அழியாத கோலம்
அண்ணாநகர் தாரகை இல்லத்தின் வாயிற்படியில் நாள்தோறும் கோலம் வரைய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டியவர்கள் என் அம்மா.
பல நேரங்களில் அம்முயற்சி நடைபெறாமலேயே நின்றுவிடும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு என் நெருங்கிய நண்பர் வாயிலாக வண்ணக் கோலங்களை வரைவதில் வல்லுனரான திருமதி கோகிலா எங்கள் அண்ணாநகர் தாரகை இல்ல முகப்பில்,தெருவில் நடப்போர் அனைவரின் பார்வையையும் திரும்பும்படி மாபெரும் வண்ணக் கோலத்தினை வரைந்து காட்டி என் அம்மாவின் நீண்ட நாள் விழைவினை நிறைவேற்றினார்.
அம்மா மறைந்த பிறகு ஒரு சில தருணங்களில் அப்பா மங்கலாகக் கோலம் இருப்பதைச் சுட்டிக்காட்டி மீண்டும் வரைவதற்கு கோகிலாவை அழைக்கச் சொன்னார்.
காலத்தின் அவலம் கோகிலாவும் மறைந்து விட்டார்.
கடந்த நவம்பர் திங்கள் 21ஆம் நாள் எந்தையாரும் மறைந்த பிறகு அண்மையில் ஓரிரு ஆடவர்கள் இணைந்து கோகிலா செய்த அரிய பணியை மீளச் செய்து என்னை நெகிழ வைத்தனர்.

Add a Comment