ஆட்சிமொழிச் சட்ட வாரம் என்கிற நிகழ்வு ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்கள்/கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பெறுகிறது.

மேலும், வணிக நிறுவனங்கள்/ கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் வணிக அமைப்பு நிருவாகிகளுடன் பெயர்ப் பலகைகள் தமிழில் வைக்கப்படுதல் குறித்துக் கலந்துரையாடல் கூட்டமும் நடத்தப்பெறுகிறது.

அவ்வகையில், சென்னையில் 21.02.2023 அன்று நடத்தப்பெற்ற ஆட்சி மொழிச் சட்ட வார நிகழ்வில் சென்னை மாவட்ட ஆட்சியர்,
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஆகியோர் கொடி அசைத்து விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தனர்.

27.02.2023 அன்று தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவர்களின் தலைமையில் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது தொடர்பாக வணிக நிறுவன உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

மாநிலப் பொருளாளர்
திரு. மீ. சதக்கத்துல்லா,
மாநில தலைமை செயலாளர் பேராசிரியர் ரா. ராஜ்குமார்,
மாநில கூடுதல் செயலாளர் திரு. வே.பா. மணி,
மாநில செய்தி தொடர்பாளர், திரு. ப. பாண்டியராஜன்,
சென்னை மண்டலத் தலைவர், திரு. கி. ஜோதிலிங்கம்,
தென்சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர், திரு. து. மோகன்,
மத்திய சென்னை மாவட்டத் தலைவர் திரு. செ.சாமூவேல், வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயபால், வடசென்னை வடக்கு மாவட்டத் தலைவர் திரு. த. ராமச்சந்திரன், வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. பொ. ஆதிகுருசாமி, தென்சென்னை வடக்கு மாவட்டத் தலைவர் திரு. யே. எட்வர்ட், தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் திரு. பன்னீர்செல்வம், சென்னை மாநகர பழையபொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. இ. ஜெயக்குமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தமிழில் பெயர்ப்பலகை வைப்பது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி தமிழில் பெயர்ப்பலகை வைப்பதாக உறுதியளித்தனர்.

விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடித்த ஒட்டிவில்லைகளும், துண்டுச் சீட்டுகளும் வணிகர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக இன்று (03.04.2023) வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் திரு. ஏ.எம். விக்கிரமராஜா அவர்களும் திரு. மணி அவர்களும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு. இரா. செல்வராஜ் அவர்களை சந்தித்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வணிக நிறுவனங்கள்/கடைகள் ஆகியவற்றில் தமிழ்ப் பெயர்களை முறையாக வைத்திட முழு ஒத்துழைப்பும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஔவை அருள் அவர்கள் உடன் கலந்து கொண்டார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *